புதிய ஒப்பந்தத்தை வழங்கக்  கோரி பிரித்தானிய மக்களின் போராட்டம் செய்திகள் செயற்பாடுகள் பிரித்தானியா 

புதிய ஒப்பந்தத்தை வழங்கக் கோரி பிரித்தானிய மக்களின் போராட்டம்

173 . Views .பிரித்தானியாவின் உழைக்கும் மக்கள் கலந்துகொண்ட மாபெரும் பேரணி ஒன்று நேற்று இடம்பெற்றது. TUC அமைப்பினர் ஒழுங்கு செய்திருந்த இப்ப்போரட்டத்தில் UNISAN (யு னிசன்), UNITE(யுனைட்), சோசலிசக்கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டன. தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினரும் இப்பேரணியில் கலந்து கொண்டு  தமது ஆதரவை வழங்கியிருந்தனர். பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் 5.5 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை கொண்ட TUC அமைப்பானது தொழிலாளர்களுக்கு “புதிய தொழில் ஒப்பந்தத்தை வழங்க வேண்டும்”  என்ற பிரதான கோரிக்கையை முன்வைத்து  நேற்றைய போராட்டத்தை ஒழுங்கு செய்திருந்தமை... Read More
ஈரானிய மக்கள் போராட்டத்தின் பின்னணி கஜமுகன் கட்டுரைகள் 

ஈரானிய மக்கள் போராட்டத்தின் பின்னணி

170 . Views .கடந்த டிசம்பர் மாதம் ஈரானிய ஜனாதிபதி வெளியிட்ட 2018 க்கான பட்ஜெட் அறிவிப்பதைத் தொடர்ந்து, டிசம்பர் 28 முதல் மக்கள் வீதிகளில் போராட்டத்தில் இறங்கினர். ஈரானின் வடகிழக்கில் அமைந்துள்ள , அதிகளவான மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நகராமான மஷ்ஹாத்தில்தான் முதலில் போராட்டம் தொடங்கியது. பின்னர் படிப்படியாக வளர்ந்து எண்பதுக்கும் மேற்பட்ட நகரங்களில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இந்த போரட்டங்களுக்கு எதிராக நடந்த அரச வன்முறையில் இதுவரை 25 பேர் வரைக்கும் இறந்துள்ளனர். மேலும், 3200 ற்கும் மேற்பட்ட மக்கள்... Read More
காவேரி நீருக்கான  போராட்டமும் அதன் பின்னணியிலான அரசியலும் கட்டுரைகள் சத்யா ராஜன் 

காவேரி நீருக்கான போராட்டமும் அதன் பின்னணியிலான அரசியலும்

131 . Views .உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பில், மத்திய அரசு 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் எனச் சொல்கிறது. மத்திய அரசைச் சேர்ந்த, நிதின் கட்காரி போன்றவர்கள் அதுகுறித்து பேட்டி அளிக்கும்போதெல்லாம்- அதை அமைக்க வாய்ப்பில்லை என்றோ, உச்சநீதிமன்றம் சொல்லியுள்ள கால அளவிற்குள் அமைக்க வாய்ப்பில்லை என்றோ கூறுகிறார்கள். எப்படியும் மத்திய அரசு அத்தகைய மேலாண்மை வாரியத்தை அமைக்காது என்பது பலருக்கும் தெரியும். ஆளும் அதிமுக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என திமுக தலைமையில் பல எதிர்கட்சிகள் கோரிக்கை... Read More
முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலின் அரசியற் பின்னணி கஜமுகன் கட்டுரைகள் 

முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலின் அரசியற் பின்னணி

147 . Views .கடந்த மார்ச் மாதம் முதலாம் வாரத்தில் வாகன விபத்து தொடர்பாக சிங்கள வாகன சாரதிக்கும் முஸ்லிம் இளைஞர்களுக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தாக்கபட்ட சாரதி சில நாட்களின் பின்னர் இறந்து போனமையால், துவேச குழுக்கள் மற்றும் பெளத்த  இனவாத கும்பல்கள் முஸ்லிம் மக்களை தாக்கியதுடன் அவர்களின் சொத்துக்களை நாசம் செய்துள்ளனர். 2014 இல் களுத்துறை மாவட்டத்தில் இடம்பெற்ற கலவரத்தின் பின்னர் முஸ்லிம் மக்களிற்கு எதிராக நடாத்தப்பட்ட மிகப் பெரும் இனக்கலவரம் இதுவாகும். கண்டி முஸ்லிம் மக்களின் மீதான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதன்... Read More
ஐ. நா எனும் வருடாந்திர படையெடுப்பு கட்டுரைகள் சத்யா ராஜன் 

ஐ. நா எனும் வருடாந்திர படையெடுப்பு

226 . Views .ஐ. நா மூலம் தமிழ் ஈழம் மற்றும் ஜனநாயக உரிமைகளை பெற்று விடலாம் என மக்களுக்கு நம்பிக்கை ஊட்டப்படுவது தொடங்கி  ஒன்பது வருடங்கள் முடிவடைகிறது. ஆனால் எதுவும் நடந்தபாடில்லை. நடந்து முடிந்த 37வது ஐக்கிய நாட்டின் அமர்வு கூட்டத்தில் ஐ. நா வின் விம்பம் மேலும் உடைந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு ஏதோ ஒரு முறையில் தாம் விசாரணை நடத்த இருப்பதாக இலங்கை அரசு பாசாங்கு காட்ட அதை ஒரு காரணமாக காட்டி அவர்கள் தப்பிச் செல்ல விடப்பட்டனர். தீர்மானம்(30/1)... Read More
சிரியா மீதான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்திகள் செயற்பாடுகள் 

சிரியா மீதான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

312 . Views .சிரியாவின் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து, பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்திற்கு முன்னால் நேற்று (20.03.2018) ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அகதிகள் உரிமைக்கான அமைப்பு ஒழுங்கு செய்திருந்த இவ்வார்ப்பாட்டத்திற்கு சோஷலிசக் கட்சி மற்றும் தமிழ் சொலிடரிட்டி உறுப்பினர்களும் கலந்து கொண்டு  தமது ஆதரவை வழங்கி இருந்தனர். சிரியாவின் மீது குண்டு போடுவதை நிறுத்த வேண்டும், யுத்தவெறியர்களை சிரியாவில் இருந்து விரட்ட வேண்டும், கல்விக்கும் மருத்துவத்திற்கும் செலவு செய், யுத்தத்திற்கு செலவு செய்யாதே போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாலை... Read More
இனத்துவேசதுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் செய்திகள் செயற்பாடுகள் 

இனத்துவேசதுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்

202 . Views .நேற்றைய தினம் சனிக்கிழமை (17.03.2018) இனத்துவேசதுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. பிரித்தானியாவிலுள்ள சோசலிசக் கட்சி, தமிழ் சொலிடரிட்டி, அகதிகள் உரிமைக்கான அமைப்பு, உள்ளிட்ட பல்வேறு இடதுசாரிய அமைப்புகளும், யுனைட்(Unite), யுனிசன்( Unison) உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களும் இதில் கலந்து கொண்டன. லண்டனில் உள்ள போர்ட்லாந்து வீதியில் (Portland Street) ஆரம்பமான இப்பேரணி இறுதியில் டவுனிங் வீதியில் (Downing Street) நிறைவடைந்தது. நேற்றைய காலநிலை கடுங்குளிரும் ,பனிப்பொழிவுமாக இருந்த போதிலும், அதனையும் பொருட்படுத்தாது பல்லாயிரக்கணக்கான மக்கள் இபோரட்டத்தில் கலந்து... Read More
“எங்களைக் கொல்வது உங்களின் மௌனம்தான்” சர்வதேசம் செய்திகள் செயற்பாடுகள் 

“எங்களைக் கொல்வது உங்களின் மௌனம்தான்”

345 . Views .– கிரிஷாந்த் பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தங்கள் என்ற போர்வையில் உலகம் முழுவதிலும் வன்முறைகளையும் படுகொலைகளையும் கட்டவிழ்த்துள்ள அரசுகளிற்கெதிரான குரல் என்பது உலக மன சாட்சியின் குரல். அப்படியொன்று இருக்கிறதா என்றால்? ஓம். அது எங்களையும் சேர்த்த குரல்தான். அது சாதாரண மக்களின் குரல். அறத்தின் குரல். சிரியாவின், கிழக்கு கூட்டா (Ghouto) பகுதியில் உதவிப் பொருட்கள் வழங்கவும் மருத்துவ ரீதியான தேவை உடையவர்களை வெளியேற்றவும் 30 நாட்கள் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தும் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதலும் தரை வழித்தாக்குதலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கில்... Read More
வோல்தம் போறேஸ்ட் பகுதியில் மக்கள் போராட்டம் செய்திகள் செயற்பாடுகள் 

வோல்தம் போறேஸ்ட் பகுதியில் மக்கள் போராட்டம்

281 . Views .நேற்று பிரித்தானியாவின் வோல்தம் போறேஸ்ட் (Waltham Forest) பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தமிழ் சொலிடரிட்டி, சோஷலிச கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் இதில் கலந்து கொண்டன. அப்பகுதியில் வாழும் பல நூற்றுக்கனக்கான மக்கள் இதில் பங்குபற்றியிருந்தனர். வோல்தம் போறேஸ்ட் பகுதியில் உள்ள மக்களுக்கு சொந்தமான பொது நிலமானது பல அடுக்கு மாடிக்குடியிருப்புகளை கட்டும் நோக்குடன் தனியார் கம்பனி ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தனியார் வீட்டுத்திட்டத்தைக் கண்டித்தே இப் போராட்டமானது ஒழுங்கு இடம்பெற்றது. இங்கு அமைக்கப்படும் வீடு ஒன்றினை  வாங்குவதற்கு குறைந்த... Read More
இலங்கை அரசு யுத்தக் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது- தமிழ் சொலிடாரிட்டி குற்றச்சாட்டு. அறிவிப்பு செய்திகள் செயற்பாடுகள் பிரித்தானியா 

இலங்கை அரசு யுத்தக் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது- தமிழ் சொலிடாரிட்டி குற்றச்சாட்டு.

786 . Views .இலங்கையின் 70வது சுதந்திரத் தினத்தன்று லண்டனில் இலங்கை தூதரகத்துக்கு முன் எதிர்ப்புக் காட்ட குவிந்து நின்றவர்களின் கழுத்தை வெட்டுவேன் என சைகை காட்டிய பிரிகேடியர் பிரியங்கார பெர்னாண்டோ நாட்டுக்கு திருப்பி அழைக்கப் பட்டிருக்கிறார். இருப்பினும் அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பதை அரச தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போதைய இலங்கை அரசு யுத்தக் குற்றவாளிகளைக் காப்பாற்றும் அரசு என்ற குற்றச்சாட்டை வைத்திருக்கிறது லண்டன் போராட்டத்தை ஒழுங்கமைத்த தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு. தமிழ் சொலிடாரிட்டியின் ஊடக அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் விபரங்கள்... Read More
இராணுவ அதிகாரி பிரியங்கா பெர்னாண்டோக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்திகள் செயற்பாடுகள் பிரித்தானியா 

இராணுவ அதிகாரி பிரியங்கா பெர்னாண்டோக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

282 . Views .கடந்த பெப்ரவரி நான்காம் திகதி இலங்கையின் எழுபதாவது சுதந்திர தினத்தை புறக்கணிக்கும் முகமாக லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் யாருக்காக இந்த சுதந்திரம் என்ற தொனிப் பொருளில் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பானது ஆர்பாட்டம் ஒன்றை நிகழ்த்தியிருந்தது. அதன்போது இராணுவ அதிகாரி பிரியங்கா பெர்னாண்டோ கழுத்தை வெட்டுவேன் என்று விரல் மூலம் சைகை செய்து அமைதியாக போராட்டம் செய்த மக்களை அச்சுறுத்தினார். நல்லிணக்கம் என்ற பெயரில் நல்லாட்சி செய்யும், பெளத்த சிங்கள பேரினவாதத்தின் உண்மையான இரட்டை முகத்தினையே மேற்படி சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது.... Read More
எமது அரசியல் , அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க நாமே போராடுவோம். செய்திகள் செயற்பாடுகள் பிரித்தானியா 

எமது அரசியல் , அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க நாமே போராடுவோம்.

136 . Views .4ஆம் திகதி சுதந்திர தினம் அன்று இலங்கை தூதரகம் முன்னால் தமிழ் சொலிடாரிட்டி நடாத்திய ஆர்ப்பாட்டதில் பங்குபற்றியவர்களை நோக்கி கழுத்தை வெட்டுவேன் என்று சைகை காட்டினார் இலங்கை இராணுவ உயர் அதிகாரி. கழுத்து வெட்டுவது அவர்களுக்கு ஒன்றும் புதிய  விடயமல்ல. இலங்கை இராணுவமும் , சிங்கள பௌத்த பேரினவாத அரசும்  மக்கள் . போராளிகள் , செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலரின் கழுத்துக்களை வெட்டி பரீட்சையமானவர்கள் தான். நல்லிணக்க , நல்லாட்சி என்று கூறி கொண்டு லண்டனில் வைத்தே  போராடிய... Read More
இது அஞ்சலி அல்ல கட்டுரைகள் சேனன் பார்வை 

இது அஞ்சலி அல்ல

230 . Views .இது அஞ்சலி அல்ல. அதை எழுத எனக்கு அருகதை இல்லை. அஞ்சலிகள் எழுதுவதுமில்லை. கால தூரத்தில் தொங்கி மறைந்த நினைவுத் துகள் ஓன்று ஒரு மரணத்தில் தூசி தட்டி கிளம்பியதன் விளைவு இது. கவிஞர் செழியன் இறந்து போனார் என்றது அறிந்ததும்…ஆ.. இலக்கியத்துக்கு இன்னுமொரு இறப்பும் இழப்பும் என எண்ணத் தோன்றியதே தவிர வேறு எந்த எண்ணமும் தோன்றவில்லை. ஆனால் சில பதிவுகள் அவசியம் – எழுதித்தான் ஆகவேண்டும். என் போன்றவர்களுக்கு சேரனுக்கு முதல் செழியனைத் தெரியும். கவிதைக்கு முன்... Read More
சிறிலங்காவின் 70ஆவது சுதந்திர தினத்தை எதிர்த்து பிரித்தானியாவில் போராட்டம் செய்திகள் செயற்பாடுகள் பிரித்தானியா 

சிறிலங்காவின் 70ஆவது சுதந்திர தினத்தை எதிர்த்து பிரித்தானியாவில் போராட்டம்

399 . Views .இலங்கை தனது 70ஆவது சுதந்திர தினத்தை பெப்ரவரி 4ஆம் திகதி கொண்டாடியது. இதனை கொண்டாடும் விதமாக பிரித்தனியாவின் லண்டன் நகரில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தினால் அனைத்து இலங்கை மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதே நேரம் , அதே இடத்தில்  சுதந்திரம் யாருக்கானது என்ற தொனி பொருளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்பட்டிருந்தது. தமிழ் சொலிடாரிட்டி , தமிழர் ஒருங்கிணைப்பு குழு , நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பன ஒன்றிணைந்து இந்த போராட்டதிற்கான அழைப்பை விடுத்திருந்தன.   காணாமல் ஆக்கப்பட்டோர்... Read More
சிம்பாப்வே ஆட்சி மாற்றத்தின் பின்னணி அரசியல் கஜமுகன் கட்டுரைகள் சர்வதேசம் 

சிம்பாப்வே ஆட்சி மாற்றத்தின் பின்னணி அரசியல்

149 . Views .ரொபேர்ட் முகாபே சிம்பாப்வே நாட்டின் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் 37 வருட முகாபேயின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. சிம்பாப்வேயின் ஆளுங்கட்சியான சானு பிஎப் (Zanu – PF) கட்சியின் தலைமைப்  பதவியைக் கைப்பற்றிப் பின்னர் தற்பொழுது சிம்பாப்வேயின் இரண்டாவது ஜனாதிபதியாகியிருக்கும் எமர்சன் மனாங்கக்வா ஆட்சிக்கு வந்துள்ளமையால் இனி சிம்பாப்வேயில் ஜனாநாயகம் மலர்ந்துவிடும் என்பதுபோல் சில மேற்கத்தைய ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றன. உண்மை நிலைமை அதுவல்ல ஏனெனில் இதுவரை காலமும் முகாபேயின் வலதுகரமாக செயற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்களையும், தொழிலாளர்களையும்... Read More
2017- இலங்கை நிலவரம் -கவனத்துகான சில புள்ளிகள் ஈழம் - இலங்கை கட்டுரைகள் சேனன் 

2017- இலங்கை நிலவரம் -கவனத்துகான சில புள்ளிகள்

148 . Views . இலங்கைக்குள் வாழும் ஒடுக்கப்படும் மக்கள் – மற்றும் தமிழ் பேசும் மக்கள் சமீப கால கட்டத்தில் பல கடும் அதிர்சிகளைச் சந்தித்துள்ளார்கள். 2009ல் படுகொலையுடன் முடிந்த யுத்தம் ஒரு பெரும் அதிர்ச்சியாக தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இன்றும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இன்னிகழ்வு தெற்கில் இனவாத சக்திகளுக்கு குறிப்பிடத்தக்க பலத்தை வழங்கும் நிகழ்வாக மாறியதற்கு அபோதைய மகிந்த அரசு வழங்கிய அதிகார பூர்வ அங்கீகாரம் முக்கிய காரணம். மகிந்த அதிகாரத்தின் நிழலில் மேலதிக பலமடைந்த சிங்கள பௌத்த... Read More
செய்குறி பிழைத்த ஊடலும் கூடலும் ஈழம் - இலங்கை கட்டுரைகள் சேனன் 

செய்குறி பிழைத்த ஊடலும் கூடலும்

101 . Views .கூட்டமைப்பு – கூட்டணி என்ற சொற்கள் மிகவும் குழப்பம் தரும் சொற்களாக மாற்றப் பட்டுள்ளன. இந்தச் சொற்கள் அர்த்தமிழந்து வெறும் கதிரை அரசியலுக்கான நகர்வுகளை மட்டும் குறிக்கும் குறியீடுகளாகக் குறுகிப் போயுள்ளது. 1 தமிழ்த் தலைமைகள் எனத் தம்மைத் தாமே சொல்லிக் கொண்டவர்களின் வலது சாரியத் சரிவு தமிழ் அரசியல் பிரதிநிதித்துவத்தைத் தொடர்ந்து உடைத்து வந்திருக்கிறது. இந்தப் போக்கை மிக அவதானமாக நாம் கவினிக்க வேண்டியது அவசியம். ஏனெனில் தமிழ் தலைமைகளின் உடைவும் சரிவும் ஐக்கிய தேசியக் கட்சியின் மறைமுகச்... Read More
தெற்காசிய நிலவரங்கள் -முன்னோக்குப் புள்ளிகள் கட்டுரைகள் சர்வதேசம் சேனன் 

தெற்காசிய நிலவரங்கள் -முன்னோக்குப் புள்ளிகள்

204 . Views . இந்த ஆண்டில் தெற்காசிய வளர்ச்சி கனவுக் கதை முடிவுக்கு வந்து விட்டது. உலகப் பொருளாதார நெருக்கடியால் தொடரும் பொருட்களுக்கான கிராக்கிப் பற்றாக் குறை – முதலீட்டின் போதாக்குறை ஆகிய காரணங்களும் தெற்காசிய வளர்ச்சி வீழ்ச்சிக்குக் காரணம். அதே சமயம் முதலாளித்துவ ஊழல் – குறிப்பாக இந்தியாவில் அதிகரித்த ஊழல் நிலவரம் மற்றும் இந்திய அரசு முன்னெடுத்த மூர்க்கத்தனமான கொள்கைகள் ஆகியனவும் இதற்குக் காரணம். இந்திய வளர்ச்சி 6% வீதமாகக் குறைந்து விட்டதாக சில தரவுகள் காட்டினாலும் உண்மை வளர்ச்சி... Read More
மியன்மார் தேசத்தின் முள்ளிவாய்க்கால் – ரோஹிங்கிய (பாகம் – 02) கஜமுகன் கட்டுரைகள் சர்வதேசம் 

மியன்மார் தேசத்தின் முள்ளிவாய்க்கால் – ரோஹிங்கிய (பாகம் – 02)

97 . Views .“ஆங்சாங் சூகியின் எண்ணமானது ரோஹிங்கிய மக்களுடன் யுத்தம் புரிவதல்ல, மாறாக அம்மக்கள் அகதிமுகாமிலிருந்தோ அல்லது தப்பித்து செல்லும்போது கடலினுள் விழுந்தோ இறந்து போகட்டும்” என்பதே அவரின் எண்ணமாக இருக்கிறது என்றார் சமீபத்தில் மியான்மாரிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட அகதி ஒருவர். இதுதான் தற்பொழுது ஆங்சாங் சூகியைப் பற்றிய மக்களின் பார்வையாக உள்ளது ஆங்சாங் சூகி – மியன்மார் வன்முறை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் காலத்திலிருந்து உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெயர் இதுதான். ரோஹிங்கிய மக்களை காப்பாற்றக்கூடிய அதிகாரம் தன்வசம் இருந்தும் அதைப்  பயன்படுத்தாமல் வெறுமனே வேடிக்கை... Read More
பிரித்தானியாவில் பிரதமரின் வாசஸ்தலத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டம் செய்திகள் செயற்பாடுகள் பிரித்தானியா 

பிரித்தானியாவில் பிரதமரின் வாசஸ்தலத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டம்

206 . Views .இன்று (22.10.2017) பிரித்தானியாவில் தமிழர்கள் ஓர் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியிருந்தார்கள். இதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்து இருந்தது. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அரசியல் கைதிகளை உடன் விடுவிக்கப்பட வேண்டும். இராணுவம் அபகரித்து தம் வசம் வைத்துள்ள மக்களின் காணி நிலங்களை மீள கையளிக்க வேண்டும். வலிந்து காணாமல் செய்யப்பட்டவர்கள் தொடர்பான உண்மையான விபரங்கள் வெளியிடப்பட வேண்டும். இந்த முன்று கோரிக்கைகளை முன் வைத்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது. இந்த கவனயீர்ப்பு போராட்டம்... Read More