You are here
“வாரச் செய்திகள்” தை 18, 2016 முதல் தை 24, 2016 வரை நேர்காணல்கள் 

“வாரச் செய்திகள்” தை 18, 2016 முதல் தை 24, 2016 வரை

news2

 

 

 

 

 

 

 

திங்கட்கிழமைதை 19, 2016

 1. தமிழ் மக்கள் பேரவை கலைக்கப்படாது  – தமிழ் மக்கள் பேரவை கலைக்கப்படாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவை அரசியல் அமைப்பு அல்ல எனவும் ஜனநாயக ரீதியானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 2. பயங்கரவாத தடைச்சட்டத்தின் புதிய வரைவு அடுத்த இரண்டு வாரங்களில் நீதியமைச்சரிடம் கையளிக்கப்படும் – பயங்கரவாத தடைச்சட்டத்தில் இடம்பெறவுள்ள மாற்றங்களை உருவாக்கி வருகின்றோம், அதன் வரைவு இரண்டுவாரங்களில் நீதியமைச்சரிடம் கையளிக்கப்படும்” என சட்ட ஆணைக்குழுவின் தலைவர் ரொமேஸ்டி சில்வா தெரிவித்துள்ளார்.
 3. தனியார் மருத்துவக் கல்லூரியை எதிர்த்து உயர்நீதிமன்று முன்பாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் – மலபே தனியார் கல்லூரி மாணவர்களுக்கு அரச வைத்தியசாலைகளில் பயிற்சி வழங்க கூடாது என்று வலியுறுத்தும் இந்தப் ஆர்ப்பாட்டத்தை ஒன்றிணைந்த இலங்கையின் வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பல்கலைக்கழக வைத்திய மாணவர்கள் ஆகியோர் நடாத்தினர்.
 4. பௌத்த மதகுருமார்கள் குறித்த பாராளுமன்ற சட்ட மூலத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு –பௌத்த மதகுருமார்கள் குறித்து பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சட்ட மூலத்திற்கு எதிராக பிவித்துரு ஹெல உறுமய இன்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்செய்துள்ளது.
 5. மாட்டிறைச்சியை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யுமாறு ஜனாதிபதி கோரிக்கை – இலங்கையில் மிருக வதையை குறைப்பதற்கு மாட்டிறைச்சியை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிதி அமைச்சர் ரவி கரணாநாயக்கவிடம் கோரியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை – தை 19, 2016

 1. கொழும்பு போர்ட்சிட்டி திட்டத்திற்கு அனுமதிவழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேராட்டம் –அனைத்து பல்கலைகழக மாணவர் சம்மேளனத்தின் ஆதரவுடன் அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு போர்ட்சிட்டி திட்டத்திற்கு அனுமதிவழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையின் மீனவ சங்கங்கள் ஓன்றினைணந்து பேராட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளன.
 2. குமார் குணரத்னத்தை விடுதலைச் செய்யுமாறு கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் மீது நீர்தாரை பிரயோகம் – முன்னிலை சோசலிசக் கட்சியின் செயற்பாட்டாளர் குமார் குணரத்னத்தை விடுதலைச் செய்யுமாறு கோரி அக்கட்சியினர் கொழும்பு கோட்டையில் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை கலைப்பதற்காக பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்தாரை பிரயோகத்தினை மேற்கொண்டனர்.
 3. உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் ஜூன் மாதம் நடைபெறும் – உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னதாக நடைபெறும் என உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
 4.  புலி ஆதரவு புலம்பெயர் சமூகம் ஈழக் கனவை கைவிடவில்லை – ஜனாதிபதி – தெஹிவலை அத்திடிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இன்றைய தினம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தில் உயிரிழந்த படைவீரர்களுக்காக உருவாக்கப்பட்ட முதலாவது விசேட நீச்சல் தடாகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் இராணுவத்தை மறுசீரமைக்குமாறு எந்தவொரு நாடும் அழுத்தம் கொடுக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதன்கிழமை – தை 20, 2016

 1. இலங்கை, ஈரானிடமிருந்து பெற்றோல் இறக்குமதி செய்யவுள்ளது – இலங்கை அரசாங்கம் மீளவும் ஈரானிடமிருந்து பெற்றோல் இறக்குமதி செய்ய உள்ளது. ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடை நீக்கப்பட்டதனைத் தொடர்ந்து இவ்வாறு ஈரானிடமிருந்து பெற்றோல் இறக்குமதி செய்யப்பட உள்ளது.
 2. கொழும்பு துறைமுக நகர்த் திட்டம் முன்னெடுக்கப்படும் – பிரதமர் – கொழும்பு துறைமுக நகர்த் திட்டம் முன்னெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சீன உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த கொழும்புத் துறைமுக நகர்த் திட்டம் சுற்றாடல் காரணங்களைக் காண்பித்து தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
 3. கொக்கட்டிச்சோலை படுகொலை ஜனவரி 28 நினைவு நிகழ்வுக்கு ஏற்பாடு – 1987ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் திகதி கொக்கட்டிச்சோலை இறால் பண்ணையில் பணியில் ஈடுபட்டுக்கொணடிருந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வே கொக்கட்டிப் படுகொலை என ஆண்டுதோறும் நினைவு கூறப்படுகின்றது.
 4. அனைத்து அறிவிப்புக்களும் மூன்று மொழிகளிலும் பிரசூரிக்கப்பட வேண்டும் – அனைத்து அறிவிப்புக்களும் மூன்று மொழிகளிலும் பிரசூரிக்கப்பட வேண்டுமென்ற சடடம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என உத்தியோகபூர்வ மொழிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை – தை 21, 2016

 1. E.U மீன் ஏற்றுமதி தடை நீக்கவும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையை வழங்க ஒத்துழைக்கும்-  இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்தில் ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த மீன் ஏற்றுமதித் தடையை நீக்கவும் நிறுத்தப்பட்ட ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக்கொடுக்கவும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக சுவிடன் பிரதமர் ஸ்டோபன் லோபன் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை – தை 22, 2016

 1. போரில் காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்க அரசு தீர்மானம்– வடகிழக்கில் நடந்த போரில் காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ்களை வழங்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. இந்த தகவலை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்தின அறிவித்தார்.
 2. யாழ்ப்பாண காவல்துறையினருக்கு பிரித்தானியா உதவி- சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்து நிறுத்த பிரித்தானியா, யாழ்ப்பாண காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 3. யுத்தகுற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்தப் போவதில்லை – இலங்கையில் இடம்பெற்ற யுத்தகுற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்தப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
 4. இலங்கையில் தமிழ் சிங்கள அரசியல் கைதிகள் கிடையாது – ரணில் – இலங்கையில் தமிழ் அல்லது சிங்கள அரசியல் கைதிகள் எவரும் கிடையாது என சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 5. வடமாகாண முதலமைச்சரை சுதந்திரமாகச் செயற்படுவதற்கு விடுமாறு கோரி ஒருவர் உண்ணாவிரதம் – வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சுதந்திரமாகச் செயற்படுவதற்கு விடுமாறு கோரி கொடிகாமம் வரணிப் பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் துசாந் என்ற தனிநபர் தந்தை செல்வா சதுக்கத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.
 6. கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம் – கிளிநொச்சி அறிவியல் நகா் பகுதியில் அமைந்துள்ள வானவில் (மாஸ்) ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றிய ஆளணி முகாமையாளா் ஒருவா காரணமின்றி பணி நீக்கம் செய்யப்பட்டமைக்கு  எதிர்ப்புத் தெரிவித்து தாங்கள் (இரண்டாயிரத்திற்கு மேற்பட்டவா்கள்) ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதாக  ஊழியா்கள் தெரிவித்துள்ளனர்

சனிக்கிழமை – தை 23, 2016

 1. கூட்டு எதிர்க்கட்சியினர் அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச ரீதியில் முறைப்பாடு- பாராளுமன்றில் தமக்கு உரிய நேரம் ஒதுக்கப்படுவதில்லை என கூட்டு எதிர்க்கட்சியினர் எழுத்து மூலம் அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச ரீதியில் முறைப்பாடு செய்துள்ளனர்.
 2. கூட்டு எதிர்க்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடாத்தி இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள ஜனாதிபதி விருப்பம்- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவடையக் கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
 3. தமிழர் தீர்வு விடயத்தில் முன்னேற்றம், குறுகிய காலத்தில் முற்றுப்புள்ளி- சுவிசில் பிரதமர்- இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் தீர்வு காணும் விடயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்தப் பிரச்சினை இன்னும் குறுகிய காலத்தில் தீர்த்து வைக்கப்படும் என்றும் இலங்கைப் பிரதமர் ரணைில் விக்கிரமசிங்க சுவிலாந்தில் வைத்து தெரிவித்துள்ளார்.
 4. அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கருத்துத் தெரிவித்தார் சந்திரிக்கா – பிரபாகரனின் படையினரும் தண்டிக்கப்படவேண்டும் என்று கூறினார். போர்க்குற்றங்களுக்காக இராணுவத்தை தண்டிக்க வேண்டும் என்று தமிழ் மக்களாகிய நீங்கள் கேட்கும்போது பிரபாகரனின் படையினர் ஏன் தண்டிக்கப்படகூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
 5. யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக நில அதிர்வு வெடிப்பு – யாழ்.நவக்கிரி பகுதியில் வீடொன்றின் நிலப்பகுதி மற்றும் சுவர்களில் சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் பாரிய சத்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை – தை 24, 2016

 1. உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மைத்திரி, மஹிந்த மற்றும் சந்திரிக்காவை இணைக்க முயற்சி- ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளை இணைத்து தேர்தலில் வெற்றியீட்டுவதற்கான வியூகம் வகுக்கப்பட வேண்டுமென சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
 2. தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குக! மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு- நீண்டகாலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பு முறைப்பாடு செய்யவுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
 3. வன்னி ஆசிரிய உதவியாளர்களை ஆசிரியர் சேவையினுள் உடனடியாக உள்வாங்கல்– யுத்தங்களால் பாதிக்கப்பட்ட வன்னிப் பகுதியைச் சேர்ந்த ஆசிரிய உதவியாளர்கள் அனைவரையும் இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்புக்களுக்கு அமைவாக இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்குமாறும் இதற்கு ஆசிரியர் தொழிற் சங்கங்கள் உடனடிக் கவனம் செலுத்தி உதவ முன்வர வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட வன்னிப் பகுதி ஆசிரிய உதவியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
 4. சரத் பொன்சேகாவிற்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்குவதற்கு சில ஐ.தே.க உறுப்பினர்கள் எதிர்ப்பு- அண்மையில் மறைந்த முன்னாள் அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தனவின் வெற்றிடத்திற்காக சரத் பொன்சேகாவை நியமிக்க முயற்சிக்கப்பட்டு வருகின்றது.

 ブローバ Bulova 腕時計 時計 Bulova Men’s 98D107 Marine Star Bracelet Mother of Pearl Dial Watch
フランスベッド/ZT-200セミダブル羊毛入り/ゼルトスプリングマットレス/ZELT/高密度連続スプリング/日本製/ミディアムソフト/送料無料
新 大和霊芝(90袋)サプリメント霊芝エキス(国産)霊芝エキス末(国産)高麗ニンジンエキス(中国北方)チャーガエキス末(ロシア)田七人参(中国雲南省他)/LPS配合/マクロファージ/βグルカン
ヒーター・サーモ付小型温室お得な3点セット小型温室FHB-908+園芸用ヒーター サーモスタット付き TOP-150SWS
5043510 ペットプロ くいしんぼ すなぎも スティックジャーキー 3本入×200袋 【ab-1026516】
[送料無料]プラチナリング エンゲージリング 指輪 ピンキーリング ダイヤモンド リング ダイヤ0.13ct 婚約指輪 一粒ダイヤモンド【楽ギフ_包装】0824カード分割【コンビニ受取対応商品】
木製パネルカウンター W90cm ダークブラウン 【メーカー直送/代金引換決済不可】
BVLGARI(ブルガリ)/ショルダーバッグ/ショルダーバッグ/ブラック/レザー/【ランクA】[BRANDOFF/ブランドオフ]【中古】
N-401 土俵マット(連結式)
生活の木有機スペアミント 1000ml 08-4365-400 (84365400)

Related posts

Leave a Comment