You are here
லண்டனில் விக்கியின் விஸ்வரூபம் கட்டுரைகள் நடேசன் 

லண்டனில் விக்கியின் விஸ்வரூபம்

  கின்ஸ்டன்  கவுன்சிலுடனான ஒப்பந்ததை வெற்றிக்கரமாக நடாத்திய வட மாகாண முதல்வர் 23-10-2016 ல் -லண்டன் ஹாரோ என்ற இடத்தில் மக்களைச்சந்தித்தார். இந்தச் சந்திப்பு எல்லா தமிழ் பேசும் மக்களுக்குமானதா ? பழமைவாதக் கட்சி உறுப்பினர்கள் தமது உயரடுக்கு மிடுக்கை தமிழ் பாரம்பரியமாக நிறுவ முயன்றது போல் தான் தெரிந்தது. எல்லா மக்களையும் உள்வாங்க விரும்புபவர்கள் -பரதநாட்டியமும் ‘மங்கள’விளக்கேற்றலும் என இந்து மத அடையாளங்களுடன் மட்டும் விழாவை ஆரம்பித்தது தவறு. எழுதி வாசிக்கபட்ட” ஞானத்தோற்றம், காவல் கோட்டை,  தாடிவைத்த தற்கால வள்ளுவனே, தலைவனே, தெய்வமே,... Read More
பொறுமை போதும் பொங்கி எழு! கஜன் கட்டுரைகள் 

பொறுமை போதும் பொங்கி எழு!

அடுத்த வருசத்துக்குள் தீர்வாமே? என்ன கதை இது? 1996 ஆம் ஆண்டு சந்திரிக்கா அம்மையார் முன் வைத்த தீர்வைக் கிழித்தெறிந்த ரணில் விக்கிரமசிங்க, 2016 ஆம் ஆண்டு மைத்திரி அரசுடன் இணைந்து சாத்தியமான தீர்வை முன்வைப்பார் என நம்பிக்கொண்டிருப்பது இலவு காத்த கிளியைப் போன்றது. கடந்த கால வரலாற்றை–கொள்கைகளைப் பார்ப்பது, அவர்களின் எதிர்கால நடவடிக்கைளை, ஓரளவுக்கேனும் அறிய உதவும். சம்பந்தர் ஐயா நல்லிணக்கம் என்னும் பொறிமுறைக்குள் அகப்பட்டுக்கொண்டு விட்டார். தனக்கென்று ஒரு வரம்பு வைத்துக்கொண்டு அதற்குள் நின்று பேசுகிறார். வரம்புக்கு வெளியே காணப்படும் தீர்வை-மக்கள்... Read More
மாணவர்கள் கொலைக்கு இலங்கை அரசே பொறுப்பு கட்டுரைகள் சேனன் 

மாணவர்கள் கொலைக்கு இலங்கை அரசே பொறுப்பு

சேனன் 1 வடக்கு கிழக்கைக் குலுக்கியிருக்கும் – இரு மாணவர்கள் கஜன், சுலக்க்ஷன்ஆகியோரின் இறப்பின் பின்னியங்கும் அரசியலை நாம் சரியாக விளங்கிக் கொள்ளுதல் அவசியம். ‘அவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை பொலிசார் நிறுத்தச் சொல்ல அவர்கள் நிறுத்தாமற் சென்றதால் பொலிசார் சுட்டனர் – இது ஒரு வழமையான பொலிஸ் விவகாரம். நிறுத்தச் சொன்ன பொழுது அவர்கள் வாகனத்தை நிறுத்தியிருக்க வேண்டும். ஏன் அவர்கள் சட்டத்தை மதிக்காமல் வாகனத்தை ஓட்டிச் சென்றனர்?’ – எனச் சிலர்இச்சம்பவத்தைச் சுருக்கிப் பார்க்க முற்படுகின்றனர். உண்மையில் என்ன நடந்தது... Read More
வடக்கு முதலமைச்சரின் லண்டன் வருகையும் மக்களின் எதிர்பார்ப்புக்களும் கட்டுரைகள் 

வடக்கு முதலமைச்சரின் லண்டன் வருகையும் மக்களின் எதிர்பார்ப்புக்களும்

கின்ஸ்டோன் கவுன்சில்லுகும் யாழ் மாவட்டத்திற்குமான சமூக, அரசியல், கலாச்சார தன்மைகளை பரிமாறிக்கொள்ளும் நோக்குடன் நடைபெறும் நிகழ்வில் உரையாற்ற வடமாகாண முதலமைசர் அழைக்கப்படுள்ளார். முதலமைச்சரின் இவ் விஜயமானது புலம்பெயர் மக்களிடத்தில் பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் பிற்போக்கு தனமான பிரித்தானியாவின் பழமைவாத கட்சியின் தலைமைத்துவதிலேயே கிங்ஸ்டன் கவுன்சில் நிர்வாகம் செயற்படுகிறது. இவ்வாறான நிகழ்வுகள் மூலம் புலம் பெயர்ந்த தமிழ் மக்களிடத்தில் இந்த கட்சியின் செல்வாக்கை அதிகரிப்பதற்கான ஒருவித முயற்ச்சியாகவே கருதப்படுகிறது. இங்கு வாழும் மக்களின் அடிப்படை தேவைகளை மறுத்தும் , நசுக்கியும் செயற்படும் இவ் அரசாங்கம்... Read More
மஹிந்த செய்யமுயலும் மாந்திரீகம்.. கஜன் கட்டுரைகள் 

மஹிந்த செய்யமுயலும் மாந்திரீகம்..

-கஐன் தமிழ் தலைமைகளுக்கே தமிழ் மக்களின் மீது அக்கறையும் கரிசனமும் வராத போது தீடிரென்று மஹிந்த ராஜபசவுக்கு தமிழ் மக்களின் மீது அன்பு பெருக்கெடுத்து ஆறாக பாய்கின்றதாம். விக்கினேஸ்வரன் இனவாதி இல்லை என்கிறார், தமிழ் இளைஞர்களுக்கு வேலை இல்லை, சரியான வீதி இல்லை என்கிறார். முகாம்கள் மூடப்பட்டுள்ளதா?, மக்கள் மீள் குடியமர்த்தப் பட்டுள்ளார்களா? எனக் கவலைப்படுகிறார். முகாம்களை உருவாக்கியதே அவர்தான் என்பது அவருக்கே மறந்து விட்டது போலும். யாழிலும் எனக்கு உறவினர்கள் இருக்கின்றனர் என சொந்தம் கொண்டாடுகிறார். பின்னர் ஏன்தான் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு... Read More
தேசிய அபிலாசைகளை பிற்போக்காளர் கைககளில் விட முடியாது கட்டுரைகள் பாரதி 

தேசிய அபிலாசைகளை பிற்போக்காளர் கைககளில் விட முடியாது

– பாரதி – – தேசிய விடுதலை என்பது ஒடுக்குமுறைகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் மூடிமறைத்துக்கொண்டு அதன் மேல் ஏறி நின்று பேசவதல்ல. எம்மத்தியில் உள்ளவர்கள் சிலர் இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் போன்றவர்கள் எம் சமூகத்தில் மிக சொற்பமானவர்களே. இவர்களை இனம் கண்டு மக்கள் மத்தியில் வெளிப்படுத்துவது முக்கியம். அடித்து வீழ்த்தும் வசனங்களால் பச்சை இனவாதம் பேசும் சிலரால் விடுதலை என்ற பதமே பொருள் இழந்து விடும் அபாயம் இருக்கிறது. ஒரு இனமக்கள் ஏன் தேசியத்தை நோக்கி நகர்கிறார்கள் என்று சிந்திக்க வேண்டும். கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படும்... Read More
முரண்பாடுகளுடனும் உடன்பாடு சாத்தியமே – இடதுசாரிய அமைப்புகளை நோக்கி கட்டுரைகள் சேனன் 

முரண்பாடுகளுடனும் உடன்பாடு சாத்தியமே – இடதுசாரிய அமைப்புகளை நோக்கி

பின்வரும் இரண்டு முக்கிய கருத்துகளைச் செயற்பாட்டாளர்கள் கவனத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். 1. ஆயுதம் தாங்கிய விடுதலை அமைப்புகளின் தலைமைகள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் சோசலிசம் – சோசலிசப் புரட்சி பற்றிப் பேசினர். ஆனால் அவர்கள் மத்தியில் அதற்கான முன்னோக்கு மற்றும் செயற்திட்டங்கள் தெளிவாக இருக்கவில்லை. விடுதலை பேசிய குர்திஸ்தான் தலைவர்கள் அயர்லாந்து தலைவர்கள் ஆகியோர்களிடம் தெளிவிருந்தது எனச் சொல்லவில்லை. ஆனால் அவர்களிடம் இருந்த தெளிவான முற்போக்கு நிலைப்பாடு ஈழத்தில் வளரவில்லை. அது தலையெடுத்தது – வளர முதலே கிள்ளப்பட்டு விட்டது. இந்தியத் தலையீடு... Read More
விடுதலை விரும்பிகள் ஜெரமி கோபினுக்கு ஆதரவளிக்க வேண்டும் கஜன் கட்டுரைகள் 

விடுதலை விரும்பிகள் ஜெரமி கோபினுக்கு ஆதரவளிக்க வேண்டும்

By Kajan பிரித்தானிய தமிழர்கள் ஏன் ஜெரமி கோபினை ஆதரிக்க வேண்டும்? யார் இந்த ஜெரமி கோபின்? ஏன் தமிழர்கள் அவரை ஆதரிக்க வேண்டும்? அதனால் தமிழர்களாகிய நமக்கு என்ன நன்மை? என்பது பற்றி அலசி ஆராய்கிறது இந்தக் கட்டுரை. ஜெரமி கோபினுக்காக ஆதரவு என்பது கோபின் எனும் தனி மனிதனுக்கான ஆதரவு இல்லை. அது ஜெரமி கோபினின் கொள்கைகளுக்காக கொடுக்கப்படும் ஆதரவே ஆகும். தற்பொழுது இங்கிலாந்தில் எழுந்திருக்கும் கோபின் அலைக்கு கொடுக்கும் ஆதரவு ஆகும். இந்த அலையானது சமூகத்தின் அடித்தட்டு மற்றும் பழைமைவாத... Read More
யாரிந்த ட்ரொட்ஸ்கி? -76வது ஆண்டு நினைவு நாள் கட்டுரைகள் சேனன் 

யாரிந்த ட்ரொட்ஸ்கி? -76வது ஆண்டு நினைவு நாள்

கடந்த பல வாரங்களாக இங்கிலாந்து ஊடகங்களில் திரும்பத் திரும்பப் பேசப்பட்டுவரும் பெயர் – ட்ரொட்ஸ்கி. அனைத்து ஊடகங்களும் ட்ரொட்ஸ்கி பற்றி ட்ரொட்ஸ்கிஸ்டுகள் பற்றி எழுதித் தள்ளிக்கொண்டிருப்பதைப் பார்த்தோம். தொழிலாளர் கட்சியின் எதிர்க்கட்சி தலைவரான nஐரமி கோர்பினை “ட்ரொட்” என்றும் – அவர் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஊடுருவலை அனுமதிக்கிறார் என்றும் பல்வேறு குற்றச் சாட்டுகள் ஊடகங்களில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்ததைப் பார்த்திருப்பீர்கள். யாரிந்த ட்ரொட்ஸ்கி ? இந்தப் பெயருக்கேன் வலதுசாரிகள் பயப்பிடுகிறார்கள்? இன்று ட்ரொட்;ஸ்கி கொல்லப்பட்டு சரியாக 76வது ஆண்டு நினைவு நாள். 1940ம் ஆண்டு 21ம்... Read More
தழிழ் சொலிடாரிற்றியின் உத்தியோகபூர்வ வேண்டுகோள் கட்டுரைகள் 

தழிழ் சொலிடாரிற்றியின் உத்தியோகபூர்வ வேண்டுகோள்

தொழிலாளர் கட்சியின் தற்போதய தலைவராகவும் எதிர் கட்சித் தலைவராகவும் இருக்கும் ஜெரமி கோர்பினை அப்பதவியில் இருந்து வெளியேற்றும் நோக்குடன் கட்சி தலமைக்கான தேர்தல் அறிவிக்கப் பட்டிருப்பதும் அத்தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் நடந்துகொண்டிருப்பதும் தாங்கள் அறிந்ததே. கோர்பின் நீண்ட காலமாக தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை ஆதரித்து வருபர். வெற்று வாக்குறிதியாக அன்றி – வாக்குகளை வெல்லும் நோக்குக்காக அன்றி – கொள்கைப்பற்றோடு தமிழ் மக்களினதும் மற்றும் ஏனைய ஒடுக்கப்படும் தேசியங்களினதும் விடுதலை உரிமையை எந்தத் தயக்கமும் இன்றி ஆதரித்து வருபவர் கோர்பின் என்பது அனைவருக்கும்... Read More
பிரக்சிட் பற்றி ஒரு வலதுசாரியும் இடதுசாரியும் கட்டுரைகள் சேனன் 

பிரக்சிட் பற்றி ஒரு வலதுசாரியும் இடதுசாரியும்

1 ஜெயமோகன் பிரக்சிட் பற்றிப் புலம்பியிருப்பதை அறிவார்ந்த கட்டுரை மாதிரி இந்து பத்திரிகையும் வெளியிட்டிருக்கிறது. சரியான புரிதலைக் காட்டுகிறது என ஒரு வசனத்தைக்கூட அக்கட்டுரையில் கண்டுபிடிக்க முடியவில்லை. எதற்காக பிரக்சிட் நடந்தது என்பது முதற்கொண்டு வெளிநாட்டார் வருகை ஈறாக எந்தப் புரிதலும் அற்ற பினாத்தல்களைச் செய்துகொண்டு செல்கிறார் ஜெயமோகன். பிரக்சிட் என்ற பெயரில் வாக்கெடுப்பு நடக்கவில்லை ஜெயமோகன் – மாறாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளிவருவதற்கு மக்கள் விரும்பும் நிலைப்பாடே பிரெக்சிட் என்றழைக்கப்படுகிறது. (பிரித்தானியா பிரிதல் – பிரிட்டிஷ் எக்சிட் என்பதன் சுருக்கம் அது).... Read More
பொய்யிலே பிறந்து பொய்யிலே உருளும் பிளேயர். கட்டுரைகள் சேனன் 

பொய்யிலே பிறந்து பொய்யிலே உருளும் பிளேயர்.

-சேனன் இந்தக் கதை ஒரு பகற்கொள்ளைக்காரனின் கதை. பச்சைக் கொலைகள் செய்து பணம் திரட்டியவனின் கதை. கேட்போரின் உயிரணுவின் ஒவ்வொரு துண்டும் துகளும் துடித்துச் சீறிச் சினக்கும் கதை. கோபம் கொப்பளித்துக் கொதித்து உங்களை உருக்கிவிடும் என்பதால் மனதைத் தேற்றிக்கொண்டு மேலே படியுங்கள். சர்வாதிகாரிகளும் மக்கள் நல விரோதிகளும் உலகெங்கும் இருக்கிறார்கள் என்பது எமக்குத் தெரியும். இலங்கையில் இராஐபக்ஷ வட கொரியாவில் கிம் யோன்க் அன். மத்திய கிழக்கில் அசாட் முதற்கொண்டு பலர். கசகிஸ்தானின் நசர்பயாவ் என நீண்டிருக்கும் பட்டியலது. அவர்கள் கொலைகாரர் என்பதை... Read More
இங்கிலாந்து தொழிலாளர் கட்சியின் வரலாற்றுப் பின்னணியும் இன்றைய நெருக்கடியும் – part2 கட்டுரைகள் சேனன் 

இங்கிலாந்து தொழிலாளர் கட்சியின் வரலாற்றுப் பின்னணியும் இன்றைய நெருக்கடியும் – part2

புதிய லேபர் கட்சி தான் நீண்டகாலத்தின் பின் 1997ல் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து பிளேயரிசத்தின் முகம் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கி விட்டது. இதற்கு முன்பு கட்சிக்குள் இருந்த மிலிட்டன் உறுப்பினர்கள் மற்றும் இடதுசாரிகளுக்கு மட்டுமே பிளேயரிஸ்டுகளின் பிற்போப்புத்தனம் தெரிந்திருந்தது. அவர்கள் ஆட்சியைப்பிடித்த கையோடு முன்னெடுக்கத் தொடங்கிய கொள்கைகளைத் தொடர்ந்து தொழிறசங்கங்;கள் மற்றும் மக்கள் அமைப்புகள் மத்தியில் புதிய லேபர் மேல் வெறுப்பு வளரத் தொடங்கிவிட்டது. பிளேயரிஸ்டுகளை எதிர்த்தவர்கள் தமது கருத்து;களை மக்களிடம் எடுத்துச் செல்ல “தேசிய” ஊடகங்கள் எதுவும் வாய்ப்பு வழங்கவில்லை என்பது... Read More
இங்கிலாந்தில் வளரும் துவேச நடவடிக்கைகளை தமிழ் சொலிடாறிற்றி கண்டிக்கிறது. செய்திகள் செயற்பாடுகள் 

இங்கிலாந்தில் வளரும் துவேச நடவடிக்கைகளை தமிழ் சொலிடாறிற்றி கண்டிக்கிறது.

தமிழ் சொலிடாறிற்றி வெளியிட்டிருக்கும் அறிக்கையைக் கீழே பார்க்கலாம். துவேச நடவடிக்கைகளைக் கண்டிப்போம் தற்போது துவேச நடவடிக்கைகள் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியுள்ளது. அதனை வளர விடாமல் கண்டிப்பது அவசியம். துவேசத்தைப் பிரச்சாரம் செய்து அதை மக்கள் மத்தியில் ஊற்றி வளர்த்துவரும் அதி தீவிர யுகிப் போன்ற வலதுசாரிய அமைப்புக்களையும் மற்றும் துவேச அரசியற் கட்சிகளையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். வெளிநாட்டு மக்கள் மற்றும் அகதிகள் மீது இனத் துவேசத்துடன் மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். அகதிகள் மற்றும் வெளிநாட்டவர்களின் எல்லாவகையான உரிமைகளும் காக்கப்படவேண்டும். வலதுசாரி உட்கட்சி அரசியல் பூசல்களை... Read More