You are here
இங்கிலாந்து தொழிலாளர் கட்சியின் வரலாற்றுப் பின்னணியும் இன்றைய நெருக்கடியும் கட்டுரைகள் சேனன் 

இங்கிலாந்து தொழிலாளர் கட்சியின் வரலாற்றுப் பின்னணியும் இன்றைய நெருக்கடியும்

part 1 1997ம் ஆண்டு மே மாதம் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த டோனி பிளேயர் அமோக வெற்றியடைந்து இங்கிலாந்தின் பிரதம மந்திரியாகியது பலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம். நீண்ட காலத்திற்குப் பிறகு வலதுசாரிய கன்சர்வேட்டிவ் கட்சி – பழைமைவாதக் கட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்திருந்தது. இங்கிலாந்தில் பலர் இரவிரவாகக் கண்முழித்துத் தேர்தல் முடிவுகளைப் பார்த்துக்கொண்டிருந்த வேளை உறவினர் ஒருவர் பிரான்சில் இருந்து லண்டனுக்கு வருவதற்காக எல்லையைக் கடந்து கொண்டிருந்தார். அவர் அடிக்கடி லண்டனுக்கு வந்து போகிறவர். டோனி பிளேயர் வென்றுகொண்டிருப்பது பற்றி அவர் எல்லைக் காவலர்களிடம்... Read More
ஜெரமி கோர்பினும் – தலைமைத்துவமும் பற்றி கட்டுரைகள் சேனன் 

ஜெரமி கோர்பினும் – தலைமைத்துவமும் பற்றி

-சேனன் 1. ஒட்டுமொத்த அரசியல் அதிகாரமும் ஆட்டம் கண்டுள்ளது. ஆடி வர முதலே பல அம்மிகள் பறக்கின்றன. இங்கிலாந்தில். பிரக்சிட் – ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரியும் வாக்கெடுப்பில் இருந்து எழுந்த சூறாவளி இங்கிலாந்து அரசியல் அதிகாரத்தை உலுக்கி அவர்களது அழுக்குகளைத் திறந்து காட்டியிருக்கிறது. பழைமைவாதக் கட்சிக்குள் – கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் – தலைமைப் பதவியைப் பிடிக்கும் போட்டி அவர்களை இரண்டாகப் பிளந்து நிறுத்தியிருக்கிறது. போரிஸ் ஜோன்சன் முக்கிய போட்டியாளராகத் தன்னை அறிவித்திருக்கிறார். கட்சியின் இருபக்கத்தையும் இணைப்பதாகச் சொல்லிக்கொண்டு வாக்கெடுப்பின் போது பேசிய பேச்சுகளைத்... Read More
ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற்றம் – மற்றும் துவேசத்தின் வளர்ச்சி பற்றி கட்டுரைகள் சேனன் 

ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற்றம் – மற்றும் துவேசத்தின் வளர்ச்சி பற்றி

-சேனன் ஜரோப்பிய ஒன்றியத்தில் இணைவதா? பிரிவதா? என்பதை முடிவெடுக்க இங்கிலாந்தில் நேற்று நடந்த பொது வாக்கெடுப்பின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. கடும் மழையிலும் 72 வீத மக்கள் வாக்களித்திருக்கின்றனர். இதில் 52 வீதத்தினர் பிரிவுக்கும் 48 வீதத்தினர் இணைவுக்கும் வாக்களித்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து ஆளும்கட்சிப் பிரதமரின் தலைமையை நோக்கி எழுந்த அவரது கட்சிக்காரரின் அழுத்தம் காரணமாகப் பிரதமர் டேவிட் கமரூன் இராஜினாமா செய்திருக்கிறார். லேபர் கட்சித் தலைவருக்கும் நெருக்கடி கொடுக்கும் வேலை அக்கட்சிக்குள் இருக்கும் வலதுசாரிகளால் தொடக்கி விடப்பட்டிருக்கிறது. 1 அரசியல் அதிகாரத்தின் தோல்வி... Read More
ஐரோப்பிய ஒன்றியம் ஒரு இடதுசாரியப் பார்வை!-பாகம் 3 கட்டுரைகள் சேனன் 

ஐரோப்பிய ஒன்றியம் ஒரு இடதுசாரியப் பார்வை!-பாகம் 3

-சேனன் பிரித்தானியாவில் ஐரோப்பிய ஒன்றியம் பற்றிக் கடந்த நாட்களாக நடந்துவரும் விவாதங்களைப் பார்ப்பவர்களுக்கு ஒரு விஷயம் மட்டும் தெட்டத் தெளிவாக விளங்கியிருக்கும். “பொய். பொய். பொய். பொய் தவிர வேறில்லை” என்ற மந்திரம்தான் ஓதப்பட்டுக்கொண்டே இருக்கிறது. “இரண்டு பக்கமும் நிறையப் பொய்கள் இருக்கின்றன ” என்று சுட்டித்தான் பி.பி.சி ஊடகவியலாளர்கள் கூட கேள்வி கேட்கிறார்கள். உண்மை அறியும் இடம் எனத் தனிப்பட்ட இணையப் பக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது பி.பி.சி. வலதுசாரியக் கட்சிகளின் பிரச்சார வாய்கள் தமது இஷ்டத்துக்கு சொல்வதை எல்லாம் “பக்ட்” என புலம்புவதால் இந்த... Read More
ஐரோப்பிய ஒன்றியமும் புலம்பெயர் மக்களும் – நடேசன் கட்டுரைகள் நடேசன் 

ஐரோப்பிய ஒன்றியமும் புலம்பெயர் மக்களும் – நடேசன்

புலத்தில் வாழும் மக்கள் மத்தியில் பெரும்பாலும் குடிவரவு பிரச்சினைகளையும் வேலைவாய்ப்புக்களையும் தொடர்பு படுத்தியே பார்க்கப்படுகின்றது ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து அங்கம் வகிப்பதன் மூலம் குடிவரவுச் சட்ட்ங்களிலுள்ள இறுக்கங்கள் தளர்வடையலாம் என்ற எண்ணம் புலம்பெயர்ந்த மக்களிடையே நிலவுகின்றது. அது ஒரு மாயத் தோற்றம் என்பதை புலம்பெயர் மக்கள் புரிந்து கொள்ளல் வேண்டும்.  பிரித்தானியாவின் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் உறுப்பினராய் தொடர்வதை ஆதரித்துப் பிரச்சாரம் செய்கின்றன. ஆளும் கட்சியான கான்செர்வ்டிவ் கட்சி மிகவும் பிற்போக்குத்தனமான நிலைப்பாடைக் கொண்டு செயற்படுவதால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து இருப்பதன் மூலம் இக்கட்சியின் நெருக்கடிகளை   ... Read More
ஜரோப்பிய ஒண்றியம்- ஒரு இடதுசாரியப் பார்வை-பாகம் 2 கட்டுரைகள் சேனன் 

ஜரோப்பிய ஒண்றியம்- ஒரு இடதுசாரியப் பார்வை-பாகம் 2

– சேனன் ஜ. ஓ. – திறந்த எல்லை – சனநாயகம் பற்றி 1 மேற்கத்தேய நாடுகள் மத்தியில் நிலவும் திறந்த போக்குவரத்து வசதிகள் ஜரோப்பிய ஒண்றியத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நடவடிக்கை அல்ல. உதாரனமாக பிரான்சுக்கும் ஜேர்மனிக்கும் இடையில் இறுக்கமான எல்லைக் காவல் என்றைக்கும் இருந்ததில்லை. ஏனெனில் முழுமையாக எல்லையைக் கட்டுப்படுத்துவது என்பது முடியாத காரியமாகவும் இருந்தது. கடலாற் சூழப்பட்ட இங்கிலாந்திற்கூட முழுமையான எல்லைக் காவல் சாத்தியமாயிருக்கவில்லை. ஆனால் போக்குவரத்துப் பாதைகளிற் தடைகள் போடப்பட்டிருந்தன. பொருளாதராப் பலம் குறைந்த நாடுகளில் இருந்து வருபவர்களைக் கட்டுப்படுத்த... Read More
ஒன்றியத்திலிருந்து ஏன் பிரித்தானியா வெளியேற வேண்டும்? -பாரதி காணொளி பாரதி 

ஒன்றியத்திலிருந்து ஏன் பிரித்தானியா வெளியேற வேண்டும்? -பாரதி

சொலிடாரிட்டி நாள் தொடர்பான அறிக்கையும் தொடர்ச்சியான போராடடத்தில் அடுத்த கட்ட நகர்வுகள்மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா ஏன் விலகவேண்டும் என்பதற்குரிய காரணங்கள் – பாரதியின் கருத்துக்கள் -மகரந்தச் சிதறலுக்காக செவ்வி எடுத்தவர் நவஜோதி Part 1 Part 2 Part 3 Read More
படைப்புகளை அளக்க முடியாது கட்டுரைகள் சேனன் 

படைப்புகளை அளக்க முடியாது

2016 ஏப்ரல் 2ம் திகதி லண்டனில் நிகழ்ந்த புத்தக வெளியீட்டு கூட்டத்தில் அப்பால் ஒரு நிலம் புத்தக விமர்சனத்தில் பேசியதன் அச்சுவடிவம் -ஆக்காட்டி இதழ் – சேனன் இருப்பினும் அளவுகோல் காவித்திரியும் அடாவடித்தனங்கள் தொடர்ந்து நிகழ்வதுதான். அத்தனை அளவுகோல்களுக்குப் பின்னும் அரசியல் இருக்கிறது என்பதையும் நாம் அவதானிக்க வேண்டும். நல்லது கெட்டது, அழகு, அழகற்றது என்ற அனைத்துக் கூற்றுகளும்  பிளவுகளும் அரசியலின் அடிப்படையில் இருந்தே பிறக்கிறது. ஈழத்து இலக்கியத்திற்கும் தமிழகத்து மற்றும் மலேசிய இலக்கியத்திற்கும் இருக்கும் வேறுபாடுகளும் அரசியற்பாற்பட்டதே. பெரும்பான்மைத் தமிழகத்து இலக்கியங்கள் வியாபார எழுத்துகள்... Read More
ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் கட்டுரைகள் சேனன் 

ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் – ஐரோப்பிய ஒன்றியம் பற்றிய ஒரு இடதுசாரியப் பார்வை! – சேனன் பாகம் 1 இரண்டாம் உலக யுத்தத்தின் கொடிய அனுபவத்தின் பின்பு லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் யுத்தம் மேல் கடும் வெறுப்பு ஏற்பட்டிருந்தது. அர்த்தமற்ற இந்த யுத்தம் ஆளும் வர்க்கத்தின் அபிலாசைகளுக்கான யுத்தமேயன்றி மக்களுக்கு எவ்வித நன்மைகளையும் ஏற்படுத்தவில்லை என்பது பொது அறிவாக இருந்தது. மாறாக யுத்தம் ஏற்படுத்திய அழிவுகளைத்தான் மக்கள் தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது. இனிமேலும் இத்தகைய கொடுமை வேண்டாம் என்ற அடிப்படையில் அமைதிக்கான அவா மேலோங்கியிருந்தது. இது... Read More
ஐரோப்பிய ஒன்றியம் போலியானது! அதிலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் : சேனன் கட்டுரைகள் சேனன் 

ஐரோப்பிய ஒன்றியம் போலியானது! அதிலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் : சேனன்

விசா பிரச்சினையின்றி – கடவுச்சீட்டு பரிசோதனை இன்றி- மற்றய நாடுகளுக்குச் சென்று வருவதற்கு அனைவருக்கும் விருப்பம் உண்டு. அதேபோல் உள்துறை அமைச்சுகள் எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக ஜரோப்பாவிடம் முறையிடும் உரிமை முதலிய அகதிகளுக்கான உரிமைகளும் பலருக்கு ஜரோப்பிய ஒன்றியம் மேல் கவர்ச்சித்தன்மையை உருவாக்கியிருக்கிறது. ஆனால் உண்மையில் மிகச் சொற்பமான எண்ணிக்கையான அகதிகளுக்கு மட்டுமே ஜரோப்பிய ஒண்றியத்தால் பயன் கிடைத்துள்ளது. ஒன்றியத்திற்குள்  இருப்பினும் போக்குவரத்து விதிகள் தெற்காசியர்கள் கறுப்பர்கள் அரேபியர்களுக்கு எதிராகவே இருக்கப்போகிறது. பிரெஞ்சு குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பிரஞ்சு எல்லைகள் மூடப்பட்டதும் – பெல்ஜியம் குண்டு... Read More
வட்டுக்கோட்டை தீர்மானமும் – இன்றய நிலவரமும் கட்டுரைகள் சேனன் 

வட்டுக்கோட்டை தீர்மானமும் – இன்றய நிலவரமும்

04-06-2016ல் நடந்த சொலிடாரிற்றி நாளில் பேசிய கருத்துக்களின் தொகுப்பு – சேனன் 1976ல் உருவான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்(வ.கோ.தீ) முக்கியத்துவம் என்ன? நாற்பது வருடங்களின் பின் அந்த வரலாற்றுக் கட்டத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடியவை என்ன? வ.கோ.தீர்மானம் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. இத்தீர்மானம் உருவாகுவதற்கு முன் நிகழ்ந்த செயற்பாடுகள் அக்காலத்து பெரும்பான்மை தமிழ் அரசியலமைப்புக்களை ஒண்றினைத்தது இன்றும் பலருக்கு கவர்சிகரமாக இருக்கும் ஒரு விசயம். இத்தீர்மானத்தை தொடர்ந்து தமிழ் அரசியல் மையம் தனிநாடு கோரிக்கை நோக்கி... Read More