You are here
பொய்யிலே பிறந்து பொய்யிலே உருளும் பிளேயர். கட்டுரைகள் சேனன் 

பொய்யிலே பிறந்து பொய்யிலே உருளும் பிளேயர்.

-சேனன் இந்தக் கதை ஒரு பகற்கொள்ளைக்காரனின் கதை. பச்சைக் கொலைகள் செய்து பணம் திரட்டியவனின் கதை. கேட்போரின் உயிரணுவின் ஒவ்வொரு துண்டும் துகளும் துடித்துச் சீறிச் சினக்கும் கதை. கோபம் கொப்பளித்துக் கொதித்து உங்களை உருக்கிவிடும் என்பதால் மனதைத் தேற்றிக்கொண்டு மேலே படியுங்கள். சர்வாதிகாரிகளும் மக்கள் நல விரோதிகளும் உலகெங்கும் இருக்கிறார்கள் என்பது எமக்குத் தெரியும். இலங்கையில் இராஐபக்ஷ வட கொரியாவில் கிம் யோன்க் அன். மத்திய கிழக்கில் அசாட் முதற்கொண்டு பலர். கசகிஸ்தானின் நசர்பயாவ் என நீண்டிருக்கும் பட்டியலது. அவர்கள் கொலைகாரர் என்பதை... Read More