You are here
நல்லாட்சியும் பிரதான அபிவிருத்தித் திட்டங்களாக மாறும் சிங்களக் குடியேற்றங்களும் பௌத்த மதபரம்பலும் ஈழம் - இலங்கை கட்டுரைகள் 

நல்லாட்சியும் பிரதான அபிவிருத்தித் திட்டங்களாக மாறும் சிங்களக் குடியேற்றங்களும் பௌத்த மதபரம்பலும்

144 . Views .நுஜிதன் இலங்கையிலே ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு வந்து ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் வடகிழக்கிலே வாழும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் தனியார் காணிகள் இன்னமும் இலங்கை இராணுவத்தினால் அபகரிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்ட நிலையே உள்ளது. இவ்விதமாகத் தமக்கென தனியார் காணிகளை அபகரிப்பதும் பல நூற்றுக்கணக்கான விவசாயிகள்,பொதுமக்கள் மற்றும் மீனவர்களின் பாரம்பரிய வாழ்வாதாரத்துக்கு உலைவைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்து நிரக்கதிக்கு உள்ளாக்குவதும் இலங்கை அரசின் நடைமுடையாக இருந்து வருகிறது. அரசின் நல்லிணக்கம் பற்றிய நேர்மைத் தன்மையை இது கேள்விக்குள்ளாக்கி... Read More
ஈழத்துக்கு எதிரான இலங்கை மாவோயிச பார்வை ஈழம் - இலங்கை கட்டுரைகள் சேனன் 

ஈழத்துக்கு எதிரான இலங்கை மாவோயிச பார்வை

102 . Views .வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை – என்ற சி க செந்தில்வேல் அவர்களின் நூலினை முன் வைத்து… 1 தேசியம் பற்றிய சரியான நிலைபாடு எடுக்காது,  போல்சுவிக்குகள் இரஷ்யப் புரட்சியை ஒரு சோசலிசப் புரட்சி நோக்கி நகர்த்தியிருக்க முடியாது. தேசியம் பற்றிய தெளிவான பார்வை புரட்சியை முன்னடத்த மட்டுமல்ல, புரட்சிகர கட்சியை கட்டுவதற்கும் அவசியம். இரஷ்யப் பெரும் தேசிய இறுகிய பிடிக்குள்ளும், பல் தேசிய அடையாளங்களை புரட்சிகர மாற்றுக்காக வென்றெடுக்கும் வேலையை செய்தனர் போல்சுவிக்குகள். இதற்காக தேசியம் பற்றிய தெளிவான... Read More
பொருளாதார நெருக்கடியின் மூன்றாம் கட்ட வீழ்ச்சியின் சாத்தியமும் -தெற்காசியாவும் இந்தியா ஈழம் - இலங்கை கட்டுரைகள் சர்வதேசம் சேனன் 

பொருளாதார நெருக்கடியின் மூன்றாம் கட்ட வீழ்ச்சியின் சாத்தியமும் -தெற்காசியாவும்

732 . Views . உலகப் பொருளாதார நெருக்கடியின் மூன்றாம் கட்ட வீழ்ச்சியின் சாத்தியம் நவ காலனித்துவ நாடுகளைச் சுற்றி இருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. குறிப்பாக்க சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இது அந்த நாட்டின் அரசியல் நடைமுறைகளிலும் பாரிய மாற்றை கொண்டுவந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் வரும் புதிய நெருக்கடி இந்த நாடுகளுக்குள்ளேயே குறுகி நின்று அழிந்து விடும் என எதிர்பார்ப்பதும் தவறு. உலகப் பொருளாதாரத்தின் 58% பகுதி ‘வளர்ந்து வரும்’ நாடுகள் எனச் சொல்லப்படும்... Read More
உச்சத்தில் இருக்கும் பெட்ரோல் டீசல் விலை! செய்திகள் செயற்பாடுகள் தமிழ்நாடு 

உச்சத்தில் இருக்கும் பெட்ரோல் டீசல் விலை!

79 . Views .உச்சத்தில் இருக்கும் பெட்ரோல் டீசல் விலை! – தினசரி விலை நிர்ணய கொள்கையை உடனடியாக திரும்ப பெறு. – மத்திய, மாநில அரசுகளே பெட்ரோல் டீசல் மீதான மறைமுக வரிகளை ரத்து செய். – எண்ணெய் நிறுவனங்களை உழைப்பாளர்கள் கட்டுபாட்டில் பொதுவுடமையாக்கு. 2017 ஜுன் 16-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிர்ணயித்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனால் பெட்ரோல் டீசலின் விலை தினமும் மாறிக்கொண்டே இருக்கின்றது. இம்முறை அமலுக்கு... Read More
வளங்களை வேட்டையாடும் வேதாந்தா இந்தியா கஜமுகன் கட்டுரைகள் சர்வதேசம் தமிழ்நாடு 

வளங்களை வேட்டையாடும் வேதாந்தா

86 . Views .அண்மையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையையை மூடக் கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில், அரசு மேற்கொண்ட அரச பயங்கரவாதத்தில்  பதின்மூன்று பொது மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்ததும் இருந்தனர். வேதாந்தா போன்ற காப்ரேட் நிறுவனங்களின் நலனுக்காக தனது சொந்த மக்களையே குருவிகளை சுடுவது போல் சுட்டு கொன்றது மோடி/தமிழ்நாடு அரசு. காப்ரேட்டின் நலனுக்காக எந்த எல்லை வரைக்கும் இவ்வரசு செல்லும் என்பதையே மேற்படி தூத்துக்குடி சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது. தமது உரிமைகளுக்காக குரல் கொடுக்கக் கூடாது, ஒடுக்குமுறைகளை எதிர்க்கக்கூடாது, பிளவுபட்டிருக்கும்... Read More
பசுமை அழிப்பு சாலையை உடனடியாக கைவிடு இந்தியா கட்டுரைகள் தமிழ்நாடு 

பசுமை அழிப்பு சாலையை உடனடியாக கைவிடு

154 . Views .மத்திய அரசின் பாரத்மலா ப்ரயோஜனா திட்டத்தின்கீழ் சேலம் – சென்னை இடையே ரூ 10,000 கோடி மதிப்பீட்டில் புதிய 8 வழி (பசுமை?) விரைவு சாலை அமைத்திடும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். ஏற்கனவே இருக்கும் 4வழிச்சாலையில் எவ்வித பிரச்சனைகளும் இல்லாத நிலையில் யாருக்காக இத்திட்டம்.? சேலத்திலிருந்து அரூர், ஊத்தங்கரை,செங்கம்,போளூர் ஆற்காடு திருவண்ணாமலை& காஞ்சிபுரம் மாவட்ட வழியாக தாம்பரம் முதன்மைச் சாலையை அடையும் வகையில் புதிய 8 வழி சாலை அமைக்கப்பட இருக்கிறது இதனால்... Read More
விசேட அதிரடிப் படையினரின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய ITJP அறிக்கை: பாகம் 2 ஈழம் - இலங்கை கஜமுகன் கட்டுரைகள் 

விசேட அதிரடிப் படையினரின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய ITJP அறிக்கை: பாகம் 2

382 . Views .2016 இலிருந்து  இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதரகமானது இலங்கையின் காவல்  துறையின் சீர்திருத்தத்திற்கு உதவி செய்வதோடு மட்டுமல்லாமல் விசேட அதிரடிப் படையினரின் பயிற்சித் திட்டம் தொடர்பான கூட்டங்களிலும் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. யுத்தம் நிறைவடைந்த பின்னரும் கூட 3500 ற்கும் மேற்பட்ட  காவல்துறையினருக்கு விசேட அதரடிப் படையினர்க்கான பயிற்சியை வழங்கியுள்ளது பிரித்தானியாவின்  ஸ்காட்லாந்துயார்ட் போலீஸ்.  விசேட  அதிரடிப் படையினரின் வளர்ச்சியின் பின்னணியில் இலங்கை அரசு மட்டுமல்ல, பிரித்தானிய அரசும் இருக்கிறது என்பதுதான் மறைமுக உண்மை அண்மையில் லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை நோக்கி கழுத்தை வெட்டுவேன்... Read More
சொலிடாரிட்டி நாள் 2018 நிகழ்வு செய்திகள் செயற்பாடுகள் நிகழ்ச்சி பிரித்தானியா லாவண்யா 

சொலிடாரிட்டி நாள் 2018 நிகழ்வு

178 . Views .இந்த வருடம்  சொலிடாரிட்டி நாள் 16 ம் திகதி சனிக்கிழமை INDIAN YMCA இல் நடைபெற்றது. இந்நிகழ்வு 12 மணி அளவில் ஆரம்பித்தது. இதில் பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் அமைப்புக்கள், இளைஞர்கள், செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கங்கள்,  உறுப்பினர்கள், மற்றும் ஆதரவாளர்கள் கலந்துக் கொண்டனர்.   இதில் முதல் நிகழ்வாக அரசியல் கலந்துரையாடல்கள், விவாதங்கள் இடம்பெற்றது. இந்நிகழ்வை பா. நடேசன் (National Coordinating member of Tamil Solidarity) தொகுத்து வழங்கினர். இதில் சேனன் (International Coordinator) தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின் அரசியல் நிலைபாட்டினையும்... Read More
போராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 3 கட்டுரைகள் சேனன் பிரித்தானியா 

போராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 3

200 . Views .5. உருட்டல் மிரட்டல்களை நிறுத்துங்கள். ஒரு நிகழ்வை குழப்புவது – அடாவடியாக நடப்பது – அதிகாரத்தை காட்ட முயல்வது போற்ற செயல்கள் தவறு. அத்தகைய நடைமுறைகளை தமிழ் சொலிடாரிட்டி ஊக்குவிப்பதில்லை. டி சி சி யில் இருக்கும் சிலருக்குத்தான் அது கைவந்த கலை. இவர்கள் கூட்டங்களில் செய்யும் அடாவடித் தனங்கள் அனைவரும் அறிந்ததே. இந்த வருடம் நடந்த முள்ளிவாய்க்கால் நிகழ்வில் குழப்பும் நோக்கத்தோடு தோழர்கள் கலந்து கொள்ளவும் இல்லை – அந்த நோக்கத்தில் இயங்கவும் இல்லை. அப்படி நோக்கில் சென்றிருப்போமாயின்... Read More
போராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 2 கட்டுரைகள் சேனன் பிரித்தானியா 

போராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 2

250 . Views .3 போராட்ட திரட்சியாக ஒழுங்கமைப்பது என்றால் என்ன? அதிகார சக்திகள் மேடை ஏற்றப்பட்டு எமக்கு வியாக்கியானம் கொடுப்பதும் – அழுது காட்டுவதும் வேண்டாம். எமது கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமானால் அவர்களை அழையுங்கள். மக்களின் முதுகில் நின்று மக்களின் நலனுக்கு எதிராக இயங்கும் யாவரும் போராட்ட சக்திகளின் எதிரிகளே. பேச்சளவில் இன்றி அரசியல் ரீதியாக எமது நலனுக்கு உடன்படும் சக்திகளின் நட்பை திரட்டும் முயற்சியை நாம் செய்யலாம் – அத்தகையவர்களை அழைத்து மேடை ஏற்றுங்கள். அதிகார சக்திகளின் சின்னங்களை புறந்தள்ளுங்கள்.... Read More
விசேட அதிரடிப் படையினரின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய ITJP அறிக்கை: பாகம் 1 ஈழம் - இலங்கை கஜமுகன் கட்டுரைகள் 

விசேட அதிரடிப் படையினரின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய ITJP அறிக்கை: பாகம் 1

116 . Views .விசேட அதிரடிப் படையினரின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய ITJP அறிக்கை சர்வதேச உண்மைமற்றும் நீதிக்கான செயற்திட்டம் (ITJP – International Truth and Justice Project) என்னும் அமைப்பானது இடைநிலை நீதி நிபுணர் ஜஸ்மின் சூக்காவின் வழிகாட்டலின் கீழ் தென் ஆபிரிக்காவிலுள்ள மனித உரிமைகளுக்கான அமைப்பினால் (Foundation for Human Rights)  நடாத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட ITJP இன் அறிக்கையானது ஒரு சில குறைபாடுகளைக் கொண்டிருந்த போதும் தற்போதைய சூழலில் மிக முக்கியமானதாகக் கவனத்திற் கொள்ள வேண்டிய ஒரு அறிக்கை ஆகும். ஏனெனில் இதுவரை வெளிவந்த போர்க்குற்றம் தொடர்பான அறிக்கைகளில் சாட்சியங்களாக... Read More
போராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 1 கட்டுரைகள் சேனன் பிரித்தானியா 

போராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 1

328 . Views .1 மே மாதம் 18ம் திகதி 2009 ஆண்டு முள்ளிவாய்க்காளில் என்ன நடந்தது? சிங்கள இனவெறியர்களுக்கு இது யுத்தம் வென்ற வெற்றிக் களிப்பு நாள். சமரச வாதிகளுக்கு ‘ஒருபடியாக யுத்தம் முடிவுக்கு வந்த’ நாள். வலதுசாரிகளுக்கு புதிய புதிய லாபங்கள் கண்ணுக்குத் தெரிந்த நாள். மேற்கு அரசுகளுக்கு தொலைந்து கொண்டிருந்த தெற்காசிய நலன் ஓன்று மீளத் தொடங்கிய நாள். சீனாவுக்கு தன் நலனுக்கு ரோட்டுப் போட்ட நாள். கூட்டமைப்புக்கு ‘கூட்டுக்கு’ ஒரு புது அர்த்தம் பிறந்த நாள். புலி எதிர்ப்பாளர்களுக்கு... Read More
ஜோர்டான்: மக்கள் எழுச்சி கட்டுரைகள் சத்யா ராஜன் சர்வதேசம் 

ஜோர்டான்: மக்கள் எழுச்சி

329 . Views .முன் எப்பொழுதும் காணாத  ஆர்ப்பாட்டங்கள், பொது வேலைநிறுத்தம் என ஜோர்டானிய ராஜ்யமே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. அல்பானியா நகரத்திற்கு சென்றிருந்த மன்னர் அப்துல்லா, உடனடியாக நாடு திரும்பி பிரதம மந்திரி ஹனி அல் முல்கீயை பதவி நீக்கம் செய்ததன் மூலம் இவ்வெழுச்சியை கட்டுப்படுத்த முயன்றுள்ளார். வாழ்க்கைச் செலவீனம் அதீதமாக உயர்ந்ததும், அரசு இயந்திரம்  ஊழல் மயம் ஆனதுக்கும் எதிராக எழுந்த கொந்தளிப்பு – அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை ரத்து செய்துவது மட்டுமின்றி ஒருபடி மேலே சென்று பிரதமரை நீக்கும் அளவுக்கு சென்றுள்ளது. இப்போராட்டம்... Read More
தூத்துக்குடியில் ஸ்டேர்லைட் ஆலையை மூட கோரி மக்கள் முன்னெடுத்த நூறு நாள் அமைதிப் பேரணி தமிழக அரசால் திட்டமிட்டு வன்முறையாக மாற்றப்பட்டு 13 உயிர்கள் பலியானதைக் கண்டித்து தமிழ் சொலிடரிட்டி அமைப்பு லண்டனில் இந்திய தூதரகம் முன் போராட்டம் இந்தியா சர்வதேசம் செய்திகள் செயற்பாடுகள் பிரித்தானியா 

தூத்துக்குடியில் ஸ்டேர்லைட் ஆலையை மூட கோரி மக்கள் முன்னெடுத்த நூறு நாள் அமைதிப் பேரணி தமிழக அரசால் திட்டமிட்டு வன்முறையாக மாற்றப்பட்டு 13 உயிர்கள் பலியானதைக் கண்டித்து தமிழ் சொலிடரிட்டி அமைப்பு லண்டனில் இந்திய தூதரகம் முன் போராட்டம்

237 . Views .தூத்துக்குடியில் ஸ்டேர்லைட் ஆலையை மூட கோரி மக்கள் முன்னெடுத்த நூறு நாள் அமைதிப் பேரணி தமிழக அரசால் திட்டமிட்டு வன்முறையாக மாற்றப்பட்டு 13 உயிர்கள் பலியானதைக் கண்டித்து தமிழ் சொலிடரிட்டி அமைப்பு நேற்று (சனிக்கிழமை) மூன்று மணி அளவில்  இந்திய தூதரகம் முன்பு ஒரு போராட்டத்தை முன்னெடுத்தது. ஈழம் மற்றும் தமிழ் நாட்டுத் தமிழர், குழந்தைகள் என மூண்ணூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.   இதில் போராட்டத்தின் தொடக்கத்தில் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான அப்பாவி பொது... Read More
படுகொலை செய்யும் வேதந்தாவுக்கு எதிராகத் திரள்வோம் அறிவிப்பு இந்தியா கட்டுரைகள் சத்யா ராஜன் பிரித்தானியா 

படுகொலை செய்யும் வேதந்தாவுக்கு எதிராகத் திரள்வோம்

98 . Views .சத்யா ராஜன் தூத்துக்குடியில்  ஸ்டேர்லைட் ஆலையை மூடக் கோரி மக்கள் நடத்திய போராட்டம் தமிழ் நாட்டு அரசால் கடும் வன்முறை மூலம் முடக்கப் பட்டு வருகிறது. இதுவரை இறந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இது திட்டமிட்ட அரச பயங்கரவாதம். எதிர்ப்பை அடக்க மக்களை பதட்ட நிலையில் வைத்திருக்கிறது தமிழ் நாடு அரசும் காவல்துறையும். தூத்துக்குடி,  திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கண்டித்து தமிழ் நாட்டிலும் சர்வவதேசமெங்கும் வாழும் தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை பதிந்து... Read More
பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் சர்வதேசம் செய்திகள் செயற்பாடுகள் பிரித்தானியா 

பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

175 . Views .முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தின் ஒன்பதாவது வருடம் பிரித்தானியாவில் வாழும்  தமிழர்களால் நினைவு கூறப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தின் ஒன்பதாவது வருடத்தில் “இறந்தவர்களை நினைப்போம், இருப்பவர்களுக்காய் போராடுவோம்” என்ற தொனிப்பொருளில்  தமிழ் சொலிடாரிட்டியானது  தனது நிகழ்வுகளை முன்னெடுத்தது. அதனடிப்படையில் தமது எதிர்கால  செயற்திட்டம் தொடர்பாகவும், பல்லின மக்கள் மற்றும் பல்லின அமைப்புக்களுடன் இணைந்து தாம் பணியாற்றி வருவதன் நோக்கத்தையும் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினர் நேரலையில் தெளிவுபடுத்தியிருந்தனர். அத்துடன் இலங்கையிலிருந்து செயற்படும் ஒடுக்கப்படும் மக்களுக்கான தளத்தின் உறுப்பினர்கள் தமது செயல்திட்டம் மற்றும் உந்துருளிப்... Read More
அரசியல் மயப்படுத்தப்படவேண்டிய முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அறிவிப்பு இந்தியா ஈழம் - இலங்கை கஜமுகன் கட்டுரைகள் 

அரசியல் மயப்படுத்தப்படவேண்டிய முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

323 . Views .ஈழத்தில் இயங்கும் ஒடுக்கப்படும் மக்கள் தளம், மற்றும் தமிழ் சொலிடாரிட்டி ஆகிய அமைப்புக்கள் சார்ப்பாக – கஜன்.   முள்ளிவாய்க்கால் நினைவு தினம் என்பது வெறுமனே மே 18 ஆம் திகதி மக்கள் அனைவரும் கூடித் திரண்டு அழுது புலம்பி கண்ணீர் விட்டு பின்னர் கலைந்து செல்லும் நிகழ்வு அல்ல. வருடத்துக்கு ஒரு முறை வெறுமனே சடங்குகளுடனும், சம்பிரதாயங்களுடனும் நடாத்தப்படும் ஒரு நாள் நிகழ்வு அல்ல. அது ஒரு அரசியல் நிகழ்வு. மக்களை ஒன்று திரட்டி, அரசியல் மயப்படுத்தப்படுத்தி போராட்டத்தை... Read More
முள்ளிவாய்க்கால் பேரவலம் அடுத்த கட்ட போராட்டத்தின் உந்துதலாக இருக்க வேண்டும் ஈழம் - இலங்கை கட்டுரைகள் சத்யா ராஜன் 

முள்ளிவாய்க்கால் பேரவலம் அடுத்த கட்ட போராட்டத்தின் உந்துதலாக இருக்க வேண்டும்

327 . Views .சத்யா ராஜன் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலுள்ள மக்கள் போர் என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகுகின்றது. உலகம் முழுவதும், தமிழ் மக்கள் வாழ்ந்த இடங்களிலெல்லாம், யுத்தத்தை நிறுத்த எதிர்ப்புக்கள் எழுந்தன. லண்டன் தெருக்களில் லட்சக்கணக்கான  மக்கள் ‘தமிழ் மக்களின் படுகொலை நிறுத்து’ என்ற கோஷங்களுடன் கூடினர். அதன்பின் என்ன நடந்தது? புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகள் தங்களை தமிழீழத்தின் பிரதிநிதிகளாகக் கூறுகின்றன, அவர்கள் இதுவரை என்ன செய்துள்ளனர்? ஸ்ரீலங்காவின் வடக்கு மற்றும்... Read More
இலக்கை நோக்கி நகரும் இரணைதீவு மக்களின் நில மீட்புப் போராட்ம் ஈழம் - இலங்கை கட்டுரைகள் ஜெனா 

இலக்கை நோக்கி நகரும் இரணைதீவு மக்களின் நில மீட்புப் போராட்ம்

409 . Views .ஜெனா மக்களின் நிலமீட்புப் போராட்டங்கள் பல திசைகளிலும் நீண்டுவரும் நிலையில் தம் சொந்த நிலத்தில் மீள் குடியமர வேண்டும் என்ற பேரவா கொண்டு மண்மீட்புப் போராட்டத்தில் இணைந்த மக்களை சந்திக்கும் வாய்ப்பு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான எமது தளத்தின் அங்கத்தவராக இருந்ததால் எனக்கும் கிடைத்து. காலை 11.00 மணியளவில் நாச்சிக்குடா கடற்கரையை அடைந்தோம். படகெதுவும் இல்லாமையால் அவ்விடத்தில் நீண்ட நேரம் காத்திருப்பின் பின்னரான படகின் வருகையைப் பார்க்க பரவசமூட்டியது. என்னுடன் சேர்த்து வருகை தந்த பத்துப் பேரும் ஓடிச் சென்று... Read More
புதிய ஒப்பந்தத்தை வழங்கக்  கோரி பிரித்தானிய மக்களின் போராட்டம் செய்திகள் செயற்பாடுகள் பிரித்தானியா 

புதிய ஒப்பந்தத்தை வழங்கக் கோரி பிரித்தானிய மக்களின் போராட்டம்

137 . Views .பிரித்தானியாவின் உழைக்கும் மக்கள் கலந்துகொண்ட மாபெரும் பேரணி ஒன்று நேற்று இடம்பெற்றது. TUC அமைப்பினர் ஒழுங்கு செய்திருந்த இப்ப்போரட்டத்தில் UNISAN (யு னிசன்), UNITE(யுனைட்), சோசலிசக்கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டன. தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினரும் இப்பேரணியில் கலந்து கொண்டு  தமது ஆதரவை வழங்கியிருந்தனர். பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் 5.5 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை கொண்ட TUC அமைப்பானது தொழிலாளர்களுக்கு “புதிய தொழில் ஒப்பந்தத்தை வழங்க வேண்டும்”  என்ற பிரதான கோரிக்கையை முன்வைத்து  நேற்றைய போராட்டத்தை ஒழுங்கு செய்திருந்தமை... Read More