You are here
இலங்கை அரசு யுத்தக் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது- தமிழ் சொலிடாரிட்டி குற்றச்சாட்டு. அறிவிப்பு செய்திகள் செயற்பாடுகள் பிரித்தானியா 

இலங்கை அரசு யுத்தக் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது- தமிழ் சொலிடாரிட்டி குற்றச்சாட்டு.

478 Views .இலங்கையின் 70வது சுதந்திரத் தினத்தன்று லண்டனில் இலங்கை தூதரகத்துக்கு முன் எதிர்ப்புக் காட்ட குவிந்து நின்றவர்களின் கழுத்தை வெட்டுவேன் என சைகை காட்டிய பிரிகேடியர் பிரியங்கார பெர்னாண்டோ நாட்டுக்கு திருப்பி அழைக்கப் பட்டிருக்கிறார். இருப்பினும் அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பதை அரச தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போதைய இலங்கை அரசு யுத்தக் குற்றவாளிகளைக் காப்பாற்றும் அரசு என்ற குற்றச்சாட்டை வைத்திருக்கிறது லண்டன் போராட்டத்தை ஒழுங்கமைத்த தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு. தமிழ் சொலிடாரிட்டியின் ஊடக அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் விபரங்கள் வருமாறு.... Read More
இராணுவ அதிகாரி பிரியங்கா பெர்னாண்டோக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்திகள் செயற்பாடுகள் பிரித்தானியா 

இராணுவ அதிகாரி பிரியங்கா பெர்னாண்டோக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

38 Views .கடந்த பெப்ரவரி நான்காம் திகதி இலங்கையின் எழுபதாவது சுதந்திர தினத்தை புறக்கணிக்கும் முகமாக லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் யாருக்காக இந்த சுதந்திரம் என்ற தொனிப் பொருளில் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பானது ஆர்பாட்டம் ஒன்றை நிகழ்த்தியிருந்தது. அதன்போது இராணுவ அதிகாரி பிரியங்கா பெர்னாண்டோ கழுத்தை வெட்டுவேன் என்று விரல் மூலம் சைகை செய்து அமைதியாக போராட்டம் செய்த மக்களை அச்சுறுத்தினார். நல்லிணக்கம் என்ற பெயரில் நல்லாட்சி செய்யும், பெளத்த சிங்கள பேரினவாதத்தின் உண்மையான இரட்டை முகத்தினையே மேற்படி சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது. அதனைக்... Read More
எமது அரசியல் , அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க நாமே போராடுவோம். செய்திகள் செயற்பாடுகள் பிரித்தானியா 

எமது அரசியல் , அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க நாமே போராடுவோம்.

11 Views .4ஆம் திகதி சுதந்திர தினம் அன்று இலங்கை தூதரகம் முன்னால் தமிழ் சொலிடாரிட்டி நடாத்திய ஆர்ப்பாட்டதில் பங்குபற்றியவர்களை நோக்கி கழுத்தை வெட்டுவேன் என்று சைகை காட்டினார் இலங்கை இராணுவ உயர் அதிகாரி. கழுத்து வெட்டுவது அவர்களுக்கு ஒன்றும் புதிய  விடயமல்ல. இலங்கை இராணுவமும் , சிங்கள பௌத்த பேரினவாத அரசும்  மக்கள் . போராளிகள் , செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலரின் கழுத்துக்களை வெட்டி பரீட்சையமானவர்கள் தான். நல்லிணக்க , நல்லாட்சி என்று கூறி கொண்டு லண்டனில் வைத்தே  போராடிய மக்களை... Read More
இது அஞ்சலி அல்ல கட்டுரைகள் சேனன் பார்வை 

இது அஞ்சலி அல்ல

72 Views .இது அஞ்சலி அல்ல. அதை எழுத எனக்கு அருகதை இல்லை. அஞ்சலிகள் எழுதுவதுமில்லை. கால தூரத்தில் தொங்கி மறைந்த நினைவுத் துகள் ஓன்று ஒரு மரணத்தில் தூசி தட்டி கிளம்பியதன் விளைவு இது. கவிஞர் செழியன் இறந்து போனார் என்றது அறிந்ததும்…ஆ.. இலக்கியத்துக்கு இன்னுமொரு இறப்பும் இழப்பும் என எண்ணத் தோன்றியதே தவிர வேறு எந்த எண்ணமும் தோன்றவில்லை. ஆனால் சில பதிவுகள் அவசியம் – எழுதித்தான் ஆகவேண்டும். என் போன்றவர்களுக்கு சேரனுக்கு முதல் செழியனைத் தெரியும். கவிதைக்கு முன் செய்யுள்... Read More
சிறிலங்காவின் 70ஆவது சுதந்திர தினத்தை எதிர்த்து பிரித்தானியாவில் போராட்டம் செய்திகள் செயற்பாடுகள் பிரித்தானியா 

சிறிலங்காவின் 70ஆவது சுதந்திர தினத்தை எதிர்த்து பிரித்தானியாவில் போராட்டம்

31 Views .இலங்கை தனது 70ஆவது சுதந்திர தினத்தை பெப்ரவரி 4ஆம் திகதி கொண்டாடியது. இதனை கொண்டாடும் விதமாக பிரித்தனியாவின் லண்டன் நகரில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தினால் அனைத்து இலங்கை மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதே நேரம் , அதே இடத்தில்  சுதந்திரம் யாருக்கானது என்ற தொனி பொருளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்பட்டிருந்தது. தமிழ் சொலிடாரிட்டி , தமிழர் ஒருங்கிணைப்பு குழு , நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பன ஒன்றிணைந்து இந்த போராட்டதிற்கான அழைப்பை விடுத்திருந்தன.   காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கே?... Read More