You are here

Written by 

மியன்மார் தேசத்தின் முள்ளிவாய்க்கால் – ரோஹிங்கிய (பாகம் – 02) கஜன் கட்டுரைகள் 

மியன்மார் தேசத்தின் முள்ளிவாய்க்கால் – ரோஹிங்கிய (பாகம் – 02)

“ஆங்சாங் சூகியின் எண்ணமானது ரோஹிங்கிய மக்களுடன் யுத்தம் புரிவதல்ல, மாறாக அம்மக்கள் அகதிமுகாமிலிருந்தோ அல்லது தப்பித்து செல்லும்போது கடலினுள் விழுந்தோ இறந்து போகட்டும்” என்பதே அவரின் எண்ணமாக இருக்கிறது என்றார் சமீபத்தில் மியான்மாரிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட அகதி ஒருவர். இதுதான் தற்பொழுது ஆங்சாங் சூகியைப் பற்றிய மக்களின் பார்வையாக உள்ளது ஆங்சாங் சூகி – மியன்மார் வன்முறை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் காலத்திலிருந்து உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெயர் இதுதான். ரோஹிங்கிய மக்களை காப்பாற்றக்கூடிய அதிகாரம் தன்வசம் இருந்தும் அதைப்  பயன்படுத்தாமல் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்தான் இந்த... Read More
பிரித்தானியாவில் பிரதமரின் வாசஸ்தலத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டம் செய்திகள் செயற்பாடுகள் 

பிரித்தானியாவில் பிரதமரின் வாசஸ்தலத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டம்

இன்று (22.10.2017) பிரித்தானியாவில் தமிழர்கள் ஓர் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியிருந்தார்கள். இதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்து இருந்தது. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அரசியல் கைதிகளை உடன் விடுவிக்கப்பட வேண்டும். இராணுவம் அபகரித்து தம் வசம் வைத்துள்ள மக்களின் காணி நிலங்களை மீள கையளிக்க வேண்டும். வலிந்து காணாமல் செய்யப்பட்டவர்கள் தொடர்பான உண்மையான விபரங்கள் வெளியிடப்பட வேண்டும். இந்த முன்று கோரிக்கைகளை முன் வைத்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது. இந்த கவனயீர்ப்பு போராட்டம் இலங்கையில் நடைபெற்றுகொண்டிருக்கும் மக்கள்... Read More
கற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் – பகுதி 02 கட்டுரைகள் நடேசன் 

கற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் – பகுதி 02

2015 செப்டேம்பர்  இல் நடைபெற்ற கற்றலோனியா பாராளுமன்ற தேர்தல் சுதந்திர கற்றலோனியாவிற்கான பொது  வாக்கெடுப்பு போலவே நடந்தேறியது.  பிராந்தியத்தின் இரு பெரும் கட்சிகளான CDC (Democratic Convergence of Catalonia) மற்றும் ERC (Republican Left of Catalonia ) சுதந்திரத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் Junts Pel Si ( Together for Yes ) எனும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டன. 135 ஆசனங்களை கொண்ட கற்றலோனியா பாராளுமன்றத்திற்கான தேர்தலில் 39 சதவீத வாக்குகளை பெற்று 62 ஆசனங்களுடன் பெரும்பான்மையை தக்கவைத்தது. இது... Read More
மியன்மார் தேசத்தின் முள்ளிவாய்க்கால் – ரோஹிங்கிய (பாகம் – 01) கஜன் கட்டுரைகள் 

மியன்மார் தேசத்தின் முள்ளிவாய்க்கால் – ரோஹிங்கிய (பாகம் – 01)

மதமும் அரசியலும் சேர்ந்தால் பற்றி எரிவதற்கு எண்ணெய் தேவையில்லை. இலங்கை, இந்தியா, இஸ்ரேல், அரபு நாடுகள் போன்றன அதற்கு மிகச் சிறந்த உதராணம். அதன் வரிசையில் அண்மைக்கால உதாரணமாக இருப்பது மியன்மார் தேசம். பெளத்தமதமும் அரசியலும் இணைந்து எண்ணெய்யே இல்லாமல் பற்றிக் கொண்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் ARSA (Arakan Rohingya Salvation Army) என்ற அமைப்பு முப்பது போலீஸ் மற்றும் இராணுவ நிலைகளைத் தாக்கியதைத் தொடர்ந்து  வெடித்த கலவரம் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற அரச பயங்கரவாதத்தால் பல லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துவிட்டனர்.... Read More
கற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் பகுதி 01 கட்டுரைகள் நடேசன் 

கற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் பகுதி 01

ஐரோப்பாவில் பிரித்தானியா மக்களின் பிரெக்ஸிட் ஆதரவான வாக்களிப்பினை தொடர்ந்து கற்றலோனியா பிராந்தியத்தின் இன்றைய நிலை ஐரோப்பாபாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் தெற்கு மலை தொடரால் பிரிக்கப்பட்டு,  ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் பிரதேசம் கற்றலோனிய ஆகும். கற்றலன் மொழி பேசும் மக்கள் Valencia , the Balearic Islands , Aragon மற்றும் Catalonia ஆகிய ஸ்பெயினின் பிராந்தியங்களிலும் பிரான்ஸ் , இத்தாலி ஆகிய நாடுகளின் சில இடங்களிலும் பரவி வாழ்கின்றனர். ஸ்பெய்னின் 17 தன்னாட்சி கொண்ட பிராந்தியங்களில்  கற்றலோனியா 7.5... Read More
தேசியமும் – சாதிய ஒழிப்பும் கட்டுரைகள் சேனன் 

தேசியமும் – சாதிய ஒழிப்பும்

சாதி ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தமிழ் தேசிய அபிலாசைகளுக்கு எதிர் திசையில் நிற்பதாக சிலர் இன்று பேசி வருகின்றனர். சாதி ஒழிப்பு நடவடிக்கைகளை தமிழ் தேசிய அபிலாசைகளுக்கு எதிர் திசையில்தான் – ஓட வேண்டும் என சிலர் வாதிக்கின்றனர். இத்தகைய விவாதங்கள் புதியவை இல்லை. அனிதாவின் இறப்பை ஒட்டி – குறிப்பாக பிரபல திரைப்பட இயக்குனர்கள் அமீர் மற்றும் ரஞ்சித் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட வாக்கு வாதங்களை ஒட்டி இந்த உரையாடல்கள் நிகழ்ந்து வருகின்றன. ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தை கட்டுவது எவ்வாறு என்ற அடிப்படையில்... Read More
லண்டனில் NEET சட்டம் எரிக்கப்பட்டது செய்திகள் செயற்பாடுகள் 

லண்டனில் NEET சட்டம் எரிக்கப்பட்டது

லண்டனில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முன் 09.09.17 அன்று  11:00 மணியளவில் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் NEET இனை தடை செய்ய கோரியும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இந்த ஆர்பாட்டத்தில் வீரத்தமிழர் முன்னணி தமிழ் சொலிடாரிட்டி , விடுதலைக்கான குரல் – பறை மற்றும் அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் – லண்டன் ஆகிய அமைபுக்கள் கலந்து கொண்டன.  NEET என்பது ஒடுக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் கல்வி மீது தொடுக்கப்பட்ட வன்முறையே என்பது அனைவரதும் கருத்தும் உணர்வுமாய் இருந்தது.... Read More
சைபர்  தாக்குதலின் பின்னணியில் பிட்காயின் (Bitcoin) கஜன் கட்டுரைகள் 

சைபர் தாக்குதலின் பின்னணியில் பிட்காயின் (Bitcoin)

உலகளாவிய ரீதியில் பல்வேறு தொலைக்காட்சி நாடகங்களையும், திரைப்படங்களையும் தயாரித்து வழங்கும் HBO (Home Box Office) என்னும் நிறுவனத்தின் இணையதளம் கடந்த ஜூலை மாதம் சைபர் தாக்குதலுக்குள்ளானது. மிஸ்டர் ஸ்மித் ( Mr. Smith) என அழைக்கப்படும் ஹக்கர் குழுவே இத்தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. மிகப் பிரபலமான தொலைகாட்சித் தொடரான கேம் ஒப் திரோன்ஸ் ( Game Of Thrones) நிகழ்ச்சியின் ஸ்கிரிப்ட், தொடரின் இதுவரை வெளிவராத பாகங்கள், நடிகர்களின் தனிப்பட்ட விபரங்கள், தொலைபேசி இலக்கங்கள், சந்தைபடுத்தும் ஆவணங்கள் (Marketing Materials), நிறுவனம் எதிர்கொள்ளும் சட்டப்... Read More
இலங்கையின் இலவசக் கல்விக்கு வேட்டு வைக்கும் சைட்டம் (SAITM) கஜன் கட்டுரைகள் 

இலங்கையின் இலவசக் கல்விக்கு வேட்டு வைக்கும் சைட்டம் (SAITM)

உணவு, உடை, உறையுள் போன்றன எவ்வாறு மனிதனுக்கு அடிப்படை உரிமையோ அதே போல் கல்வியும் ஒரு அடிப்படை உரிமை ஆகும். கல்விக்கான உரிமைகள் மறுக்கப்படும்போது அல்லது கல்வி வியாபாரமாக்கப்படும்போது மாணவர்கள் போராடுவது தவிர்க்க முடியாததொன்றாகும். இலங்கை அரசானது அதன் யாப்பில் குறிப்பிடப்பட்டது போல் ஜனாநாயக சோசலிசக் குடியரசு எனின் குறைந்த பட்சம் தன் நாட்டு மக்களுக்கு உணவு, உடை உறையுள்,கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளையாவது அனைவருக்கும் வழங்க வேண்டும். தவிர, சுய லாபம் கருதி தனியாருக்கு அவற்றை விற்கக்கூடாது.... Read More
பிரித்தானியாவில் ஈழ அகதிகளின் நிலை கட்டுரைகள் நடேசன் 

பிரித்தானியாவில் ஈழ அகதிகளின் நிலை

மெல்பேர்ணிலிருந்து வெளியாகும் மாதாந்த பத்திரிகை எதிரொலி – ஓகஸ்ட் 2017 பதிப்பில் வெளியாகிய நடேசனின் கட்டுரை 1980 களில் இருந்து புலம் பெயர்ந்து பிரித்தானியா உட்பட பல நாடுகளுக்கு புகலிடம் தேடி செல்ல தொடங்கினர் பெருமளவான ஈழ தமிழ் மக்கள். அவ்வாறு பிரித்தானியாவில் வந்து குடியேற தொடங்கியவர்கள் குறுகிய காலத்தில் மிகவும் பலமடைந்த ஓர் சமூகமாக தம்மை நிலை நிறுத்தியுள்ளது. 2006 ற்கு பின்னர் தாயகத்தில் ஏற்பட்ட சூழ் நிலையால் அதிகமான இளையோர் புலம் பெயர்த்து வரத் தொடங்கினர். உலக அரங்கில் ஏற்பட்ட மாற்றங்களும்... Read More
09.07.2017 அன்று பிரித்தானிய தமிழர் பேரவையால் நடாத்தப்பட்ட கூட்டத்தின் அறிக்கை கட்டுரைகள் நடேசன் 

09.07.2017 அன்று பிரித்தானிய தமிழர் பேரவையால் நடாத்தப்பட்ட கூட்டத்தின் அறிக்கை

பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) ஆலோசனைக் கூட்டம் ஒன்றுக்கு எல்லா அமைப்புக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அழைக்கப் பட்டோர் மட்டும் பங்குபற்றிய இந்தக் கூட்டம்  ஈலிங் அம்மன் கோவிலின் உள்ளே ஜூலை 9 ஆம் திகதி நடைபெற்றது. அம்மன் அருளால் எடுத்த காரியம் இனிதே நிறைவேறும் எனக்கூறி எல்லா தரப்பினரையும் ஒன்றிணைக்கும் முயற்சி இதுவாகும் என்று ஒரு BTF தலைமை உறுப்பினர் அறிவித்தார். ஏறக்குறைய 40 பேர் வந்திருந்த கூட்டத்தில் BTF தவிர Tamil Solidarity (TS), மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் (TNA) ஆகிய... Read More
மாற்று அரசியலை முன்வைக்கும் ஜெரமிக் கோர்பின் – பிரித்தானிய தேர்தல் ஒரு பார்வை கஜன் கட்டுரைகள் 

மாற்று அரசியலை முன்வைக்கும் ஜெரமிக் கோர்பின் – பிரித்தானிய தேர்தல் ஒரு பார்வை

பிரித்தானியாவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி 318 ஆசனங்களையும், தொழிலாளர் கட்சி 262 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டது. 650 மொத்த ஆசனங்களில் 326 ஆசனங்களைப் பெற்று எவரும் பெரும்பான்மை பெற்றிருக்கவில்லை என்பதனால் கன்சர்வேடிவ் கட்சி டி.யு.பி கட்சியுடன் (DUP) உடன் இணைந்து தொங்கு பாராளுமன்றமே அமைத்துள்ளது. அதுவும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதனால் வெகு விரைவில், அடுத்த ஐந்து வருடங்களுக்கு முன்னரே, அடுத்த தேர்தலை எதிர்பார்க்கலாம். அறுதிப் பெரும்பான்மை பெற்று கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகார ஆட்சியை அமைக்கத் தயாராகவிருந்த தெரேசா மேயிற்கு... Read More
கைதுசெய்யப்பட்ட மே 17 இயக்கத்தவர்களின் விடுதலையை கோரி மீண்டும்  லண்டனில் போராட்டம். செய்திகள் செயற்பாடுகள் 

கைதுசெய்யப்பட்ட மே 17 இயக்கத்தவர்களின் விடுதலையை கோரி மீண்டும் லண்டனில் போராட்டம்.

மீண்டும் பிரித்தானியாவில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முன் மக்கள் போராட்டம் இன்று (09.07.2017 ) நடைபெட்ட்றது. குண்டாஸ் சட்டத்தில்  கைதுசெய்யப்பட்ட திருமுருகன் காந்தி மற்றும் சக தோழர்களின்  விடுதலையை கோரி இந்த போராட்டத்தை தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாடு செய்திருந்தது. இதில் தமிழ் இளையோர் அமைப்பு மற்றும்  தமிழ் சொலிடரிட்டி அமைப்பு கலந்து கொண்டிருந்தது. போராடுவது எங்கள் உரிமை ‘ என்னும் தொனிப்பொருளில் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உட்பட்ட கைது செய்யப்பட்ட தோழர்களை விடுதலை செய்யுமாறும், மோடி மற்றும் ஒன்றிய... Read More
இலங்கையில் பல்கலைகழக மாணவர்கள் மீதான அரசின் வன்முறையை கண்டித்து லண்டனில் ஆர்ப்பாட்டம் செய்திகள் செயற்பாடுகள் 

இலங்கையில் பல்கலைகழக மாணவர்கள் மீதான அரசின் வன்முறையை கண்டித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்

லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸதானிக்கர் அலுவலகம் முன்பாக இலங்கையில் பல்கலைகழக மாணவர்கள் மீதான அரசின் வன்முறையை கண்டித்தும் , கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை சேவைகளை தனியார் மயப்படுதலை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. SAITM திற்கு எதிரான பெற்றோர் / மாணவர் இயக்கம் – UK ஒருங்கிணைத்த இந்த போராட்டத்தில் தமிழ் , சிங்களம்  மற்றும் ஆங்கிலதில் கோசங்கள் முனவைக்கப்பட்டன. சிங்கள , தமிழ் , முஸ்லீம் மற்றும் பல்லின மக்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.  கல்வியும் சுகாதாரமும் விற்பனைக்கு இல்லை... Read More
இலங்கையில் தொடரும் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் – பாகம் -02 – புத்துருவாக்கம் பெறும் பொதுபல சேனாவும்  (BBS) மதவாதமும். கட்டுரைகள் நடேசன் 

இலங்கையில் தொடரும் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் – பாகம் -02 – புத்துருவாக்கம் பெறும் பொதுபல சேனாவும் (BBS) மதவாதமும்.

மஹிந்த அரசு வீழ்த்தப்பட்ட பின்னர் மைத்திரி-ரணில் ஆட்சி காலத்தில் பொதுபல சேனா (BBS) தமது இருப்பை காட்டுக்குவற்காக  தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள் மீது இனவாத தாக்குதலை நடாத்தியதன் ஊடாக புத்துயிர் பெற்றது. தேசிய கலந்து உரையாடலுக்கான அமைச்சரான மனோ கணேசனின் அலுவலகத்துக்குள் புகுந்து அடாவடித்தனங்களை காட்டினார் பொதுபல சேனாவினர். அநாகரீக தர்மபாலாவின் வாரிசுகளிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?   பொதுபல சேனா என்பது வெறும் முஸ்லிம்களுக்கு எதிரான அமைப்பு என்ற ரீதியில் புரிந்து கொள்ள முடியாது. பர்மாவில் முஸ்லிம்களை படுகொலை... Read More
எமது உரிமைகளை போராடாமல் பெற முடியாது செய்திகள் செயற்பாடுகள் 

எமது உரிமைகளை போராடாமல் பெற முடியாது

தற்போதய அரசின் கொள்கைகள் குடிவரவாளர் மற்றும் அகதிகளுக்கு எதிரானது. இந்த நிலைப்பாட்டை நாம் மாற்றுவதானால் இந்தக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டச் சக்திகளுடன் நாம் இணைய வேண்டும். நாம் இந்தக் கொள்கைகள் சரி என ஏற்றுக் கொள்ளவில்லை என்ற செய்தியைப் பதிய வேண்டும்.  நாம் போராட்டச் சமூகத்தில் இருந்து வந்தவர்கள் என்பதை உட்துறை அமைச்சுக்கு தெரியப் படுத்துவது அவசியம். இந்த நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலம் சரியான கொள்கைப் பக்கம் நிற்பது மட்டுமின்றி எமது கோரிக்கைகளுக்கான ஆதரவையும் நாம் திரட்ட முடியும். அகதி கோரிக்கையாளர் வேலை... Read More
சொலிடாரிட்டி நாள் (Solidarity Day) 2017 செய்திகள் செயற்பாடுகள் 

சொலிடாரிட்டி நாள் (Solidarity Day) 2017

2017 ஆம் ஆண்டிற்கான சொலிடாரிட்டி நாள் (Solidarity Day ) கடந்த சனிக்கிழமை யுனைட் (Unite) தொழிற்சங்க தலைமை காரியாலத்தில் நடைபெற்றது. தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினால் ஒழுங்கு செய்யபட்ட இந்நிகழ்வில் பல்வேறு அமைப்புகளுடன் வெவ்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. லொபி அரசியல் தான் எம்மக்களுக்கு ஒரே வழி என்போருக்கும் , வேறு வழியில்லை எனக்கூறி நல்லிணக்கம் ,சாணக்கியம் மூலம் தருவதை பெற்று வாழ்வோம் என்போருக்கும் அரசியல் உரையாடலுக்கு அழைப்பு விடப்பட்டது. மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் முன்னோக்கு அரசியல் உள்ளடங்கலான தமிழ் சொலிடாரிட்டியின்  அரசியல் நிலைப்பாடு பற்றியும்... Read More
இலங்கையில் தொடரும் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் – பாகம் -01   அரசியல் வரலாற்று பின்னணி கட்டுரைகள் நடேசன் 

இலங்கையில் தொடரும் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் – பாகம் -01 அரசியல் வரலாற்று பின்னணி

இலங்கையில் நடைபெற்ற முதலாவது இனக்கலவரம் 1915 ஆம் ஆண்டு முஸ்லீம் வர்த்தகர்கள் மீது சிங்கள பேரினவாதவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டது. கொழும்பு புறக்கோட்டையில் அமைத்திருந்த ஒரே ஒரு சிங்கள பௌத்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் மகனான அநாகரிக தர்மபாலவினால் பரப்பப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாதம் முதலாளித்துவதுடன் பின்னி பிணைந்துள்ளது என்பது வரலாறு 2014 ஆம் மீண்டும் முஸ்லீம் மக்கள் மீது பெரும் வன்முறையும், அவர்கள் வழிபாட்டிடங்கள் மீதும் , குறிப்பாக அவர்களின் வர்த்தக நிலையங்களை குறிவைத்தும் தாக்குதல்களும் நடாத்தபட்டன.போரினை காரணம் காட்டி சிங்கள மக்கள் மீது... Read More
தாயக மக்களின் அரசியல் எழுச்சியும் புலம்பெயர் மக்களின் ஆதரவும் செய்திகள் செயற்பாடுகள் 

தாயக மக்களின் அரசியல் எழுச்சியும் புலம்பெயர் மக்களின் ஆதரவும்

பிரித்தானியாவில் ஞாயிற்றுக்கிழமை (25.06.2017 )அரசியல் அடக்குமுறைகளுக்கு எதிரான தாயக மக்களின் போராட்டங்களுக்கு புலத்தில் இருந்து நமது ஆதரவினை அளிக்கும் முகமாக Wembly Central Station க்கு முன்பாக  ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.   போராட்டத்தை அமைப்புகள் சாராது இளைஞ்சர்கள் ஓர் ஏற்பாட்டு குழுவை அமைத்து ஒழுக்கமைத்திருந்தனர்.  வேறு வேறு அமைப்புகளில் அரசியல் செயற்பாட்டாளர்களாக இருக்கும் இவ் இளையோர் பொதுவான மக்கள் பிரச்சனைகளுக்கு ஒன்றிணைத்து செயற்பட்டு மக்களை ஒன்றிணைதலின் முதல் படி இப் போராட்டம் எனலாம்.   தாயாக மக்களின் நிலைப்பாடுகளுக்கு ஆதரவளித்து நடாத்த பட்ட... Read More
பிரித்தானியாவில் ஓன்றினையும்  தமிழ் இளையோரின் முயற்சிக்கு ஆதரவு அளியுங்கள் அறிவிப்பு செய்திகள் செயற்பாடுகள் 

பிரித்தானியாவில் ஓன்றினையும் தமிழ் இளையோரின் முயற்சிக்கு ஆதரவு அளியுங்கள்

பிரித்தானியாவில் ஓன்றினையும்  தமிழ் இளையோரின் முயற்சிக்கு ஆதரவு அளியுங்கள் தாயக மக்களின் அரசியல் எழுச்சி புலம்பெயர் மக்களின் ஆதரவு’ என்ற தொனி பொருளில் வருகின்ற  25.06.2017 ஞாயிற்றுக்கிழமை WEMBLEY CENTRAL STATION முன்பாக மதியம் 02:00 மணி தொடக்கம் 05:00 மணி வரை ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எந்த ஓர் அமைப்பும் இளையோர் சிலர் ஏற்பாட்டு குழு ஒன்றை உருவாக்கி இவ் போராட்டதை ஒருங்கமைத்துள்ளனர். தற்போது தாயகத்தில் நிகழும் மக்களின் எழுச்சிப் போராட்டங்களுக்கு புலத்து மக்களும் தமது ஆதரவை தெரிவிக்கும் முகமாக ஒழுங்கமைக்கப்... Read More