You are here

Written by 

லண்டன் ஊர்வலம் -அகதிகள் உரிமை அமைப்பும் இணைந்து போராட்டம். செய்திகள் செயற்பாடுகள் 

லண்டன் ஊர்வலம் -அகதிகள் உரிமை அமைப்பும் இணைந்து போராட்டம்.

1 கடந்த சனிக்கிழமை லண்டனில் நடந்த பெரும் ஊர்வலத்தில் அகதிகள் உரிமைகள் அமைப்பும் பங்கு கொண்டது. தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரேமி கோர்பினின் கொள்கைகளுக்கு பெரும்பான்மை ஆதரவு இருந்தும் அந்தக் கொள்கைகள் தடுக்கப் படுவதற்கு எதிராகவும் தெரசா மேயின் கன்சவேட்டிவ் கட்சிக்கும் அவர்தம் கொள்கைகளுக்கு எதிராகவும் ஆயிரக்கணக்கான மக்கள் லண்டனில் திரண்டு தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு மற்றும் அகதிகள் உரிமைகள் அமைப்பு ஆகியன இந்த ஊர்வலத்தில் பங்கு பற்றி இருந்தன. அகதிகள் உரிமைகள் அமைப்பின் முக்கிய கோரிக்கைகள் இந்த ஊர்வலத்தின்... Read More
பிரித்தானியத் தேர்தல்  – முடிவுகள் – பகுதி 1 கட்டுரைகள் சேனன் 

பிரித்தானியத் தேர்தல்  – முடிவுகள் – பகுதி 1

பிரித்தானியத் தேர்தல் முடிவுகள் பற்றிய சில விபரங்களை மட்டும் கீழ தந்துள்ளோம். தேர்தல் பற்றிய ஆய்வுகள் மற்றும் தொங்கு பாராளுமன்றம் என்றால் என்ன என்ற விபரங்களை தொடர்ந்து இங்கு பதிவிட இருக்கிறோம். தொடர் பதிவுகளைப் பெற உங்கள் ஈ மெயிலை இந்தத் தளத்தில் பதிவிடுங்கள். இந்த வார வாரந்திர ஞாயிறு நேரலையிலும் இது பற்றி உரையாட இருகிறோம். இங்கிலாந்து நேரம் 4pm மணிக்கு எம்மோடு இணைந்து கலந்து கொள்ளுங்கள். – எதிர்   1 தேர்தல் இறுதி முடிவுகள் 650 ஆசனங்கள் உள்ள பிரித்தானியப்... Read More
பிரித்தானியத் தேர்தல் – அரசியல் வங்கிரோத்தும் மக்கள் கோரிக்கையும். கட்டுரைகள் சேனன் 

பிரித்தானியத் தேர்தல் – அரசியல் வங்கிரோத்தும் மக்கள் கோரிக்கையும்.

1 உடனடித் தேர்தல் நடத்த முதற் காரணம் பொருளாதார பின்னணியே பிரித்தானியா மிகப் பெரும் பொருளாதார நெருக்கடியைச் நோக்கி நிற்கிறது. மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. மக்கள் சேவையில் முதலீடு அதிகரிக்க வேண்டும் என்ற அபிலாசை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் வாக்களிப்புக்கு உந்துதலாக இருந்தது (பிரக்சிட்). மறு பக்கம் ஸ்கொட்லாந்தில் பிரிந்து போவதற்கான உணர்வு மிக அதிகரித்துள்ளது. வட அயர்லாந்து அமைதி உடன்படிக்கை ஆடிப்போய் நிற்கிறது. சூரியன் அஸ்தமிக்காத பேரரசு என ஒரு காலத்தில் வர்ணிக்கப் பட்டப் பிரித்தானியப் பேரரசு... Read More
லண்டனில் மே தின ஊர்வலமும் தமிழ் அமைப்புக்களும் செய்திகள் செயற்பாடுகள் 

லண்டனில் மே தின ஊர்வலமும் தமிழ் அமைப்புக்களும்

பல்வேறு தொழிற் சங்கங்கள் மற்றும் இடது சாரிய அமைப்புக்களுடன் அகதிகள் உரிமை அமைப்பு மற்றும் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு, பறை விடுதலைக்கான குரல் ஆகிய அமைப்புக்களும் லண்டன் மே தின ஊர்வலத்தில் கலந்து கொண்டன. தொழிலாளர் தினம் உலகெங்கும் ஒடுக்கப்படும் உளைக்கும் மக்களால் கொண்டாடப்படும் தினம். வலது சாரிய அரசுகள் இந்த தொழிலாளர் தினத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதனால் மே தினத்தன்று கூடும் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருவதைப் பார்க்கலாம். இந்த நிலையை லண்டனில் நடந்த... Read More
அகதிகள் தாக்கப் படுவதற்கு எதிராக கண்டன ஊர்வலம் செய்திகள் செயற்பாடுகள் 

அகதிகள் தாக்கப் படுவதற்கு எதிராக கண்டன ஊர்வலம்

௧௭ வயதான ரெகார் அகமத் ௩௧ மார்ச் மாதம் குரய்டனில் துவேசிகளால் கட்டுமையாக தாக்கப்பட்டார். இந்த தாக்குதல் இங்கிலாந்து எங்கும் பரந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு அகதியை கடுமையாக மயங்கும் வரை தாக்கி விட்டுச் சென்ற நடைமுறை இங்கிலாந்தில் வளர்ந்து வரும் துவேசத்தின் அறிகுறியாகப் பேசப்பட்டு வருகிறது. அகதிகளுக்கெதிரான இந்த தாக்குதலைக் கண்டித்து ௮ ஏப்ரல் மாதம் சொலிடாரிட்டி ஊர்வலம் ஓன்று குரோய்டனில் நடத்தப்பட்டது. அகதிகள் தாக்குவதை கண்டித்தும் தற்போதைய அரசின் அகதிகள் சார் கடுமையான நடவடிக்கைகளைக் கண்டித்தும் இந்த ஊர்வலம் நடந்தது. அகதிகள்... Read More
இலண்டனில் இனத்துவேசத்திற்கு எதிராகவும் அகதிகளின் உரிமைகளுக்காகவும் அணிவகுப்பு. செய்திகள் செயற்பாடுகள் 

இலண்டனில் இனத்துவேசத்திற்கு எதிராகவும் அகதிகளின் உரிமைகளுக்காகவும் அணிவகுப்பு.

18.03.2017 சனிக்கிழமை, ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச இனத்துவேசத்திற்கு எதிரான நாளாகும். அன்றைய தினம் இலண்டனில் இனத்துவேசத்திற்கு எதிராகவும் அகதிகளின் உரிமைகளுக்காகவும் அணிவகுப்பு ஒன்று இடம்பெற்றது, (BBC) Portland Place,London W1A 1AA என்னும் இடத்தில காலை 11.00 ஆரம்பமான இந்தப் பேரணி இலண்டனின் பலமுக்கிய பகுதிகளினுடாக சென்று பிரித்தானியாவில் பாராளுமன்ற சதுக்கத்தில் நிறைவுபெற்றது. இந்த அணிவகுப்பை பல அமைப்புக்கள், பல யூனியன்கள் இணைந்து ஏற்பாடு செய்தன இவர்களுடன் இணைந்து அகதிகளுக்கான உரிமைகள் அமைப்பும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டது. பிரித்தானியாவின் போராட்டங்களில் தமிழ் பேசும் மக்களும் இணைந்து கொண்ட தினமாக நேற்றைய தினம்... Read More
லண்டனில் விக்கியின் விஸ்வரூபம் கட்டுரைகள் நடேசன் 

லண்டனில் விக்கியின் விஸ்வரூபம்

  கின்ஸ்டன்  கவுன்சிலுடனான ஒப்பந்ததை வெற்றிக்கரமாக நடாத்திய வட மாகாண முதல்வர் 23-10-2016 ல் -லண்டன் ஹாரோ என்ற இடத்தில் மக்களைச்சந்தித்தார். இந்தச் சந்திப்பு எல்லா தமிழ் பேசும் மக்களுக்குமானதா ? பழமைவாதக் கட்சி உறுப்பினர்கள் தமது உயரடுக்கு மிடுக்கை தமிழ் பாரம்பரியமாக நிறுவ முயன்றது போல் தான் தெரிந்தது. எல்லா மக்களையும் உள்வாங்க விரும்புபவர்கள் -பரதநாட்டியமும் ‘மங்கள’விளக்கேற்றலும் என இந்து மத அடையாளங்களுடன் மட்டும் விழாவை ஆரம்பித்தது தவறு. எழுதி வாசிக்கபட்ட” ஞானத்தோற்றம், காவல் கோட்டை,  தாடிவைத்த தற்கால வள்ளுவனே, தலைவனே, தெய்வமே,... Read More
பொறுமை போதும் பொங்கி எழு! கஜன் கட்டுரைகள் 

பொறுமை போதும் பொங்கி எழு!

அடுத்த வருசத்துக்குள் தீர்வாமே? என்ன கதை இது? 1996 ஆம் ஆண்டு சந்திரிக்கா அம்மையார் முன் வைத்த தீர்வைக் கிழித்தெறிந்த ரணில் விக்கிரமசிங்க, 2016 ஆம் ஆண்டு மைத்திரி அரசுடன் இணைந்து சாத்தியமான தீர்வை முன்வைப்பார் என நம்பிக்கொண்டிருப்பது இலவு காத்த கிளியைப் போன்றது. கடந்த கால வரலாற்றை–கொள்கைகளைப் பார்ப்பது, அவர்களின் எதிர்கால நடவடிக்கைளை, ஓரளவுக்கேனும் அறிய உதவும். சம்பந்தர் ஐயா நல்லிணக்கம் என்னும் பொறிமுறைக்குள் அகப்பட்டுக்கொண்டு விட்டார். தனக்கென்று ஒரு வரம்பு வைத்துக்கொண்டு அதற்குள் நின்று பேசுகிறார். வரம்புக்கு வெளியே காணப்படும் தீர்வை-மக்கள்... Read More
மாணவர்கள் கொலைக்கு இலங்கை அரசே பொறுப்பு கட்டுரைகள் சேனன் 

மாணவர்கள் கொலைக்கு இலங்கை அரசே பொறுப்பு

சேனன் 1 வடக்கு கிழக்கைக் குலுக்கியிருக்கும் – இரு மாணவர்கள் கஜன், சுலக்க்ஷன்ஆகியோரின் இறப்பின் பின்னியங்கும் அரசியலை நாம் சரியாக விளங்கிக் கொள்ளுதல் அவசியம். ‘அவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை பொலிசார் நிறுத்தச் சொல்ல அவர்கள் நிறுத்தாமற் சென்றதால் பொலிசார் சுட்டனர் – இது ஒரு வழமையான பொலிஸ் விவகாரம். நிறுத்தச் சொன்ன பொழுது அவர்கள் வாகனத்தை நிறுத்தியிருக்க வேண்டும். ஏன் அவர்கள் சட்டத்தை மதிக்காமல் வாகனத்தை ஓட்டிச் சென்றனர்?’ – எனச் சிலர்இச்சம்பவத்தைச் சுருக்கிப் பார்க்க முற்படுகின்றனர். உண்மையில் என்ன நடந்தது... Read More
வடக்கு முதலமைச்சரின் லண்டன் வருகையும் மக்களின் எதிர்பார்ப்புக்களும் கட்டுரைகள் 

வடக்கு முதலமைச்சரின் லண்டன் வருகையும் மக்களின் எதிர்பார்ப்புக்களும்

கின்ஸ்டோன் கவுன்சில்லுகும் யாழ் மாவட்டத்திற்குமான சமூக, அரசியல், கலாச்சார தன்மைகளை பரிமாறிக்கொள்ளும் நோக்குடன் நடைபெறும் நிகழ்வில் உரையாற்ற வடமாகாண முதலமைசர் அழைக்கப்படுள்ளார். முதலமைச்சரின் இவ் விஜயமானது புலம்பெயர் மக்களிடத்தில் பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் பிற்போக்கு தனமான பிரித்தானியாவின் பழமைவாத கட்சியின் தலைமைத்துவதிலேயே கிங்ஸ்டன் கவுன்சில் நிர்வாகம் செயற்படுகிறது. இவ்வாறான நிகழ்வுகள் மூலம் புலம் பெயர்ந்த தமிழ் மக்களிடத்தில் இந்த கட்சியின் செல்வாக்கை அதிகரிப்பதற்கான ஒருவித முயற்ச்சியாகவே கருதப்படுகிறது. இங்கு வாழும் மக்களின் அடிப்படை தேவைகளை மறுத்தும் , நசுக்கியும் செயற்படும் இவ் அரசாங்கம்... Read More
மஹிந்த செய்யமுயலும் மாந்திரீகம்.. கஜன் கட்டுரைகள் 

மஹிந்த செய்யமுயலும் மாந்திரீகம்..

-கஐன் தமிழ் தலைமைகளுக்கே தமிழ் மக்களின் மீது அக்கறையும் கரிசனமும் வராத போது தீடிரென்று மஹிந்த ராஜபசவுக்கு தமிழ் மக்களின் மீது அன்பு பெருக்கெடுத்து ஆறாக பாய்கின்றதாம். விக்கினேஸ்வரன் இனவாதி இல்லை என்கிறார், தமிழ் இளைஞர்களுக்கு வேலை இல்லை, சரியான வீதி இல்லை என்கிறார். முகாம்கள் மூடப்பட்டுள்ளதா?, மக்கள் மீள் குடியமர்த்தப் பட்டுள்ளார்களா? எனக் கவலைப்படுகிறார். முகாம்களை உருவாக்கியதே அவர்தான் என்பது அவருக்கே மறந்து விட்டது போலும். யாழிலும் எனக்கு உறவினர்கள் இருக்கின்றனர் என சொந்தம் கொண்டாடுகிறார். பின்னர் ஏன்தான் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு... Read More
தேசிய அபிலாசைகளை பிற்போக்காளர் கைககளில் விட முடியாது கட்டுரைகள் பாரதி 

தேசிய அபிலாசைகளை பிற்போக்காளர் கைககளில் விட முடியாது

– பாரதி – – தேசிய விடுதலை என்பது ஒடுக்குமுறைகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் மூடிமறைத்துக்கொண்டு அதன் மேல் ஏறி நின்று பேசவதல்ல. எம்மத்தியில் உள்ளவர்கள் சிலர் இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் போன்றவர்கள் எம் சமூகத்தில் மிக சொற்பமானவர்களே. இவர்களை இனம் கண்டு மக்கள் மத்தியில் வெளிப்படுத்துவது முக்கியம். அடித்து வீழ்த்தும் வசனங்களால் பச்சை இனவாதம் பேசும் சிலரால் விடுதலை என்ற பதமே பொருள் இழந்து விடும் அபாயம் இருக்கிறது. ஒரு இனமக்கள் ஏன் தேசியத்தை நோக்கி நகர்கிறார்கள் என்று சிந்திக்க வேண்டும். கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படும்... Read More
முரண்பாடுகளுடனும் உடன்பாடு சாத்தியமே – இடதுசாரிய அமைப்புகளை நோக்கி கட்டுரைகள் சேனன் 

முரண்பாடுகளுடனும் உடன்பாடு சாத்தியமே – இடதுசாரிய அமைப்புகளை நோக்கி

பின்வரும் இரண்டு முக்கிய கருத்துகளைச் செயற்பாட்டாளர்கள் கவனத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். 1. ஆயுதம் தாங்கிய விடுதலை அமைப்புகளின் தலைமைகள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் சோசலிசம் – சோசலிசப் புரட்சி பற்றிப் பேசினர். ஆனால் அவர்கள் மத்தியில் அதற்கான முன்னோக்கு மற்றும் செயற்திட்டங்கள் தெளிவாக இருக்கவில்லை. விடுதலை பேசிய குர்திஸ்தான் தலைவர்கள் அயர்லாந்து தலைவர்கள் ஆகியோர்களிடம் தெளிவிருந்தது எனச் சொல்லவில்லை. ஆனால் அவர்களிடம் இருந்த தெளிவான முற்போக்கு நிலைப்பாடு ஈழத்தில் வளரவில்லை. அது தலையெடுத்தது – வளர முதலே கிள்ளப்பட்டு விட்டது. இந்தியத் தலையீடு... Read More
விடுதலை விரும்பிகள் ஜெரமி கோபினுக்கு ஆதரவளிக்க வேண்டும் கஜன் கட்டுரைகள் 

விடுதலை விரும்பிகள் ஜெரமி கோபினுக்கு ஆதரவளிக்க வேண்டும்

By Kajan பிரித்தானிய தமிழர்கள் ஏன் ஜெரமி கோபினை ஆதரிக்க வேண்டும்? யார் இந்த ஜெரமி கோபின்? ஏன் தமிழர்கள் அவரை ஆதரிக்க வேண்டும்? அதனால் தமிழர்களாகிய நமக்கு என்ன நன்மை? என்பது பற்றி அலசி ஆராய்கிறது இந்தக் கட்டுரை. ஜெரமி கோபினுக்காக ஆதரவு என்பது கோபின் எனும் தனி மனிதனுக்கான ஆதரவு இல்லை. அது ஜெரமி கோபினின் கொள்கைகளுக்காக கொடுக்கப்படும் ஆதரவே ஆகும். தற்பொழுது இங்கிலாந்தில் எழுந்திருக்கும் கோபின் அலைக்கு கொடுக்கும் ஆதரவு ஆகும். இந்த அலையானது சமூகத்தின் அடித்தட்டு மற்றும் பழைமைவாத... Read More
யாரிந்த ட்ரொட்ஸ்கி? -76வது ஆண்டு நினைவு நாள் கட்டுரைகள் சேனன் 

யாரிந்த ட்ரொட்ஸ்கி? -76வது ஆண்டு நினைவு நாள்

கடந்த பல வாரங்களாக இங்கிலாந்து ஊடகங்களில் திரும்பத் திரும்பப் பேசப்பட்டுவரும் பெயர் – ட்ரொட்ஸ்கி. அனைத்து ஊடகங்களும் ட்ரொட்ஸ்கி பற்றி ட்ரொட்ஸ்கிஸ்டுகள் பற்றி எழுதித் தள்ளிக்கொண்டிருப்பதைப் பார்த்தோம். தொழிலாளர் கட்சியின் எதிர்க்கட்சி தலைவரான nஐரமி கோர்பினை “ட்ரொட்” என்றும் – அவர் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஊடுருவலை அனுமதிக்கிறார் என்றும் பல்வேறு குற்றச் சாட்டுகள் ஊடகங்களில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்ததைப் பார்த்திருப்பீர்கள். யாரிந்த ட்ரொட்ஸ்கி ? இந்தப் பெயருக்கேன் வலதுசாரிகள் பயப்பிடுகிறார்கள்? இன்று ட்ரொட்;ஸ்கி கொல்லப்பட்டு சரியாக 76வது ஆண்டு நினைவு நாள். 1940ம் ஆண்டு 21ம்... Read More