You are here
மியன்மார் தேசத்தின் முள்ளிவாய்க்கால் – ரோஹிங்கிய (பாகம் – 02) கஜன் கட்டுரைகள் 

மியன்மார் தேசத்தின் முள்ளிவாய்க்கால் – ரோஹிங்கிய (பாகம் – 02)

“ஆங்சாங் சூகியின் எண்ணமானது ரோஹிங்கிய மக்களுடன் யுத்தம் புரிவதல்ல, மாறாக அம்மக்கள் அகதிமுகாமிலிருந்தோ அல்லது தப்பித்து செல்லும்போது கடலினுள் விழுந்தோ இறந்து போகட்டும்” என்பதே அவரின் எண்ணமாக இருக்கிறது என்றார் சமீபத்தில் மியான்மாரிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட அகதி ஒருவர். இதுதான் தற்பொழுது ஆங்சாங் சூகியைப் பற்றிய மக்களின் பார்வையாக உள்ளது ஆங்சாங் சூகி – மியன்மார் வன்முறை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் காலத்திலிருந்து உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெயர் இதுதான். ரோஹிங்கிய மக்களை காப்பாற்றக்கூடிய அதிகாரம் தன்வசம் இருந்தும் அதைப்  பயன்படுத்தாமல் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்தான் இந்த... Read More
மியன்மார் தேசத்தின் முள்ளிவாய்க்கால் – ரோஹிங்கிய (பாகம் – 01) கஜன் கட்டுரைகள் 

மியன்மார் தேசத்தின் முள்ளிவாய்க்கால் – ரோஹிங்கிய (பாகம் – 01)

மதமும் அரசியலும் சேர்ந்தால் பற்றி எரிவதற்கு எண்ணெய் தேவையில்லை. இலங்கை, இந்தியா, இஸ்ரேல், அரபு நாடுகள் போன்றன அதற்கு மிகச் சிறந்த உதராணம். அதன் வரிசையில் அண்மைக்கால உதாரணமாக இருப்பது மியன்மார் தேசம். பெளத்தமதமும் அரசியலும் இணைந்து எண்ணெய்யே இல்லாமல் பற்றிக் கொண்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் ARSA (Arakan Rohingya Salvation Army) என்ற அமைப்பு முப்பது போலீஸ் மற்றும் இராணுவ நிலைகளைத் தாக்கியதைத் தொடர்ந்து  வெடித்த கலவரம் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற அரச பயங்கரவாதத்தால் பல லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துவிட்டனர்.... Read More
சைபர்  தாக்குதலின் பின்னணியில் பிட்காயின் (Bitcoin) கஜன் கட்டுரைகள் 

சைபர் தாக்குதலின் பின்னணியில் பிட்காயின் (Bitcoin)

உலகளாவிய ரீதியில் பல்வேறு தொலைக்காட்சி நாடகங்களையும், திரைப்படங்களையும் தயாரித்து வழங்கும் HBO (Home Box Office) என்னும் நிறுவனத்தின் இணையதளம் கடந்த ஜூலை மாதம் சைபர் தாக்குதலுக்குள்ளானது. மிஸ்டர் ஸ்மித் ( Mr. Smith) என அழைக்கப்படும் ஹக்கர் குழுவே இத்தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. மிகப் பிரபலமான தொலைகாட்சித் தொடரான கேம் ஒப் திரோன்ஸ் ( Game Of Thrones) நிகழ்ச்சியின் ஸ்கிரிப்ட், தொடரின் இதுவரை வெளிவராத பாகங்கள், நடிகர்களின் தனிப்பட்ட விபரங்கள், தொலைபேசி இலக்கங்கள், சந்தைபடுத்தும் ஆவணங்கள் (Marketing Materials), நிறுவனம் எதிர்கொள்ளும் சட்டப்... Read More
இலங்கையின் இலவசக் கல்விக்கு வேட்டு வைக்கும் சைட்டம் (SAITM) கஜன் கட்டுரைகள் 

இலங்கையின் இலவசக் கல்விக்கு வேட்டு வைக்கும் சைட்டம் (SAITM)

உணவு, உடை, உறையுள் போன்றன எவ்வாறு மனிதனுக்கு அடிப்படை உரிமையோ அதே போல் கல்வியும் ஒரு அடிப்படை உரிமை ஆகும். கல்விக்கான உரிமைகள் மறுக்கப்படும்போது அல்லது கல்வி வியாபாரமாக்கப்படும்போது மாணவர்கள் போராடுவது தவிர்க்க முடியாததொன்றாகும். இலங்கை அரசானது அதன் யாப்பில் குறிப்பிடப்பட்டது போல் ஜனாநாயக சோசலிசக் குடியரசு எனின் குறைந்த பட்சம் தன் நாட்டு மக்களுக்கு உணவு, உடை உறையுள்,கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளையாவது அனைவருக்கும் வழங்க வேண்டும். தவிர, சுய லாபம் கருதி தனியாருக்கு அவற்றை விற்கக்கூடாது.... Read More
மாற்று அரசியலை முன்வைக்கும் ஜெரமிக் கோர்பின் – பிரித்தானிய தேர்தல் ஒரு பார்வை கஜன் கட்டுரைகள் 

மாற்று அரசியலை முன்வைக்கும் ஜெரமிக் கோர்பின் – பிரித்தானிய தேர்தல் ஒரு பார்வை

பிரித்தானியாவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி 318 ஆசனங்களையும், தொழிலாளர் கட்சி 262 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டது. 650 மொத்த ஆசனங்களில் 326 ஆசனங்களைப் பெற்று எவரும் பெரும்பான்மை பெற்றிருக்கவில்லை என்பதனால் கன்சர்வேடிவ் கட்சி டி.யு.பி கட்சியுடன் (DUP) உடன் இணைந்து தொங்கு பாராளுமன்றமே அமைத்துள்ளது. அதுவும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதனால் வெகு விரைவில், அடுத்த ஐந்து வருடங்களுக்கு முன்னரே, அடுத்த தேர்தலை எதிர்பார்க்கலாம். அறுதிப் பெரும்பான்மை பெற்று கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகார ஆட்சியை அமைக்கத் தயாராகவிருந்த தெரேசா மேயிற்கு... Read More
பிரித்தானியாவின் தேவை ஜெரமிக் கோர்பினா? தெரேசா மேயா ? கஜன் கட்டுரைகள் 

பிரித்தானியாவின் தேவை ஜெரமிக் கோர்பினா? தெரேசா மேயா ?

பிரித்தனியாவின் உடனடித் தேவை ஜெரமிக் கோர்பினா? அல்லது  தெரேசா மேயா?. சந்தேகமே வேண்டாம் ஜெரமிக் கோர்பின் தான். அதற்குரிய காரணம் கோர்பின் மீதான தனிப்பட்ட காதலும் அல்ல தெரேசா மீதான கண்மூடித்தனமான வெறுப்புமல்ல. அவர்களின் மக்கள் சார்பான கொள்கைகளே காரணமாகும். தெரேசா மேயின் கொள்கை எனபது சிறுபான்மையினருக்கானது. அதற்காக பிரித்தானிய அரசால் அடக்கி ஒடுக்கப்படும் சிறுபான்மை என எண்ணி விடவேண்டாம், காப்ரேட் கம்பனிகளின் முதலாளிகளான, கன்சர்வேட்டிவ் கட்சியின் நண்பர்களே அவர்களாகும். தெரேசா மே யின் கொள்கைககள், திட்டங்கள் என்பன காப்ரேட் கம்பனியின் நலன்களையே முன்னிலைப்படுத்துகின்றது.... Read More
சைபர் தாக்குதல்களும் ஜெரமிக் கோர்பினின் தேவையும் கஜன் கட்டுரைகள் 

சைபர் தாக்குதல்களும் ஜெரமிக் கோர்பினின் தேவையும்

கடந்த வாரம் ரன்சம்வேர் வைரஸ் மூலம் உலகளாவிய ரீதியில் நிகழ்த்தப்பட்ட சைபர் இணையத் தாக்குதலில், பிரித்தானியா, பிரான்சு, ஜேர்மன், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, உட்பட உலகின் 150 மேற்பட்ட நாடுகளில் 200,000 க்கு மேற்பட்ட கணனிகள் மற்றும் கணணித் தொடர்புள்ள உபகரணங்கள் பாதிப்புக்குள்ளாகின.இதனால் பல நாடுகளின் தொலைத்தொடர்புத் துறை, வைத்தியத்துறை, வங்கித் துறை, ரயில்வே துறை, காவல்துறை, உட்பட பல்வேறு துறைகள் முற்றாகவோ அல்லது பகுதியாகவோ செயலிழந்துபோயின. மைக்ரோசொப்ட் விண்டோஸ் (windows xp) இணை தாக்கும் திறன் கொண்ட ரன்சம்வேர் (Ransomware ) வைரஸ்... Read More
பிரித்தானிய தேர்தல் அறிவிப்பின் பின்னணி என்ன? கஜன் கட்டுரைகள் 

பிரித்தானிய தேர்தல் அறிவிப்பின் பின்னணி என்ன?

ஜூன் மாதம் 8ஆம் திகதி பாராளுமன்ற தேர்தலை அறிவித்துள்ளார் தற்போதைய பிரதமர் தெரசா மே. இன்னமும் மூன்று ஆண்டுகள் ஆட்சிக் காலம் இருந்தும் அவசரமாக உடனடித் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு பாராளுமன்றத்தில் தங்களுக்கு அறுதிப் பெரும்பான்மை வேண்டும் எனவும் , நாட்டில் ஒரு ஸ்திரமற்ற நிலைமை காணப்டுகிறது என்பதாலும் இந்த தேர்தலுக்கு அவசியம் ஏற்பட்டது என்கிறார் தெரேசா மே. மேலும் எதிர்க்கட்சிகள் தமது பிறெக்சிட்டுக்கான முன்னெடுப்புகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன என்பதாலும் , வெஸ்ட்மின்ஸ்டர் பிரிந்து காணப்படுவதாலும் தமது பலத்தை... Read More
ஐ. நா மூலம் தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வு சாத்தியமா? கஜன் கட்டுரைகள் 

ஐ. நா மூலம் தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வு சாத்தியமா?

அன்று தமது விடுதலைக்காக போராடிய ஒரு சமூகத்தை, இன்று அவர்களின் விடுதலை என்பது எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஐ.நா வின் மூலம்தான் கிடைக்கும் என நம்ப வைத்த பெருமை புலம் பெயர் அமைப்புகள், தூர நோக்கற்ற தமிழ் தலைமைகள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையே சாரும். குறிப்பிட்ட ஒரு இன மக்களின் விடுதலைக்கு அவ்வின மக்களை ஒன்றிணைக்காமல், பல வல்லாதிக்க அரசுகள் சேர்ந்து இயங்கும் ஒரு அமைப்பு (ஐ.நா) விடுதலை வாங்கித் தரும் என எதிர்பார்ப்பது தவறு. ஐ.நாவின் அரசியல் கொள்கை என்பது... Read More
ஐ.நாவின் பெயரால் மக்களை ஏமாற்றும் தமிழ் தலைமைகளும், புலம் பெயர் அமைப்புகளும் கஜன் கட்டுரைகள் 

ஐ.நாவின் பெயரால் மக்களை ஏமாற்றும் தமிழ் தலைமைகளும், புலம் பெயர் அமைப்புகளும்

இனம் மதம் மொழி என்பனவற்றின் பெயரால் பிளவுபட்டிருக்கும் மக்களை ஒன்றிணைத்த போராட்டம் பற்றி தமிழ் தலைமைகளுக்கு எந்த கருத்து நிலைப்படும் இல்லை. மக்களை ஒன்றினைப்பதின் ஊடாக நிரந்தர தீர்வு நோக்கி நகர்வது சாத்தியம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது சில புலம்பெயர் அமைப்புகளோ ஐ.நா வையோ அல்லது அரசாங்கத்தையோ வால்பிடிக்க எண்ணுகிறார்களே தவிர அனைத்து இன மக்களிடமும் அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி தமிழர் தரப்பின் தேவையை அல்லது நியாயத்தை எடுத்துச் சொல்ல முயலவில்லை. லொபி என்ற பெயரில் மக்களின் பணத்தை வாரி இறைக்கின்றது... Read More
துனிசியப் போராட்டம் – ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஒரு ஒப்பீடு கஜன் கட்டுரைகள் 

துனிசியப் போராட்டம் – ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஒரு ஒப்பீடு

பொதுவாக அனைத்து நாடுகளிலும் எழும் மக்கள் எழுச்சியின் பின்னால் அரசின் மீதான கடும் கோபமும் வெறுப்பும் காணப்படும். நீண்டகாலமாக அரசின் ஒடுக்குமுறைகளாலும் அடக்குமுறைகளாலும் வஞ்சிக்கப்படும் மக்கள் திரள் ஒரு கட்டத்தில் வெடித்து கிளம்பி புரட்சியை ஏற்படுத்தும். எந்தப் பிரச்சனையின்போது மக்கள் திரள் வெடிக்கும் என திட்டவட்டமாக எதிர்வு கூற முடியாது. நூறு பாகை ஆனவுடன் கொதித்துக் கொண்டிருக்கும் நீரில் முதலில் எங்கு குமிழ் தோன்றும் என எதிர்வு கூறமுடியாது, அது போலத்தான் எந்தப் புள்ளியில் மக்கள் புரட்சி வெடிக்கும் என நிச்சயமாகக் கணிக்க முடியாது,... Read More
பொறுமை போதும் பொங்கி எழு! கஜன் கட்டுரைகள் 

பொறுமை போதும் பொங்கி எழு!

அடுத்த வருசத்துக்குள் தீர்வாமே? என்ன கதை இது? 1996 ஆம் ஆண்டு சந்திரிக்கா அம்மையார் முன் வைத்த தீர்வைக் கிழித்தெறிந்த ரணில் விக்கிரமசிங்க, 2016 ஆம் ஆண்டு மைத்திரி அரசுடன் இணைந்து சாத்தியமான தீர்வை முன்வைப்பார் என நம்பிக்கொண்டிருப்பது இலவு காத்த கிளியைப் போன்றது. கடந்த கால வரலாற்றை–கொள்கைகளைப் பார்ப்பது, அவர்களின் எதிர்கால நடவடிக்கைளை, ஓரளவுக்கேனும் அறிய உதவும். சம்பந்தர் ஐயா நல்லிணக்கம் என்னும் பொறிமுறைக்குள் அகப்பட்டுக்கொண்டு விட்டார். தனக்கென்று ஒரு வரம்பு வைத்துக்கொண்டு அதற்குள் நின்று பேசுகிறார். வரம்புக்கு வெளியே காணப்படும் தீர்வை-மக்கள்... Read More
மஹிந்த செய்யமுயலும் மாந்திரீகம்.. கஜன் கட்டுரைகள் 

மஹிந்த செய்யமுயலும் மாந்திரீகம்..

-கஐன் தமிழ் தலைமைகளுக்கே தமிழ் மக்களின் மீது அக்கறையும் கரிசனமும் வராத போது தீடிரென்று மஹிந்த ராஜபசவுக்கு தமிழ் மக்களின் மீது அன்பு பெருக்கெடுத்து ஆறாக பாய்கின்றதாம். விக்கினேஸ்வரன் இனவாதி இல்லை என்கிறார், தமிழ் இளைஞர்களுக்கு வேலை இல்லை, சரியான வீதி இல்லை என்கிறார். முகாம்கள் மூடப்பட்டுள்ளதா?, மக்கள் மீள் குடியமர்த்தப் பட்டுள்ளார்களா? எனக் கவலைப்படுகிறார். முகாம்களை உருவாக்கியதே அவர்தான் என்பது அவருக்கே மறந்து விட்டது போலும். யாழிலும் எனக்கு உறவினர்கள் இருக்கின்றனர் என சொந்தம் கொண்டாடுகிறார். பின்னர் ஏன்தான் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு... Read More
விடுதலை விரும்பிகள் ஜெரமி கோபினுக்கு ஆதரவளிக்க வேண்டும் கஜன் கட்டுரைகள் 

விடுதலை விரும்பிகள் ஜெரமி கோபினுக்கு ஆதரவளிக்க வேண்டும்

By Kajan பிரித்தானிய தமிழர்கள் ஏன் ஜெரமி கோபினை ஆதரிக்க வேண்டும்? யார் இந்த ஜெரமி கோபின்? ஏன் தமிழர்கள் அவரை ஆதரிக்க வேண்டும்? அதனால் தமிழர்களாகிய நமக்கு என்ன நன்மை? என்பது பற்றி அலசி ஆராய்கிறது இந்தக் கட்டுரை. ஜெரமி கோபினுக்காக ஆதரவு என்பது கோபின் எனும் தனி மனிதனுக்கான ஆதரவு இல்லை. அது ஜெரமி கோபினின் கொள்கைகளுக்காக கொடுக்கப்படும் ஆதரவே ஆகும். தற்பொழுது இங்கிலாந்தில் எழுந்திருக்கும் கோபின் அலைக்கு கொடுக்கும் ஆதரவு ஆகும். இந்த அலையானது சமூகத்தின் அடித்தட்டு மற்றும் பழைமைவாத... Read More
தேசியம் …. உரையாடல் 2 கஜன் காணொளி 

தேசியம் …. உரையாடல் 2

トランスフォーマー TFアンコール 16 ブルーティカス タカラトミーソフター1/3つめかえ用 500ml 【(20本×10ケース)合計200本セット】 30-597エスプリマ ワインディングマシーン LU-30004RD MDF 4段階設定プログラム ACアダプター LEDライト 鍵付き 保証1年間付き【中川貴雄のカイロプラクティックテクニック】仰臥位頸椎テクニック【業務用】【 ワーキングカート1型 NWT1C 】 【 業務用厨房機器 カタログ掲載 プロ仕様 】【ポイント20倍】特選 水晶二輪正絹松風頭房共仕立正絹ふくさ 401-5000TOR3610 東リ ラグ ヘリンボーン 140×200cm稀少AAAグリーンファントムクォーツ16mmブレス 天然石 パワーストーン Bphantg003★ポイント最大7倍★【全国配送可】-スーパーマグナーパック (ホットマグナー用) 肩・膝・肘用 型番A10102 asn7-2257-02 -【医療・看護用機器】レゴ LEGO ニンジャゴー 【LEGO Ninjago Final Flight of Destiny’s Bounty Set 】 Read More
தேசியம் …. உரையாடல் 1 கஜன் காணொளி 

தேசியம் …. உரையாடல் 1

【開梱設置無料】 エーコー 小型耐火金庫「D-FASE」 DFS1-FE Design Type「D1」 インテリアデザイン金庫 2マルチロック(テンキー式&指紋照合式)+内蔵シリンダー錠搭載!! 1MKマエダ キャビネット JIGN-120 AUD ダークブラウン ホワイトアッシュ材 JIG-NUOVO ジグ・ヌーボ サイドボード リビングボード シンプル モダン おしゃれ ルーバーエプソン PS-600B(エナジャイズドブラック) PULSENSE 活動量計 腕時計タイプロッカー 【幅80cm】 スライドレール付き引き出し 日本製 ホワイト(白) 【完成品 開梱設置】【代引不可】【代引不可】マイセン 波の戯れ ティーポット&シュガーポット&クリーマー 3点セット 【smtb-s】【YDKG-s】【HLS_DU】【RCP】ヒーター・サーモ付小型温室お得な3点セット小型温室FHB-908+園芸用ヒーター サーモスタット付き TOP-150SWS送料無料!薄型非球面レンズ付★【Less than human(レスザンヒューマン)Andrei.C Col.195 Limited(ブラック)正規品】デザインコレクションメガネセット(伊達メガネ・近ヤマケン 積層 はがせるカラーまな板 イエロー 2号B-51mmpt900【0.3ct】 テンダイヤモンド リング 【楽ギフ_包装】テッドベーカー 靴 シューズ 一般 メンズ ブラック Ted Baker London Ted Baker London... Read More
சம்பந்தன் ஐயா அவர்களுக்கு… கஜன் கட்டுரைகள் 

சம்பந்தன் ஐயா அவர்களுக்கு…

நீங்கள் செய்து கொண்டு இருக்கும் உங்கள் “இணக்க அரசியலால்” ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது என்று தெரிந்திருக்கக்கூடிய கெட்டிக்காரர்தான் நீங்கள். ஆனால் தமிழ் மக்களைத்தான் முட்டாள் ஆக்கிக் கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் இணக்க அரசியல் குழம்பிவிடக்கூடாது என்பதுக் காகவே புலம்பெயர் தமிழர்களை மைத்திரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் என்று சொல்லி இருந்தீர்கள். மைத்திரியுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு என்ன உங்களால் பெற்றுக் கொடுக்க முடியும் ? எந்தவித முற்போக்கான திட்டமும் இல்லாமல் மைத்திரி அரசுடன் நீங்கள் மதிய போசனம் உண்பதற்கும் -எதிர்காலத்தில்... Read More