You are here
படைப்புகளை அளக்க முடியாது கட்டுரைகள் சேனன் 

படைப்புகளை அளக்க முடியாது

2016 ஏப்ரல் 2ம் திகதி லண்டனில் நிகழ்ந்த புத்தக வெளியீட்டு கூட்டத்தில் அப்பால் ஒரு நிலம் புத்தக விமர்சனத்தில் பேசியதன் அச்சுவடிவம் -ஆக்காட்டி இதழ் – சேனன் இருப்பினும் அளவுகோல் காவித்திரியும் அடாவடித்தனங்கள் தொடர்ந்து நிகழ்வதுதான். அத்தனை அளவுகோல்களுக்குப் பின்னும் அரசியல் இருக்கிறது என்பதையும் நாம் அவதானிக்க வேண்டும். நல்லது கெட்டது, அழகு, அழகற்றது என்ற அனைத்துக் கூற்றுகளும்  பிளவுகளும் அரசியலின் அடிப்படையில் இருந்தே பிறக்கிறது. ஈழத்து இலக்கியத்திற்கும் தமிழகத்து மற்றும் மலேசிய இலக்கியத்திற்கும் இருக்கும் வேறுபாடுகளும் அரசியற்பாற்பட்டதே. பெரும்பான்மைத் தமிழகத்து இலக்கியங்கள் வியாபார எழுத்துகள்... Read More
ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் கட்டுரைகள் சேனன் 

ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் – ஐரோப்பிய ஒன்றியம் பற்றிய ஒரு இடதுசாரியப் பார்வை! – சேனன் பாகம் 1 இரண்டாம் உலக யுத்தத்தின் கொடிய அனுபவத்தின் பின்பு லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் யுத்தம் மேல் கடும் வெறுப்பு ஏற்பட்டிருந்தது. அர்த்தமற்ற இந்த யுத்தம் ஆளும் வர்க்கத்தின் அபிலாசைகளுக்கான யுத்தமேயன்றி மக்களுக்கு எவ்வித நன்மைகளையும் ஏற்படுத்தவில்லை என்பது பொது அறிவாக இருந்தது. மாறாக யுத்தம் ஏற்படுத்திய அழிவுகளைத்தான் மக்கள் தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது. இனிமேலும் இத்தகைய கொடுமை வேண்டாம் என்ற அடிப்படையில் அமைதிக்கான அவா மேலோங்கியிருந்தது. இது... Read More
ஐரோப்பிய ஒன்றியம் போலியானது! அதிலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் : சேனன் கட்டுரைகள் சேனன் 

ஐரோப்பிய ஒன்றியம் போலியானது! அதிலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் : சேனன்

விசா பிரச்சினையின்றி – கடவுச்சீட்டு பரிசோதனை இன்றி- மற்றய நாடுகளுக்குச் சென்று வருவதற்கு அனைவருக்கும் விருப்பம் உண்டு. அதேபோல் உள்துறை அமைச்சுகள் எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக ஜரோப்பாவிடம் முறையிடும் உரிமை முதலிய அகதிகளுக்கான உரிமைகளும் பலருக்கு ஜரோப்பிய ஒன்றியம் மேல் கவர்ச்சித்தன்மையை உருவாக்கியிருக்கிறது. ஆனால் உண்மையில் மிகச் சொற்பமான எண்ணிக்கையான அகதிகளுக்கு மட்டுமே ஜரோப்பிய ஒண்றியத்தால் பயன் கிடைத்துள்ளது. ஒன்றியத்திற்குள்  இருப்பினும் போக்குவரத்து விதிகள் தெற்காசியர்கள் கறுப்பர்கள் அரேபியர்களுக்கு எதிராகவே இருக்கப்போகிறது. பிரெஞ்சு குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பிரஞ்சு எல்லைகள் மூடப்பட்டதும் – பெல்ஜியம் குண்டு... Read More
வட்டுக்கோட்டை தீர்மானமும் – இன்றய நிலவரமும் கட்டுரைகள் சேனன் 

வட்டுக்கோட்டை தீர்மானமும் – இன்றய நிலவரமும்

04-06-2016ல் நடந்த சொலிடாரிற்றி நாளில் பேசிய கருத்துக்களின் தொகுப்பு – சேனன் 1976ல் உருவான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்(வ.கோ.தீ) முக்கியத்துவம் என்ன? நாற்பது வருடங்களின் பின் அந்த வரலாற்றுக் கட்டத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடியவை என்ன? வ.கோ.தீர்மானம் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. இத்தீர்மானம் உருவாகுவதற்கு முன் நிகழ்ந்த செயற்பாடுகள் அக்காலத்து பெரும்பான்மை தமிழ் அரசியலமைப்புக்களை ஒண்றினைத்தது இன்றும் பலருக்கு கவர்சிகரமாக இருக்கும் ஒரு விசயம். இத்தீர்மானத்தை தொடர்ந்து தமிழ் அரசியல் மையம் தனிநாடு கோரிக்கை நோக்கி... Read More
போராட்டத்தை முடக்கும் திசையில் ஐ.நா வும் மிதவாதிகளும் கட்டுரைகள் சேனன் 

போராட்டத்தை முடக்கும் திசையில் ஐ.நா வும் மிதவாதிகளும்

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் சம்மந்தமாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் அறிக்கை 16-09-2015 அன்று வெளியானது. 2001ல் இருந்து தொடர்ந்து நடந்த பல்வேறு மனித உரிமை மீறல்களையும் மற்றும் 2009 யுத்தகாலப் பகுதியில் நடந்த கோரங்களையும் இந்த அறிக்கை ஏற்றுக்கொண்டுள்ளது. பல்வேறு யுத்தக் குற்ற மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் நடந்திருப்பதை விசாரணை செய்யவேண்டும் என அறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கை ஒரு குற்ற விசாரணை அறிக்கை அல்ல. அறிக்கை குற்றத்தைச் செய்தவர்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை. குற்றங்களுக்கு எத்தகைய தண்டனை... Read More