You are here
கற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் – பகுதி 02 கட்டுரைகள் நடேசன் 

கற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் – பகுதி 02

2015 செப்டேம்பர்  இல் நடைபெற்ற கற்றலோனியா பாராளுமன்ற தேர்தல் சுதந்திர கற்றலோனியாவிற்கான பொது  வாக்கெடுப்பு போலவே நடந்தேறியது.  பிராந்தியத்தின் இரு பெரும் கட்சிகளான CDC (Democratic Convergence of Catalonia) மற்றும் ERC (Republican Left of Catalonia ) சுதந்திரத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் Junts Pel Si ( Together for Yes ) எனும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டன. 135 ஆசனங்களை கொண்ட கற்றலோனியா பாராளுமன்றத்திற்கான தேர்தலில் 39 சதவீத வாக்குகளை பெற்று 62 ஆசனங்களுடன் பெரும்பான்மையை தக்கவைத்தது. இது... Read More
கற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் பகுதி 01 கட்டுரைகள் நடேசன் 

கற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் பகுதி 01

ஐரோப்பாவில் பிரித்தானியா மக்களின் பிரெக்ஸிட் ஆதரவான வாக்களிப்பினை தொடர்ந்து கற்றலோனியா பிராந்தியத்தின் இன்றைய நிலை ஐரோப்பாபாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் தெற்கு மலை தொடரால் பிரிக்கப்பட்டு,  ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் பிரதேசம் கற்றலோனிய ஆகும். கற்றலன் மொழி பேசும் மக்கள் Valencia , the Balearic Islands , Aragon மற்றும் Catalonia ஆகிய ஸ்பெயினின் பிராந்தியங்களிலும் பிரான்ஸ் , இத்தாலி ஆகிய நாடுகளின் சில இடங்களிலும் பரவி வாழ்கின்றனர். ஸ்பெய்னின் 17 தன்னாட்சி கொண்ட பிராந்தியங்களில்  கற்றலோனியா 7.5... Read More
பிரித்தானியாவில் ஈழ அகதிகளின் நிலை கட்டுரைகள் நடேசன் 

பிரித்தானியாவில் ஈழ அகதிகளின் நிலை

மெல்பேர்ணிலிருந்து வெளியாகும் மாதாந்த பத்திரிகை எதிரொலி – ஓகஸ்ட் 2017 பதிப்பில் வெளியாகிய நடேசனின் கட்டுரை 1980 களில் இருந்து புலம் பெயர்ந்து பிரித்தானியா உட்பட பல நாடுகளுக்கு புகலிடம் தேடி செல்ல தொடங்கினர் பெருமளவான ஈழ தமிழ் மக்கள். அவ்வாறு பிரித்தானியாவில் வந்து குடியேற தொடங்கியவர்கள் குறுகிய காலத்தில் மிகவும் பலமடைந்த ஓர் சமூகமாக தம்மை நிலை நிறுத்தியுள்ளது. 2006 ற்கு பின்னர் தாயகத்தில் ஏற்பட்ட சூழ் நிலையால் அதிகமான இளையோர் புலம் பெயர்த்து வரத் தொடங்கினர். உலக அரங்கில் ஏற்பட்ட மாற்றங்களும்... Read More
09.07.2017 அன்று பிரித்தானிய தமிழர் பேரவையால் நடாத்தப்பட்ட கூட்டத்தின் அறிக்கை கட்டுரைகள் நடேசன் 

09.07.2017 அன்று பிரித்தானிய தமிழர் பேரவையால் நடாத்தப்பட்ட கூட்டத்தின் அறிக்கை

பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) ஆலோசனைக் கூட்டம் ஒன்றுக்கு எல்லா அமைப்புக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அழைக்கப் பட்டோர் மட்டும் பங்குபற்றிய இந்தக் கூட்டம்  ஈலிங் அம்மன் கோவிலின் உள்ளே ஜூலை 9 ஆம் திகதி நடைபெற்றது. அம்மன் அருளால் எடுத்த காரியம் இனிதே நிறைவேறும் எனக்கூறி எல்லா தரப்பினரையும் ஒன்றிணைக்கும் முயற்சி இதுவாகும் என்று ஒரு BTF தலைமை உறுப்பினர் அறிவித்தார். ஏறக்குறைய 40 பேர் வந்திருந்த கூட்டத்தில் BTF தவிர Tamil Solidarity (TS), மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் (TNA) ஆகிய... Read More
இலங்கையில் தொடரும் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் – பாகம் -02 – புத்துருவாக்கம் பெறும் பொதுபல சேனாவும்  (BBS) மதவாதமும். கட்டுரைகள் நடேசன் 

இலங்கையில் தொடரும் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் – பாகம் -02 – புத்துருவாக்கம் பெறும் பொதுபல சேனாவும் (BBS) மதவாதமும்.

மஹிந்த அரசு வீழ்த்தப்பட்ட பின்னர் மைத்திரி-ரணில் ஆட்சி காலத்தில் பொதுபல சேனா (BBS) தமது இருப்பை காட்டுக்குவற்காக  தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள் மீது இனவாத தாக்குதலை நடாத்தியதன் ஊடாக புத்துயிர் பெற்றது. தேசிய கலந்து உரையாடலுக்கான அமைச்சரான மனோ கணேசனின் அலுவலகத்துக்குள் புகுந்து அடாவடித்தனங்களை காட்டினார் பொதுபல சேனாவினர். அநாகரீக தர்மபாலாவின் வாரிசுகளிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?   பொதுபல சேனா என்பது வெறும் முஸ்லிம்களுக்கு எதிரான அமைப்பு என்ற ரீதியில் புரிந்து கொள்ள முடியாது. பர்மாவில் முஸ்லிம்களை படுகொலை... Read More
இலங்கையில் தொடரும் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் – பாகம் -01   அரசியல் வரலாற்று பின்னணி கட்டுரைகள் நடேசன் 

இலங்கையில் தொடரும் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் – பாகம் -01 அரசியல் வரலாற்று பின்னணி

இலங்கையில் நடைபெற்ற முதலாவது இனக்கலவரம் 1915 ஆம் ஆண்டு முஸ்லீம் வர்த்தகர்கள் மீது சிங்கள பேரினவாதவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டது. கொழும்பு புறக்கோட்டையில் அமைத்திருந்த ஒரே ஒரு சிங்கள பௌத்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் மகனான அநாகரிக தர்மபாலவினால் பரப்பப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாதம் முதலாளித்துவதுடன் பின்னி பிணைந்துள்ளது என்பது வரலாறு 2014 ஆம் மீண்டும் முஸ்லீம் மக்கள் மீது பெரும் வன்முறையும், அவர்கள் வழிபாட்டிடங்கள் மீதும் , குறிப்பாக அவர்களின் வர்த்தக நிலையங்களை குறிவைத்தும் தாக்குதல்களும் நடாத்தபட்டன.போரினை காரணம் காட்டி சிங்கள மக்கள் மீது... Read More
இம்முறை முள்ளி வாய்க்கால் – அரசியல் பிழைத்தோர் ஆதரவை இழந்தனர். கட்டுரைகள் நடேசன் 

இம்முறை முள்ளி வாய்க்கால் – அரசியல் பிழைத்தோர் ஆதரவை இழந்தனர்.

சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழ் பேசும் மக்கள் மீது நடாத்திய கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் உச்சம் நடைபெற்று எட்டு  ஆண்டுகள் கடந்து விட்டன. முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய அரசபயங்கரவாதத்தை இனப்படுகொலைக்கான நாளாக உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்கள்அடையாளப் படுத்து கின்றனர். 2010 ஆம் ஆண்டில்  மே 18 திகதி லண்டனில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் இத்தினத்தை இனப்படுகொலை நாளாக அடையப்படுத்தினர். எட்டு ஆண்டுகள் கழித்து 2017 இல் அதே லண்டனில் நடைபெற்ற இனப்படுகொலை நினைவேந்தல்  நாளில் பிரித்தானிய தமிழர் பேரவையால் அவர்கள்உறுப்பினர்கள் அடங்கலாக 200 இற்கும்... Read More
யார் இந்த ஜெரமி கோர்பின் கட்டுரைகள் நடேசன் 

யார் இந்த ஜெரமி கோர்பின்

2001 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அல்கொய்தா உட்பட 21 அமைப்புகளை தீவிரவாத பட்டியலில் சேர்த்து – UK இல் அந்த அம்மைப்புகளை தடை செய்வதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. அப்போது ஆளும் கட்சியாக இருந்த தொழிற் கட்சியால் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானத்தை 17 பேர் எதிர்த்து வாக்களித்தனர். அதில் பின்வரிசைப் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த ஜெரமி கோர்பினும் , ஜோன் மக்டொனல்டும் எதிர்த்து வாக்களித்தவர்கள் ஆவர். இதனால் தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக செயற்பட்டார் என்று இவர்கள் இருவருக்கும் எதிராகக் குற்றம் சாட்டப் பட்டு... Read More
லண்டனில் விக்கியின் விஸ்வரூபம் கட்டுரைகள் நடேசன் 

லண்டனில் விக்கியின் விஸ்வரூபம்

  கின்ஸ்டன்  கவுன்சிலுடனான ஒப்பந்ததை வெற்றிக்கரமாக நடாத்திய வட மாகாண முதல்வர் 23-10-2016 ல் -லண்டன் ஹாரோ என்ற இடத்தில் மக்களைச்சந்தித்தார். இந்தச் சந்திப்பு எல்லா தமிழ் பேசும் மக்களுக்குமானதா ? பழமைவாதக் கட்சி உறுப்பினர்கள் தமது உயரடுக்கு மிடுக்கை தமிழ் பாரம்பரியமாக நிறுவ முயன்றது போல் தான் தெரிந்தது. எல்லா மக்களையும் உள்வாங்க விரும்புபவர்கள் -பரதநாட்டியமும் ‘மங்கள’விளக்கேற்றலும் என இந்து மத அடையாளங்களுடன் மட்டும் விழாவை ஆரம்பித்தது தவறு. எழுதி வாசிக்கபட்ட” ஞானத்தோற்றம், காவல் கோட்டை,  தாடிவைத்த தற்கால வள்ளுவனே, தலைவனே, தெய்வமே,... Read More
ஐரோப்பிய ஒன்றியமும் புலம்பெயர் மக்களும் – நடேசன் கட்டுரைகள் நடேசன் 

ஐரோப்பிய ஒன்றியமும் புலம்பெயர் மக்களும் – நடேசன்

புலத்தில் வாழும் மக்கள் மத்தியில் பெரும்பாலும் குடிவரவு பிரச்சினைகளையும் வேலைவாய்ப்புக்களையும் தொடர்பு படுத்தியே பார்க்கப்படுகின்றது ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து அங்கம் வகிப்பதன் மூலம் குடிவரவுச் சட்ட்ங்களிலுள்ள இறுக்கங்கள் தளர்வடையலாம் என்ற எண்ணம் புலம்பெயர்ந்த மக்களிடையே நிலவுகின்றது. அது ஒரு மாயத் தோற்றம் என்பதை புலம்பெயர் மக்கள் புரிந்து கொள்ளல் வேண்டும்.  பிரித்தானியாவின் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் உறுப்பினராய் தொடர்வதை ஆதரித்துப் பிரச்சாரம் செய்கின்றன. ஆளும் கட்சியான கான்செர்வ்டிவ் கட்சி மிகவும் பிற்போக்குத்தனமான நிலைப்பாடைக் கொண்டு செயற்படுவதால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து இருப்பதன் மூலம் இக்கட்சியின் நெருக்கடிகளை   ... Read More