You are here
இலங்கை அரசியலில் சர்வதேச சக்திகள் ஈழம் - இலங்கை கஜமுகன் கட்டுரைகள் 

இலங்கை அரசியலில் சர்வதேச சக்திகள்

78 . Views .பாராளுமன்ற நெருக்கடி, யாப்பு நெருக்கடி எனப் பல்வேறு நெருக்கடிகள் இலங்கையின் அரசியல் களத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந் நெருக்கடிகளின் பின்னால் இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளும் தமது அழுத்தத்தை பிரயோகிப்பது மட்டுமல்லாமல், இதனைப் பயன்படுத்தி இலங்கை மண்ணில் தமது காலை வலுவாக ஊன்ற முயற்சிக்கின்றன. இவ்வாறு சர்வதேச சக்திகள் இலங்கையில் தமது ஆதிக்கத்தை செலுத்த முனைவதன் பின்னணி அரசியலை ஆராய்கின்றது இக்கட்டுரை. சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரு பிரதான கட்சிகளும் இலங்கையின் கடனை... Read More
இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் நெருக்கடி ஈழம் - இலங்கை கஜமுகன் கட்டுரைகள் 

இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் நெருக்கடி

57 . Views .கடந்த அக்டோபர் 26ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, ரணில் விக்கிரமசிங்காவை பிரதமர் பதவியில் இருந்து தடாலடியாக நீக்கியதன் பின்னர் பல விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்தேறின. நெட்பிளிக்சில் (Netflix) வெளியான அரசியல் வலைத்தொடர் (Webseries) நாடகங்களில் ஒன்றான ஹவுஸ் ஒப் கார்ட்ஸ் (House Of Cards) இனை விட இலங்கை அரசியல் களம், சுவாரசியமாகவும் பரபரப்பாகவும் இருந்தது என ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்திருந்தது. கட்சித் தாவல்கள், பேரம் பேசல்கள், அமைச்சுப்பதவி, நம்பிக்கையில்லாப் பிரேரணை, சட்டப் போராட்டம், தூள் எறிதல்,... Read More
இலங்கையின்ஆயுத இறக்குமதியும் இராணுவமயமாக்கலும் அதில் பிரித்தானியாவின் பங்கும். ஈழம் - இலங்கை கட்டுரைகள் நுஜிதன் பிரித்தானியா 

இலங்கையின்ஆயுத இறக்குமதியும் இராணுவமயமாக்கலும் அதில் பிரித்தானியாவின் பங்கும்.

103 . Views .நுஜிதன் இராசேந்திரம் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு பத்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இப்போது இலங்கைக்கு வெளிநாட்டு போர் அச்சுறுத்தலோ, பாதுகாப்பு அச்சுறுத்தலோ இல்லாத நிலையிலும் இலங்கை ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதை நிறுத்திக்கொள்ளவில்லை. 1983 முதல் 2009 வரை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போர் எனவும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று உலகநாடுகளை நம்பவைத்து தொடர்ந்து, காணாமல் போதல் , யுத்தக் குற்றங்கள், தன்னிச்சையான தடுத்துவைத்தல், சித்திரவதைகள், அச்சுறுத்தல் மற்றும் சட்டவிரோத வெகுஜன தடுப்பு ஆகியவற்றில் இலங்கை... Read More
கனம்  சம்பந்தன் ஐயா ஈழம் - இலங்கை கஜமுகன் கட்டுரைகள் 

கனம் சம்பந்தன் ஐயா

274 . Views .சம்பந்தன் ஐயாவுக்கு 2015இல் எழுதிய மடல் காலத்தின் தேவை கருதி மீள் பிரசுரிக்கிறோம். சம்பந்தன் ஐயா அவர்களுக்கு… நீங்கள் செய்து கொண்டு இருக்கும் உங்கள் “இணக்க அரசியலால்”; ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது என்று தெரிந்திருக்கக்கூடிய கெட்டிக்காரர்தான் நீங்கள். ஆனால் தமிழ் மக்களைத்தான் முட்டாள் ஆக்கிக் கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் இணக்க அரசியல் குழம்பிவிடக்கூடாது என்பதுக் காகவே புலம்பெயர் தமிழர்களை மைத்திரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் என்று சொல்லி இருந்தீர்கள். மைத்திரியுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு என்ன... Read More
பாகிஸ்தானின் புதிய அரசு எதிர்நோக்கவுள்ள சவால்கள கஜமுகன் கட்டுரைகள் சர்வதேசம் 

பாகிஸ்தானின் புதிய அரசு எதிர்நோக்கவுள்ள சவால்கள

203 . Views .சு. கஜமுகன் (லண்டன்) gajan2050@yahoo.com பாகிஸ்தானில் கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு இம்ரான் கானின் பி.ரி.ஐ கட்சியானது ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் பிரதமாராக பதவி ஏற்றுக்கொண்ட இம்ரான் கானின் புதிய அரசுக்கு பல்வேறு நெருக்கடிகள் காத்திருக்கின்றன. ஜனநாயகத்தை காப்பாற்றுதல், ஊழலுக்கு எதிராக போராடுதல், மக்களின் கடனை நீக்குதல் ,கல்வி மற்றும் மருத்துவத்தை அரசு வழங்குதல், மத அடிப்படை வாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தல், இஸ்லாமிய நலன்புரி அரசை உருவக்குதல் என... Read More
காவல்துறை அதிகாரியின் ஸ்காட்லாந்து பயணம் ரத்து கஜமுகன் கட்டுரைகள் 

காவல்துறை அதிகாரியின் ஸ்காட்லாந்து பயணம் ரத்து

337 . Views .சு.கஜமுகன் (லண்டன்) gajan2050@yahoo.com கடந்த சனிக்கிழமை (செப்டெம்பர் 29) பிரித்தானியாயவிற்கு வருகை தரவிருந்த, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரியான புஜித் ஜெயசுந்தரவின் பயணமானது இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. ஸ்காட்லாந்திலுள்ள, ஸ்காட்டிஷ் போலீஸ் கல்லூரியில் ஒரு வாரம் தங்கியிருந்து பிரத்தியோக பயிற்சி எடுக்கவிருந்த நிலையிலேயே இப் பயணமானது ரத்து செய்யப்பட்டது. ஸ்காட்லாந்து போலீஸ் கல்லூரியானது 2௦13 முதல் கல்லூரியாக மட்டுமல்லாமல் ஸ்காட்லாந்து காவல்துறையின் தலைமையகமாகவும் விளங்குகின்றது. உளவுத்துறை பகுப்பாய்வு, துப்பறிதல், தொழில்நுட்பங்களைக் கையாளுதல், என பல்வேறு பயிற்சிகள் இங்கு... Read More
இம்ரான் கானின் வெற்றியின் பின்னணியில் இராணுவம்!! கஜமுகன் கட்டுரைகள் 

இம்ரான் கானின் வெற்றியின் பின்னணியில் இராணுவம்!!

228 . Views .சு.கஜமுகன் (லண்டன்) gajan2050@yahoo.com கடந்த மாதம் பாகிஸ்தானில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் முன்னால் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பி.ரி.ஐ ( தெஹ்ரீக் – இ- இன்சாப்) கட்சி வெற்றி பெற்றுள்ளது அல்லது வெல்ல வைக்கப்பட்டுள்ளது எனலாம். பாகிஸ்தானின் இருபத்திரண்டாவது பிரதமராக ஆட்சி அமைத்திருக்கும் இம்ரான் கானின் பி.ரி.ஐ கட்சியானது 1996 ஆம் ஆண்டு உருவாகப்பட்டு, 22 ஆண்டுகளின் பின்னர் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பாகிஸ்தான் தேசிய சபையானது 342 ஆசனங்களைக் கொண்டது அதில் 272 ஆசனங்கள் தேர்தல் மூலம்... Read More
பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கானின் வெற்றி புதிய திருப்புமுனையா ? கட்டுரைகள் சர்வதேசம் சேனன் 

பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கானின் வெற்றி புதிய திருப்புமுனையா ?

403 . Views . தேர்தல் முடிவுகள் கடந்த 27 ம் திகதி நடந்து முடிந்த பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கானின் கட்சி பி.ரி.ஐ வெற்றி அடைந்துள்ளது. இந்தத் தேர்தல் உலகெங்கும் கவனத்துக்குள்ளாகியதற்குப் பல காரணங்கள் உண்டு. பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் கப்டனாக இருந்த இம்ரான் கான் உலகளவில் ஏற்கனவே அறியப்பட்டவராக இருப்பது, ஒப்பீட்டளவில் புதியதாக உருவாகிய இவரது கட்சி தேர்தலில் வென்று இருப்பது போன்ற விசயங்களும் இக்கவன ஈர்ப்புக்குக் காரணமாக இருக்கின்றன. 342 ஆசனங்கள் உள்ள பாகிஸ்தான் தேசிய சபையில் (National... Read More
நல்லாட்சியும் பிரதான அபிவிருத்தித் திட்டங்களாக மாறும் சிங்களக் குடியேற்றங்களும் பௌத்த மதபரம்பலும் ஈழம் - இலங்கை கட்டுரைகள் 

நல்லாட்சியும் பிரதான அபிவிருத்தித் திட்டங்களாக மாறும் சிங்களக் குடியேற்றங்களும் பௌத்த மதபரம்பலும்

365 . Views .நுஜிதன் இலங்கையிலே ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு வந்து ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் வடகிழக்கிலே வாழும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் தனியார் காணிகள் இன்னமும் இலங்கை இராணுவத்தினால் அபகரிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்ட நிலையே உள்ளது. இவ்விதமாகத் தமக்கென தனியார் காணிகளை அபகரிப்பதும் பல நூற்றுக்கணக்கான விவசாயிகள்,பொதுமக்கள் மற்றும் மீனவர்களின் பாரம்பரிய வாழ்வாதாரத்துக்கு உலைவைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்து நிரக்கதிக்கு உள்ளாக்குவதும் இலங்கை அரசின் நடைமுடையாக இருந்து வருகிறது. அரசின் நல்லிணக்கம் பற்றிய நேர்மைத் தன்மையை இது கேள்விக்குள்ளாக்கி... Read More
ஈழத்துக்கு எதிரான இலங்கை மாவோயிச பார்வை ஈழம் - இலங்கை கட்டுரைகள் சேனன் 

ஈழத்துக்கு எதிரான இலங்கை மாவோயிச பார்வை

288 . Views .வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை – என்ற சி க செந்தில்வேல் அவர்களின் நூலினை முன் வைத்து… 1 தேசியம் பற்றிய சரியான நிலைபாடு எடுக்காது,  போல்சுவிக்குகள் இரஷ்யப் புரட்சியை ஒரு சோசலிசப் புரட்சி நோக்கி நகர்த்தியிருக்க முடியாது. தேசியம் பற்றிய தெளிவான பார்வை புரட்சியை முன்னடத்த மட்டுமல்ல, புரட்சிகர கட்சியை கட்டுவதற்கும் அவசியம். இரஷ்யப் பெரும் தேசிய இறுகிய பிடிக்குள்ளும், பல் தேசிய அடையாளங்களை புரட்சிகர மாற்றுக்காக வென்றெடுக்கும் வேலையை செய்தனர் போல்சுவிக்குகள். இதற்காக தேசியம் பற்றிய தெளிவான... Read More
பொருளாதார நெருக்கடியின் மூன்றாம் கட்ட வீழ்ச்சியின் சாத்தியமும் -தெற்காசியாவும் இந்தியா ஈழம் - இலங்கை கட்டுரைகள் சர்வதேசம் சேனன் 

பொருளாதார நெருக்கடியின் மூன்றாம் கட்ட வீழ்ச்சியின் சாத்தியமும் -தெற்காசியாவும்

968 . Views . உலகப் பொருளாதார நெருக்கடியின் மூன்றாம் கட்ட வீழ்ச்சியின் சாத்தியம் நவ காலனித்துவ நாடுகளைச் சுற்றி இருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. குறிப்பாக்க சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இது அந்த நாட்டின் அரசியல் நடைமுறைகளிலும் பாரிய மாற்றை கொண்டுவந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் வரும் புதிய நெருக்கடி இந்த நாடுகளுக்குள்ளேயே குறுகி நின்று அழிந்து விடும் என எதிர்பார்ப்பதும் தவறு. உலகப் பொருளாதாரத்தின் 58% பகுதி ‘வளர்ந்து வரும்’ நாடுகள் எனச் சொல்லப்படும்... Read More
வளங்களை வேட்டையாடும் வேதாந்தா இந்தியா கஜமுகன் கட்டுரைகள் சர்வதேசம் தமிழ்நாடு 

வளங்களை வேட்டையாடும் வேதாந்தா

249 . Views .சு. கஐமுகன் gajan2050@yahoo.com அண்மையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையையை மூடக் கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில், அரசு மேற்கொண்ட அரச பயங்கரவாதத்தில்  பதின்மூன்று பொது மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்ததும் இருந்தனர். வேதாந்தா போன்ற காப்ரேட் நிறுவனங்களின் நலனுக்காக தனது சொந்த மக்களையே குருவிகளை சுடுவது போல் சுட்டு கொன்றது மோடி/தமிழ்நாடு அரசு. காப்ரேட்டின் நலனுக்காக எந்த எல்லை வரைக்கும் இவ்வரசு செல்லும் என்பதையே மேற்படி தூத்துக்குடி சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது. தமது உரிமைகளுக்காக குரல் கொடுக்கக் கூடாது,... Read More
பசுமை அழிப்பு சாலையை உடனடியாக கைவிடு இந்தியா கட்டுரைகள் தமிழ்நாடு 

பசுமை அழிப்பு சாலையை உடனடியாக கைவிடு

289 . Views .மத்திய அரசின் பாரத்மலா ப்ரயோஜனா திட்டத்தின்கீழ் சேலம் – சென்னை இடையே ரூ 10,000 கோடி மதிப்பீட்டில் புதிய 8 வழி (பசுமை?) விரைவு சாலை அமைத்திடும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். ஏற்கனவே இருக்கும் 4வழிச்சாலையில் எவ்வித பிரச்சனைகளும் இல்லாத நிலையில் யாருக்காக இத்திட்டம்.? சேலத்திலிருந்து அரூர், ஊத்தங்கரை,செங்கம்,போளூர் ஆற்காடு திருவண்ணாமலை& காஞ்சிபுரம் மாவட்ட வழியாக தாம்பரம் முதன்மைச் சாலையை அடையும் வகையில் புதிய 8 வழி சாலை அமைக்கப்பட இருக்கிறது இதனால்... Read More
விசேட அதிரடிப் படையினரின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய ITJP அறிக்கை: பாகம் 2 ஈழம் - இலங்கை கஜமுகன் கட்டுரைகள் 

விசேட அதிரடிப் படையினரின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய ITJP அறிக்கை: பாகம் 2

554 . Views .-சு. கஐமுகன் gajan2050@yahoo.com 2016 இலிருந்து  இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதரகமானது இலங்கையின் காவல்  துறையின் சீர்திருத்தத்திற்கு உதவி செய்வதோடு மட்டுமல்லாமல் விசேட அதிரடிப் படையினரின் பயிற்சித் திட்டம் தொடர்பான கூட்டங்களிலும் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. யுத்தம் நிறைவடைந்த பின்னரும் கூட 3500 ற்கும் மேற்பட்ட  காவல்துறையினருக்கு விசேட அதரடிப் படையினர்க்கான பயிற்சியை வழங்கியுள்ளது பிரித்தானியாவின்  ஸ்காட்லாந்துயார்ட் போலீஸ்.  விசேட  அதிரடிப் படையினரின் வளர்ச்சியின் பின்னணியில் இலங்கை அரசு மட்டுமல்ல, பிரித்தானிய அரசும் இருக்கிறது என்பதுதான் மறைமுக உண்மை அண்மையில் லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை... Read More
போராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 3 கட்டுரைகள் சேனன் பிரித்தானியா 

போராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 3

341 . Views .5. உருட்டல் மிரட்டல்களை நிறுத்துங்கள். ஒரு நிகழ்வை குழப்புவது – அடாவடியாக நடப்பது – அதிகாரத்தை காட்ட முயல்வது போற்ற செயல்கள் தவறு. அத்தகைய நடைமுறைகளை தமிழ் சொலிடாரிட்டி ஊக்குவிப்பதில்லை. டி சி சி யில் இருக்கும் சிலருக்குத்தான் அது கைவந்த கலை. இவர்கள் கூட்டங்களில் செய்யும் அடாவடித் தனங்கள் அனைவரும் அறிந்ததே. இந்த வருடம் நடந்த முள்ளிவாய்க்கால் நிகழ்வில் குழப்பும் நோக்கத்தோடு தோழர்கள் கலந்து கொள்ளவும் இல்லை – அந்த நோக்கத்தில் இயங்கவும் இல்லை. அப்படி நோக்கில் சென்றிருப்போமாயின்... Read More
போராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 2 கட்டுரைகள் சேனன் பிரித்தானியா 

போராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 2

400 . Views .3 போராட்ட திரட்சியாக ஒழுங்கமைப்பது என்றால் என்ன? அதிகார சக்திகள் மேடை ஏற்றப்பட்டு எமக்கு வியாக்கியானம் கொடுப்பதும் – அழுது காட்டுவதும் வேண்டாம். எமது கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமானால் அவர்களை அழையுங்கள். மக்களின் முதுகில் நின்று மக்களின் நலனுக்கு எதிராக இயங்கும் யாவரும் போராட்ட சக்திகளின் எதிரிகளே. பேச்சளவில் இன்றி அரசியல் ரீதியாக எமது நலனுக்கு உடன்படும் சக்திகளின் நட்பை திரட்டும் முயற்சியை நாம் செய்யலாம் – அத்தகையவர்களை அழைத்து மேடை ஏற்றுங்கள். அதிகார சக்திகளின் சின்னங்களை புறந்தள்ளுங்கள்.... Read More
விசேட அதிரடிப் படையினரின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய ITJP அறிக்கை: பாகம் 1 ஈழம் - இலங்கை கஜமுகன் கட்டுரைகள் 

விசேட அதிரடிப் படையினரின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய ITJP அறிக்கை: பாகம் 1

252 . Views .-சு. கஐமுகன் gajan2050@yahoo.com விசேட அதிரடிப் படையினரின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய ITJP அறிக்கை சர்வதேச உண்மைமற்றும் நீதிக்கான செயற்திட்டம் (ITJP – International Truth and Justice Project) என்னும் அமைப்பானது இடைநிலை நீதி நிபுணர் ஜஸ்மின் சூக்காவின் வழிகாட்டலின் கீழ் தென் ஆபிரிக்காவிலுள்ள மனித உரிமைகளுக்கான அமைப்பினால் (Foundation for Human Rights)  நடாத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட ITJP இன் அறிக்கையானது ஒரு சில குறைபாடுகளைக் கொண்டிருந்த போதும் தற்போதைய சூழலில் மிக முக்கியமானதாகக் கவனத்திற் கொள்ள வேண்டிய ஒரு அறிக்கை ஆகும். ஏனெனில் இதுவரை வெளிவந்த போர்க்குற்றம்... Read More
போராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 1 கட்டுரைகள் சேனன் பிரித்தானியா 

போராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 1

471 . Views .1 மே மாதம் 18ம் திகதி 2009 ஆண்டு முள்ளிவாய்க்காளில் என்ன நடந்தது? சிங்கள இனவெறியர்களுக்கு இது யுத்தம் வென்ற வெற்றிக் களிப்பு நாள். சமரச வாதிகளுக்கு ‘ஒருபடியாக யுத்தம் முடிவுக்கு வந்த’ நாள். வலதுசாரிகளுக்கு புதிய புதிய லாபங்கள் கண்ணுக்குத் தெரிந்த நாள். மேற்கு அரசுகளுக்கு தொலைந்து கொண்டிருந்த தெற்காசிய நலன் ஓன்று மீளத் தொடங்கிய நாள். சீனாவுக்கு தன் நலனுக்கு ரோட்டுப் போட்ட நாள். கூட்டமைப்புக்கு ‘கூட்டுக்கு’ ஒரு புது அர்த்தம் பிறந்த நாள். புலி எதிர்ப்பாளர்களுக்கு... Read More
ஜோர்டான்: மக்கள் எழுச்சி கட்டுரைகள் சத்யா ராஜன் சர்வதேசம் 

ஜோர்டான்: மக்கள் எழுச்சி

448 . Views .முன் எப்பொழுதும் காணாத  ஆர்ப்பாட்டங்கள், பொது வேலைநிறுத்தம் என ஜோர்டானிய ராஜ்யமே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. அல்பானியா நகரத்திற்கு சென்றிருந்த மன்னர் அப்துல்லா, உடனடியாக நாடு திரும்பி பிரதம மந்திரி ஹனி அல் முல்கீயை பதவி நீக்கம் செய்ததன் மூலம் இவ்வெழுச்சியை கட்டுப்படுத்த முயன்றுள்ளார். வாழ்க்கைச் செலவீனம் அதீதமாக உயர்ந்ததும், அரசு இயந்திரம்  ஊழல் மயம் ஆனதுக்கும் எதிராக எழுந்த கொந்தளிப்பு – அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை ரத்து செய்துவது மட்டுமின்றி ஒருபடி மேலே சென்று பிரதமரை நீக்கும் அளவுக்கு சென்றுள்ளது. இப்போராட்டம்... Read More
படுகொலை செய்யும் வேதந்தாவுக்கு எதிராகத் திரள்வோம் அறிவிப்பு இந்தியா கட்டுரைகள் சத்யா ராஜன் பிரித்தானியா 

படுகொலை செய்யும் வேதந்தாவுக்கு எதிராகத் திரள்வோம்

225 . Views .சத்யா ராஜன் தூத்துக்குடியில்  ஸ்டேர்லைட் ஆலையை மூடக் கோரி மக்கள் நடத்திய போராட்டம் தமிழ் நாட்டு அரசால் கடும் வன்முறை மூலம் முடக்கப் பட்டு வருகிறது. இதுவரை இறந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இது திட்டமிட்ட அரச பயங்கரவாதம். எதிர்ப்பை அடக்க மக்களை பதட்ட நிலையில் வைத்திருக்கிறது தமிழ் நாடு அரசும் காவல்துறையும். தூத்துக்குடி,  திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கண்டித்து தமிழ் நாட்டிலும் சர்வவதேசமெங்கும் வாழும் தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை பதிந்து... Read More