எமது உரிமைகளை போராடாமல் பெற முடியாது செய்திகள் செயற்பாடுகள் 

எமது உரிமைகளை போராடாமல் பெற முடியாது

தற்போதய அரசின் கொள்கைகள் குடிவரவாளர் மற்றும் அகதிகளுக்கு எதிரானது. இந்த நிலைப்பாட்டை நாம் மாற்றுவதானால் இந்தக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டச் சக்திகளுடன் நாம் இணைய வேண்டும். நாம் இந்தக் கொள்கைகள் சரி என ஏற்றுக் கொள்ளவில்லை என்ற செய்தியைப் பதிய வேண்டும்.  நாம் போராட்டச் சமூகத்தில் இருந்து வந்தவர்கள் என்பதை உட்துறை அமைச்சுக்கு தெரியப் படுத்துவது அவசியம். இந்த நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலம் சரியான கொள்கைப் பக்கம் நிற்பது மட்டுமின்றி எமது கோரிக்கைகளுக்கான ஆதரவையும் நாம் திரட்ட முடியும். அகதி கோரிக்கையாளர் வேலை... Read More
சொலிடாரிட்டி நாள் (Solidarity Day) 2017 செய்திகள் செயற்பாடுகள் 

சொலிடாரிட்டி நாள் (Solidarity Day) 2017

2017 ஆம் ஆண்டிற்கான சொலிடாரிட்டி நாள் (Solidarity Day ) கடந்த சனிக்கிழமை யுனைட் (Unite) தொழிற்சங்க தலைமை காரியாலத்தில் நடைபெற்றது. தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினால் ஒழுங்கு செய்யபட்ட இந்நிகழ்வில் பல்வேறு அமைப்புகளுடன் வெவ்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. லொபி அரசியல் தான் எம்மக்களுக்கு ஒரே வழி என்போருக்கும் , வேறு வழியில்லை எனக்கூறி நல்லிணக்கம் ,சாணக்கியம் மூலம் தருவதை பெற்று வாழ்வோம் என்போருக்கும் அரசியல் உரையாடலுக்கு அழைப்பு விடப்பட்டது. மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் முன்னோக்கு அரசியல் உள்ளடங்கலான தமிழ் சொலிடாரிட்டியின்  அரசியல் நிலைப்பாடு பற்றியும்... Read More
இலங்கையில் தொடரும் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் – பாகம் -01   அரசியல் வரலாற்று பின்னணி கட்டுரைகள் நடேசன் 

இலங்கையில் தொடரும் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் – பாகம் -01 அரசியல் வரலாற்று பின்னணி

இலங்கையில் நடைபெற்ற முதலாவது இனக்கலவரம் 1915 ஆம் ஆண்டு முஸ்லீம் வர்த்தகர்கள் மீது சிங்கள பேரினவாதவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டது. கொழும்பு புறக்கோட்டையில் அமைத்திருந்த ஒரே ஒரு சிங்கள பௌத்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் மகனான அநாகரிக தர்மபாலவினால் பரப்பப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாதம் முதலாளித்துவதுடன் பின்னி பிணைந்துள்ளது என்பது வரலாறு 2014 ஆம் மீண்டும் முஸ்லீம் மக்கள் மீது பெரும் வன்முறையும், அவர்கள் வழிபாட்டிடங்கள் மீதும் , குறிப்பாக அவர்களின் வர்த்தக நிலையங்களை குறிவைத்தும் தாக்குதல்களும் நடாத்தபட்டன.போரினை காரணம் காட்டி சிங்கள மக்கள் மீது... Read More
தாயக மக்களின் அரசியல் எழுச்சியும் புலம்பெயர் மக்களின் ஆதரவும் செய்திகள் செயற்பாடுகள் 

தாயக மக்களின் அரசியல் எழுச்சியும் புலம்பெயர் மக்களின் ஆதரவும்

பிரித்தானியாவில் ஞாயிற்றுக்கிழமை (25.06.2017 )அரசியல் அடக்குமுறைகளுக்கு எதிரான தாயக மக்களின் போராட்டங்களுக்கு புலத்தில் இருந்து நமது ஆதரவினை அளிக்கும் முகமாக Wembly Central Station க்கு முன்பாக  ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.   போராட்டத்தை அமைப்புகள் சாராது இளைஞ்சர்கள் ஓர் ஏற்பாட்டு குழுவை அமைத்து ஒழுக்கமைத்திருந்தனர்.  வேறு வேறு அமைப்புகளில் அரசியல் செயற்பாட்டாளர்களாக இருக்கும் இவ் இளையோர் பொதுவான மக்கள் பிரச்சனைகளுக்கு ஒன்றிணைத்து செயற்பட்டு மக்களை ஒன்றிணைதலின் முதல் படி இப் போராட்டம் எனலாம்.   தாயாக மக்களின் நிலைப்பாடுகளுக்கு ஆதரவளித்து நடாத்த பட்ட... Read More
பிரித்தானியாவில் ஓன்றினையும்  தமிழ் இளையோரின் முயற்சிக்கு ஆதரவு அளியுங்கள் அறிவிப்பு செய்திகள் செயற்பாடுகள் 

பிரித்தானியாவில் ஓன்றினையும் தமிழ் இளையோரின் முயற்சிக்கு ஆதரவு அளியுங்கள்

பிரித்தானியாவில் ஓன்றினையும்  தமிழ் இளையோரின் முயற்சிக்கு ஆதரவு அளியுங்கள் தாயக மக்களின் அரசியல் எழுச்சி புலம்பெயர் மக்களின் ஆதரவு’ என்ற தொனி பொருளில் வருகின்ற  25.06.2017 ஞாயிற்றுக்கிழமை WEMBLEY CENTRAL STATION முன்பாக மதியம் 02:00 மணி தொடக்கம் 05:00 மணி வரை ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எந்த ஓர் அமைப்பும் இளையோர் சிலர் ஏற்பாட்டு குழு ஒன்றை உருவாக்கி இவ் போராட்டதை ஒருங்கமைத்துள்ளனர். தற்போது தாயகத்தில் நிகழும் மக்களின் எழுச்சிப் போராட்டங்களுக்கு புலத்து மக்களும் தமது ஆதரவை தெரிவிக்கும் முகமாக ஒழுங்கமைக்கப்... Read More
2017 ஆம் ஆண்டிற்கான சொலிடாரிட்டி நாள் (Solidarity Day ) அறிவிப்பு செய்திகள் செயற்பாடுகள் 

2017 ஆம் ஆண்டிற்கான சொலிடாரிட்டி நாள் (Solidarity Day )

தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக தொழிற்சங்கங்களோடும் பிற அமைப்புகளோடும் கலந்துரையாடல் 2017 ஆம் ஆண்டிற்கான சொலிடாரிட்டி நாள் (Solidarity Day ) எதிர்வரும் சனிக்கிழமை காலை 10.30 மணி தொடக்கம் யுனைட் (Unite) தொழிற்சங்க தலைமை காரியாலத்தில்நடைபெற உள்ளது. தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினால் ஒழுங்கு செய்யபடும் இந்நிகழ்வு வெவ்வேறு கலந்துரையாடல்களை  உள்ளடக்கியது . லோபி அரசியல் தான் எம்மக்களுக்கு ஒரே வழி என்போருக்கும் , வேறு வழியில்லை எனக்கூறி நல்லிணக்கம் ,சாணக்கியம் மூலம் தருவதை பெற்று வாழ்வோம் என்போருக்கும் தமிழ் சொலிடாரிட்டியின்  அரசியல் நிலைப்பாடு... Read More
லண்டனில் திருமுருகன் காந்தி மற்றும் கைதுசெய்யப்பட்ட மூவரையும் விடுதலை செய்யுமாறு போராட்டம் செய்திகள் செயற்பாடுகள் 

லண்டனில் திருமுருகன் காந்தி மற்றும் கைதுசெய்யப்பட்ட மூவரையும் விடுதலை செய்யுமாறு போராட்டம்

‘போராடுவது எங்கள் உரிமை ‘ என்னும் தொனிப்பொருளில் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உட்பட்ட கைது செய்யப்பட்ட தோழர்களை விடுதலை செய்யுமாறும், மோடி மற்றும் ஒன்றிய அரசாங்களின் மாநிலங்கள் மீதான அடக்குமுறையையும் எதிர்த்து லண்டனில் உள்ள இந்திய உயரஸ்தானியர் அலுவலகத்திற்கு முன்பாக 19 – 06 – 2017 இன்று ஆர்ப்பாட்டம் ஓன்று நடைபெற்றது.   தமிழ் சொலிடாரட்டி அமைப்பினால் ஓழுங்கமைக்கப்பட்ட இந்த போராட்டத்தில் பல நாடுகளில் இருந்தும் புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள் பலரும் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவளித்தனர். அரசியல்... Read More
பிரித்தானியத் தேர்தல் – டி. யு. பி. பின்னணி  – பகுதி 2 கட்டுரைகள் சேனன் 

பிரித்தானியத் தேர்தல் – டி. யு. பி. பின்னணி – பகுதி 2

இலங்கைக்கு ஒரு பொது பல சேன – இந்தியாவுக்கு ஒரு சிவ சேன இருப்பதுபோல் வட அயர்லாந்துக்கு ஒரு டி. யு. பி. உண்டு. வட அயர்லாந்தில் வசித்து வரும் புரடஸ்தான் மதத்தவருக்கும் கத்தோலிக்க மதத்தவருக்கும் இடையில் நீண்ட கால முரண் இருந்து வருவது தெரிந்ததே. இங்கிலாந்துப் புரடஸ்தான் மதத்தை ஏற்க மறுத்தும் பிரித்தானிய ஏகாதிபத்தியம் அயர்லாந்தில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் கத்தோலிக்க மதத்தவரிடம் எதிர்ப்பு இருந்து வருகிறது. ஐக்கிய அயர்லாந்துக் கோரிக்கையை வைத்து வரும் அவர்கள் மத்தியில் பலமான எதிர்ப்பு சக்திகள்... Read More
பிரித்தானியத் தேர்தல்  – முடிவுகள் – பகுதி 1 கட்டுரைகள் சேனன் 

பிரித்தானியத் தேர்தல்  – முடிவுகள் – பகுதி 1

பிரித்தானியத் தேர்தல் முடிவுகள் பற்றிய சில விபரங்களை மட்டும் கீழ தந்துள்ளோம். தேர்தல் பற்றிய ஆய்வுகள் மற்றும் தொங்கு பாராளுமன்றம் என்றால் என்ன என்ற விபரங்களை தொடர்ந்து இங்கு பதிவிட இருக்கிறோம். தொடர் பதிவுகளைப் பெற உங்கள் ஈ மெயிலை இந்தத் தளத்தில் பதிவிடுங்கள். இந்த வார வாரந்திர ஞாயிறு நேரலையிலும் இது பற்றி உரையாட இருகிறோம். இங்கிலாந்து நேரம் 4pm மணிக்கு எம்மோடு இணைந்து கலந்து கொள்ளுங்கள். – எதிர்   1 தேர்தல் இறுதி முடிவுகள் 650 ஆசனங்கள் உள்ள பிரித்தானியப்... Read More
வாக்களிக்க முதல் பார்த்து-சிந்திக்க வேண்டிய புள்ளிகள் கட்டுரைகள் சேனன் 

வாக்களிக்க முதல் பார்த்து-சிந்திக்க வேண்டிய புள்ளிகள்

நிலவரம் சிறு வீடு வாங்க குறைந்த பட்சம் £210 000 பவுன்சுகள் தேவை. கல்விச் செலவுக்கு ஒருவருக்கு £ 40 000 வரை தேவை சராசரி மாத வருவாய் £1256 – செலவு £1200ல் இருந்து £2500   மாதச் செலவு  குறைந்த பட்சம் மோர்கேஜ் அல்லது வாடகை £920 மாத பில்ஸ் £300 – £1600 (3 bed houe) கல்வி கடன் கட்டுதல் ஆகியன £100 – £1000 உணவு – போக்குவரத்து ஆகியன சேர்க்கப்பட முதலே மாசம் குறைந்த பட்சம்... Read More
பிரித்தானியாவின் தேவை ஜெரமிக் கோர்பினா? தெரேசா மேயா ? கஜன் கட்டுரைகள் 

பிரித்தானியாவின் தேவை ஜெரமிக் கோர்பினா? தெரேசா மேயா ?

பிரித்தனியாவின் உடனடித் தேவை ஜெரமிக் கோர்பினா? அல்லது  தெரேசா மேயா?. சந்தேகமே வேண்டாம் ஜெரமிக் கோர்பின் தான். அதற்குரிய காரணம் கோர்பின் மீதான தனிப்பட்ட காதலும் அல்ல தெரேசா மீதான கண்மூடித்தனமான வெறுப்புமல்ல. அவர்களின் மக்கள் சார்பான கொள்கைகளே காரணமாகும். தெரேசா மேயின் கொள்கை எனபது சிறுபான்மையினருக்கானது. அதற்காக பிரித்தானிய அரசால் அடக்கி ஒடுக்கப்படும் சிறுபான்மை என எண்ணி விடவேண்டாம், காப்ரேட் கம்பனிகளின் முதலாளிகளான, கன்சர்வேட்டிவ் கட்சியின் நண்பர்களே அவர்களாகும். தெரேசா மே யின் கொள்கைககள், திட்டங்கள் என்பன காப்ரேட் கம்பனியின் நலன்களையே முன்னிலைப்படுத்துகின்றது.... Read More
வரலாற்றில் -நீண்ட தற்கொலைக் குறிப்பு கட்டுரைகள் சேனன் 

வரலாற்றில் -நீண்ட தற்கொலைக் குறிப்பு

1. ஜெரமி கோர்பினுக்கு எதிராக அனைத்து அதிகாரச் சக்திகளும் ஒன்றுபட்டு நிற்பது அனைவரும் அறிந்ததே. எல் எஸ் ஈ செய்த ஆய்வின் படி 75 வீதத்துக்கும் மேற்பட்ட ஊடக நடவடிக்கை கொர்பின் பற்றிப் பொய் பிரச்சாரம் செய்வதை வெளிக்காட்டி இருக்கிறது (http://www.lse.ac.uk/media@lse/research/Mainstream-Media-Representations-of-Jeremy-Corbyn.aspx, http://www.independent.co.uk/voices/jeremy-corbyn-media-bias-labour-mainstream-press-lse-study-misrepresentation-we-cant-ignore-bias-a7144381.html). பெரும்பான்மை ஊடகங்கள் பெரும் முதலாளிகளின் கையில் இருக்கிறது. கோர்பின் வெல்லாமல் இருப்பதற்கு எது செய்யவும் தயாராக இருக்கிறார்கள் அவர்கள். கோர்பின் தேர்தல் கொள்கைகள் வெளி வந்தபோது அந்தக் கொள்கைகளை தொழிலாளர் கட்சியின் 83ம் ஆண்டுத் தேர்தல் அறிக்கையோடு ஒப்பிட்டு வர்ணித்தன... Read More
இம்முறை முள்ளி வாய்க்கால் – அரசியல் பிழைத்தோர் ஆதரவை இழந்தனர். கட்டுரைகள் நடேசன் 

இம்முறை முள்ளி வாய்க்கால் – அரசியல் பிழைத்தோர் ஆதரவை இழந்தனர்.

சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழ் பேசும் மக்கள் மீது நடாத்திய கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் உச்சம் நடைபெற்று எட்டு  ஆண்டுகள் கடந்து விட்டன. முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய அரசபயங்கரவாதத்தை இனப்படுகொலைக்கான நாளாக உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்கள்அடையாளப் படுத்து கின்றனர். 2010 ஆம் ஆண்டில்  மே 18 திகதி லண்டனில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் இத்தினத்தை இனப்படுகொலை நாளாக அடையப்படுத்தினர். எட்டு ஆண்டுகள் கழித்து 2017 இல் அதே லண்டனில் நடைபெற்ற இனப்படுகொலை நினைவேந்தல்  நாளில் பிரித்தானிய தமிழர் பேரவையால் அவர்கள்உறுப்பினர்கள் அடங்கலாக 200 இற்கும்... Read More
சைபர் தாக்குதல்களும் ஜெரமிக் கோர்பினின் தேவையும் கஜன் கட்டுரைகள் 

சைபர் தாக்குதல்களும் ஜெரமிக் கோர்பினின் தேவையும்

கடந்த வாரம் ரன்சம்வேர் வைரஸ் மூலம் உலகளாவிய ரீதியில் நிகழ்த்தப்பட்ட சைபர் இணையத் தாக்குதலில், பிரித்தானியா, பிரான்சு, ஜேர்மன், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, உட்பட உலகின் 150 மேற்பட்ட நாடுகளில் 200,000 க்கு மேற்பட்ட கணனிகள் மற்றும் கணணித் தொடர்புள்ள உபகரணங்கள் பாதிப்புக்குள்ளாகின.இதனால் பல நாடுகளின் தொலைத்தொடர்புத் துறை, வைத்தியத்துறை, வங்கித் துறை, ரயில்வே துறை, காவல்துறை, உட்பட பல்வேறு துறைகள் முற்றாகவோ அல்லது பகுதியாகவோ செயலிழந்துபோயின. மைக்ரோசொப்ட் விண்டோஸ் (windows xp) இணை தாக்கும் திறன் கொண்ட ரன்சம்வேர் (Ransomware ) வைரஸ்... Read More
யார் இந்த ஜெரமி கோர்பின் கட்டுரைகள் நடேசன் 

யார் இந்த ஜெரமி கோர்பின்

2001 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அல்கொய்தா உட்பட 21 அமைப்புகளை தீவிரவாத பட்டியலில் சேர்த்து – UK இல் அந்த அம்மைப்புகளை தடை செய்வதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. அப்போது ஆளும் கட்சியாக இருந்த தொழிற் கட்சியால் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானத்தை 17 பேர் எதிர்த்து வாக்களித்தனர். அதில் பின்வரிசைப் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த ஜெரமி கோர்பினும் , ஜோன் மக்டொனல்டும் எதிர்த்து வாக்களித்தவர்கள் ஆவர். இதனால் தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக செயற்பட்டார் என்று இவர்கள் இருவருக்கும் எதிராகக் குற்றம் சாட்டப் பட்டு... Read More
பிரித்தானியத் தேர்தல் – அரசியல் வங்கிரோத்தும் மக்கள் கோரிக்கையும். கட்டுரைகள் சேனன் 

பிரித்தானியத் தேர்தல் – அரசியல் வங்கிரோத்தும் மக்கள் கோரிக்கையும்.

1 உடனடித் தேர்தல் நடத்த முதற் காரணம் பொருளாதார பின்னணியே பிரித்தானியா மிகப் பெரும் பொருளாதார நெருக்கடியைச் நோக்கி நிற்கிறது. மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. மக்கள் சேவையில் முதலீடு அதிகரிக்க வேண்டும் என்ற அபிலாசை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் வாக்களிப்புக்கு உந்துதலாக இருந்தது (பிரக்சிட்). மறு பக்கம் ஸ்கொட்லாந்தில் பிரிந்து போவதற்கான உணர்வு மிக அதிகரித்துள்ளது. வட அயர்லாந்து அமைதி உடன்படிக்கை ஆடிப்போய் நிற்கிறது. சூரியன் அஸ்தமிக்காத பேரரசு என ஒரு காலத்தில் வர்ணிக்கப் பட்டப் பிரித்தானியப் பேரரசு... Read More
பிரித்தானிய தேர்தல் அறிவிப்பின் பின்னணி என்ன? கஜன் கட்டுரைகள் 

பிரித்தானிய தேர்தல் அறிவிப்பின் பின்னணி என்ன?

ஜூன் மாதம் 8ஆம் திகதி பாராளுமன்ற தேர்தலை அறிவித்துள்ளார் தற்போதைய பிரதமர் தெரசா மே. இன்னமும் மூன்று ஆண்டுகள் ஆட்சிக் காலம் இருந்தும் அவசரமாக உடனடித் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு பாராளுமன்றத்தில் தங்களுக்கு அறுதிப் பெரும்பான்மை வேண்டும் எனவும் , நாட்டில் ஒரு ஸ்திரமற்ற நிலைமை காணப்டுகிறது என்பதாலும் இந்த தேர்தலுக்கு அவசியம் ஏற்பட்டது என்கிறார் தெரேசா மே. மேலும் எதிர்க்கட்சிகள் தமது பிறெக்சிட்டுக்கான முன்னெடுப்புகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன என்பதாலும் , வெஸ்ட்மின்ஸ்டர் பிரிந்து காணப்படுவதாலும் தமது பலத்தை... Read More
லண்டனில் மே தின ஊர்வலமும் தமிழ் அமைப்புக்களும் செய்திகள் செயற்பாடுகள் 

லண்டனில் மே தின ஊர்வலமும் தமிழ் அமைப்புக்களும்

பல்வேறு தொழிற் சங்கங்கள் மற்றும் இடது சாரிய அமைப்புக்களுடன் அகதிகள் உரிமை அமைப்பு மற்றும் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு, பறை விடுதலைக்கான குரல் ஆகிய அமைப்புக்களும் லண்டன் மே தின ஊர்வலத்தில் கலந்து கொண்டன. தொழிலாளர் தினம் உலகெங்கும் ஒடுக்கப்படும் உளைக்கும் மக்களால் கொண்டாடப்படும் தினம். வலது சாரிய அரசுகள் இந்த தொழிலாளர் தினத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதனால் மே தினத்தன்று கூடும் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருவதைப் பார்க்கலாம். இந்த நிலையை லண்டனில் நடந்த... Read More
ஐ. நா மூலம் தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வு சாத்தியமா? கஜன் கட்டுரைகள் 

ஐ. நா மூலம் தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வு சாத்தியமா?

அன்று தமது விடுதலைக்காக போராடிய ஒரு சமூகத்தை, இன்று அவர்களின் விடுதலை என்பது எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஐ.நா வின் மூலம்தான் கிடைக்கும் என நம்ப வைத்த பெருமை புலம் பெயர் அமைப்புகள், தூர நோக்கற்ற தமிழ் தலைமைகள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையே சாரும். குறிப்பிட்ட ஒரு இன மக்களின் விடுதலைக்கு அவ்வின மக்களை ஒன்றிணைக்காமல், பல வல்லாதிக்க அரசுகள் சேர்ந்து இயங்கும் ஒரு அமைப்பு (ஐ.நா) விடுதலை வாங்கித் தரும் என எதிர்பார்ப்பது தவறு. ஐ.நாவின் அரசியல் கொள்கை என்பது... Read More
ஐ.நாவின் பெயரால் மக்களை ஏமாற்றும் தமிழ் தலைமைகளும், புலம் பெயர் அமைப்புகளும் கஜன் கட்டுரைகள் 

ஐ.நாவின் பெயரால் மக்களை ஏமாற்றும் தமிழ் தலைமைகளும், புலம் பெயர் அமைப்புகளும்

இனம் மதம் மொழி என்பனவற்றின் பெயரால் பிளவுபட்டிருக்கும் மக்களை ஒன்றிணைத்த போராட்டம் பற்றி தமிழ் தலைமைகளுக்கு எந்த கருத்து நிலைப்படும் இல்லை. மக்களை ஒன்றினைப்பதின் ஊடாக நிரந்தர தீர்வு நோக்கி நகர்வது சாத்தியம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது சில புலம்பெயர் அமைப்புகளோ ஐ.நா வையோ அல்லது அரசாங்கத்தையோ வால்பிடிக்க எண்ணுகிறார்களே தவிர அனைத்து இன மக்களிடமும் அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி தமிழர் தரப்பின் தேவையை அல்லது நியாயத்தை எடுத்துச் சொல்ல முயலவில்லை. லொபி என்ற பெயரில் மக்களின் பணத்தை வாரி இறைக்கின்றது... Read More