புதிய ஒப்பந்தத்தை வழங்கக் கோரி பிரித்தானிய மக்களின் போராட்டம்

623 . Views .

பிரித்தானியாவின் உழைக்கும் மக்கள் கலந்துகொண்ட மாபெரும் பேரணி ஒன்று நேற்று இடம்பெற்றது. TUC அமைப்பினர் ஒழுங்கு செய்திருந்த இப்ப்போரட்டத்தில் UNISAN (யு னிசன்), UNITE(யுனைட்), சோசலிசக்கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டன. தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினரும் இப்பேரணியில் கலந்து கொண்டு  தமது ஆதரவை வழங்கியிருந்தனர். பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் 5.5 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை கொண்ட TUC அமைப்பானது தொழிலாளர்களுக்கு “புதிய தொழில் ஒப்பந்தத்தை வழங்க வேண்டும்”  என்ற பிரதான கோரிக்கையை முன்வைத்து  நேற்றைய போராட்டத்தை ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அடிப்படைச் சம்பளம் பத்துப் பவுணாக உயர்த்தப்பட வேண்டும், பூச்சிய மணி நேர ஒப்பந்தம் தடை செய்யப்படவேண்டும், தேசிய வைத்தியசாலை மற்றும் சேவைகள் தனியார் மயப்படுத்தப்படுதல் நிறுத்தப்படவேண்டும், பாடசாலைகள், வைத்தியசாலைகளுக்கு அதிக நிதி முதலீடு செய்யப்படவேண்டும் எனப்  பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவ் ஆர்ப்பாட்டமானது இடம்பெற்றது.

பிரித்தானிய மக்களின் ஆதரவை வென்றெடுக்க இது போன்ற போராட்டங்களுக்கு தமிழ் மக்களை தம்மை இணைத்துக் கொள்வது அவசியமாகும். பெரும்பாலான மக்களின் நலனைக் கருத்திற் கொள்ளாமல் குறிப்பிட்ட சிலரின் நலனுக்காக நடைமுறைப்படுத்தப்படும் பிரித்தானியாவின் பொருளாதரக் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்த இது போன்ற  போராட்டங்களில் மக்கள் அவசியம் பங்கெடுத்து தமது ஆதரவை வழங்க வேண்டும்.