Articles Comments

முதண்மைப் பதிவுகள்

இந்திய அணுசக்தி துறையின் சாராம்சம் : உங்கள் அழிவில் எங்கள் முன்னேற்றம்

இந்தக் கட்டுரை மே 17 இயக்கத்தை சார்ந்தவரும் New Socialist Alternative (CWI-India) இன்  நெருங்கிய நண்பருமான பா.அருண் காளி ராசாவால் எழுதப்பட்டது. கூடங்குளம் அணு உலை சம்மந்தமான சர்ச்சையை பற்றிய பல உண்மைகளை வெளிச்சர்த்திர்க்கு கொண்டு வரும் கட்டுரை. கூடன்குள அணு உலை திட்டத்தை செயல் படுத்த துடிக்கும் ஆளும் வர்க்கம் நாட்டின் வளர்ச்சி, அணு உலை பாதுகாப்பு என்று பல பொய்களை மக்கள் நடுவில் பரப்பி வருகிறது. இவர்கள் யாருமே இது வரை அணு உலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பற்றி  சிறிதும் கூட பேசுவதில்லை. பன்நாட்டு நிறுவங்களின் லாபத்திற்காகவே அணு உலை திட்டங்களை செயல் படுத்த இந்திய ஆளும் வர்க்கம் முயல்கிறது. இந்த கட்டுரை சுட்டிக் காட்டுவதை போல பொதுஉடைமை சமூகத்தில் மட்டுமே சனநாயக ரீதியில் மனித சமூகம் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல்  முன்னேற இயலும். socialism.in இந்திய அணுசக்தி துறையின் சாராம்சம் : உங்கள் அழிவில் எங்கள் முன்னேற்றம் சூன் 2011 , புகுஷிமா அணு உலை விபத்தால் ஏற்பட்ட அணுக கதிர்வீச்சைக் கட்டுப் படுத்த ஜப்பான் திணறிக் கொண்டிருந்த காலம். ஜெர்மனியில் உள்ள போன் நகரில் உலக பருவநிலை மாநாடு நடை பெற்றது. அதில் பங்கேற்ற இந்தியா, சூன் 14 அன்று அணு … மிகுதியைப் படிக்க »

பதிவுகள்

வெல்லத்துடிக்கும் ஒரு போலி

-சித்தார்த்- காதுக்குள் காய்ச்சிய ஈயமாயும் உடலெங்கும் சீழ்பிடித்த ரணங்களாயும் நாம் எம்மீது கொட்டிக்கொண்ட வார்த்தைகள் புழுக்களாய் நெளிகின்றன நாவினால் சுட்ட வடுக்களுடன். போலியான புன்னகையுடன்                                                                                   எமது  புகைப்படங்கள். ஒருவரை ஒருவர் சுட்டெரிக்கும் கண்களும் நீயா? நானா? என்ற திமிருடனும் குழந்தைகளின் வாழ்வைத் தின்று ஏப்பமிடும் எம் வாழ்க்கை. இன்றைய குழந்தைகள் முட்டாள்கள் அல்ல எம்மைப் போல் எம்மையும் குடும்பமாய் ஏற்க. மனிதர்களாய் நட்பு பேணி பிரிதலின் அவசியம் உணர்ந்து பிரிந்து யதார்த்தம் ஏற்று சுயபரிதாபம் தவிர்த்து பிரிவிலும் சுயமாய் வாழலாம் மனிதராய். வா! நட்பாயிருப்போம் குழந்தைகளுக்காக. நம்மில் எவரும் முழுமையற்றவர் என்பதையுணர்ந்து பிரிவிலும் சேர்ந்து வெல்வோம். இல்லையேல்…                                                                                          தோற்றவராவோம். எனக்கதில் சம்மதமில்லை. … மிகுதியைப் படிக்க »

1995 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முப்பதாம் திகதி

அந்த நாட்களை எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. என் பாட்டியின் வீட்டிற்கு எப்போதாவது பின்னேரங்களில் சென்று வருவேன்.அப்படித்தான் அந்த 1995 ஐப்பசி மாதம் 30 ஆம் திகதியும்  கொழும்புத்துறையில் இருக்கும் பாட்டியைச் சந்தித்து வரச் சென்றேன்.ஆமி முன்னேறி வருவதாகச் சொல்லப்பட்டது.அப்போதெல்லாம் அந்தப் பக்கம் விமானம் குண்டு போட்டுவிட்டுப் போனால் இந்தப் பக்கத்து ஒழுங்கையால் ஓடிப் போய் என்ன நடந்தது என்று பார்க்குமளவு யுத்தமும் சத்தமும் எனக்குப் பழகிப் போயிருந்தன. மேலே எது வட்டமிட்டுக் கொண்டிருந்தாலும் அது பற்றிக் கவலையின்றிக் கீழே றோட்டில் சைக்கிளில் நானும் சுற்றிக் கொண்டிருப்பேன். ஆனால் இப்போது அந்த நிச்சயமற்ற நாட்களில் வாழ்ந்ததை நினைத்துப் பார்க்க பயமாக இருக்கிறது.வேறு வழியில்லை வருவது வரட்டும் என்ற துணிச்சலில்லை.என் போன்ற சனங்களுக்கு அதை எதிர் கொண்டு வாழ்வது தவிர வேறு வழியிருக்கவில்லை. சில … மிகுதியைப் படிக்க »

மண்ணாகி…

நிலந் தொடாமல் மிதந்தேன் உலர்ந்த மணற் துகளால் உருவானவளாக மெதுமெதுவாக உடல் பாரமிழக்கிறது நான் லேசாகி உதிர்கிறேன் அலைகள் என்னை மோதுகின்றன யார் அவற்றை எனை நோக்கி வரச் செய்தது? திரும்பத் திரும்ப வெண்நுரைகளைத் என் தேகத்தில் பூசின எவர் அவற்றை என்னிடம் துரத்தியது? யார் கரையில் என்னை வீசியது?                                                                         எவரது கைகளவை? காணாமல் போகிறேன் நீரோடு கலக்கிறேன் கண்கள் உற்றுப் பார்க்க முடியாத ஆழத்தில் உறைந்து கிடக்கிறேன் ஈரமண்ணாக. -தர்மினி- … மிகுதியைப் படிக்க »

காற்றும் மழையும்

-சித்தார்த்- காற்று தனியே நடந்து கொண்டிருந்தது இணைந்து கொண்டது ஒரு பெரு மழை இடியும் மின்னலும் வெடித்து மின்ன நின்றுபோகிறது மழை அமைதியற்றுப் போனது காற்றின் உலகு காற்றும் மழையும் கூடின இருந்தும் மழைக்குச் சலனம் துமித்துவிட்டுப் போகிறது இடிக்கும் மின்னலுக்குமாய் வானத்தைப் பார்த்திருக்கிறது மழை அவை ஓய்ந்ததும் பெய்ய காற்று வீசிக்கொண்‌டேயிருக்கிறது பிரசவ வலியில் கார்மேகம் இடி இடிக்கலாம் மின்னல் வெட்டலாம் இடியும் மின்னலும் ஓய்ந்து போகலாம் வேலியற்ற காற்று எப்போதும்  வீசும் அது மழை மீண்டும் வரலாம் என காத்திருக்கிறது காற்று வீசிக்கொண்டேயிருக்கப்போகிறது மழை பெய்து தான் ஆகவேண்டும் நான் காற்று மழை நீ  ! … மிகுதியைப் படிக்க »

பெற்றோல் (இப்போதைய “தலையங்கம்”)

-சேனன்- இரண்டாவது குட்டிக்கதை 6)அவவின் பெயர் ‘ச’. 1986ல் திருமணம் செய்த அவவுக்கு ‘சு’ என்ற நான்கு பிள்ளைகள் உண்டு. அவரின் சத்தியக்கூற்று வருமாறு. 1) அவரது சகோதரியை அவர் கணவர் கல்யாணம் செய்துகொண்ட அதே ஆண்டு – 1995 ஆடி மாசம் யாழ்ப்பாண புனித பேதுருவானவர் தேவாலயத்தின்மீது இலங்கை விமானப்படையின் ‘கிபிர்’ விமானங்கள் குண்டு வீசித் தாக்கின. 2) 50க்கும் மேற்பட்டவர்கள் அடையாளமின்றி சிதறிப்போயினர். 3) எந்த உடற்பாகத்தை வைத்து யார் யாருக்கு செத்தவீடு செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்க முடியுமோ? ச வின் கணவரின் கடையில் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட டயர்களைத் திருடி ஒட்டுமொத்தமாக எல்லா உடற்பாகங்களையும் போட்டு எரித்தார்கள். 4) கடை நட்டத்தில் விழுந்தது. அதன் பிறகு அவர் மல்லாவிக்குப் போய்ச் சேர்ந்த பாதையை கீழே காண்க. 1995-10 யாழ்ப்பாண்த்தில் இராணுவ நடவடிக்கையின் பின் மானிப்பாய் … மிகுதியைப் படிக்க »

வசூலிப்பு

- தர்மினி- வெய்யிலைக் கண்டால் தான் வெளியிலே சென்று இதமான காற்றைச் சுவாசிக்க முடிகிறது. கடந்த இரு மாதங்களாகக் குளிருக்குப் பயமில்லாமல் வீட்டை விட்டு எங்காவது போய்வர விருப்பமாயிருந்தது. பாரீஸில் அப்படியும் அடிக்கடி மழை பெய்து கொண்டிருக்கிறது .இது கூட மனசுக்கு இதமான காலநிலையாகவே இருக்கிறது.இப்படியாக வானத்தை அண்ணார்ந்து பார்த்துப் பார்த்து இந்தக் கோடைகால விடுமுறையில் பூங்காக்களைத் தேடிச் சென்று சுத்தமான காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தேன்.எமது சுற்றாடலில் வசிப்பவர்களும் அங்கு வருவார்கள்.அப்போது தான் அயலவர்கள் ஒன்றாக அமர்ந்திருந்து கதைக்க நேரம் கிடைத்தது போலிருக்கும். அங்கிருந்து உரையாடிக் கொண்டிருந்த பெண்ணொருவர் தன் மகளுக்குக் கட்டாயம் பருவமடைந்ததற்கான சடங்கைச் செய்ய வேண்டும் என்றார்.அந்தச் சிறுமிக்கு பதினொரு வயது.அது நடந்து ஆறு … மிகுதியைப் படிக்க »

மரணதண்டனை என்பது திட்டமிட்ட படுகொலை!

-தர்மினி - 1991 மே மாதம் நடைபெற்ற இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையுடன் தொடர்புடையவர்கள் எனக்  கூறப்படும்  பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்படக் கூடாதென்று( 30.08.11) நேற்று மாலை 4மணியிலிருந்து 7 மணிவரை லண்டனில் இந்தியத் தூதரகத்தின் முன்னால் தமிழ் ஒருங்கமைப்பு கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடாத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 700 க்கும் மேற்பட்ட  தமிழர்களும்  பிறஇனத்தவர்களும் உணர்வு பூர்வமாகக் கலந்து கொண்டனர்.மக்கள் கைகளிலே முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது உருவப்படங்களையும்  மரணதண்டனையை எதிர்க்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் தாங்கியவாறு -“இந்திய அரசே நீதியற்ற தீர்ப்பை மாற்று” -”தூக்குத் தண்டனையை ரத்துச் செய்” -என்று கோரிக்கைகளை முழங்கினர். தூக்குத் தண்டனை தீர்க்கப்பட்ட சாந்தனின் சகோதரி இந்தியத் தூதுவரிடம் … மிகுதியைப் படிக்க »

லண்டனில் மரணதண்டனைக்கு எதிரான போராட்டம்

30.08.2011 மாலையில் இந்தியத் தூதரகம் முன்னால் மரணதண்டனைக்கெதிராக நடாத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம். http://www.facebook.com/stop.death.penalty … மிகுதியைப் படிக்க »

வாழ்வின் கைதிகள்

-சித்தார்த் - நான், ஒரு மாஜிக்கணவன் மற்றும் தந்தை நீ இன்னும் ஒரு ஒப்பந்தக்கைதி தாய் சமுதாயத்தின் முன் தவறாயும் நம் முன் நியாயமாயும் நம் உறவு தவிப்பின் சுக ரணங்கள் எம் நரகவாழ்வைச் செப்பனிடுகின்றன மனது மட்டும் தேடிஓடும் மானுடங்களாய் நாம் இருப்பினும் தசாப்பதங்களாய் உண்டு செரித்த கலாச்சாரசிறையுள் சிக்குண்ட கைதிகளாய் காதலா? கலாச்சாரமா? மனசாட்சியா? இனி எது நியாயம் எது பாவம்? … மிகுதியைப் படிக்க »