தேசிய கல்வி சங்கம், சிவில் சர்வீஸ் யூனியன் பிசிஎஸ், UCUவில் உள்ள விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் BMA இல் உள்ள இளநிலை மருத்துவர்கள் மார்ச் 15 இல் பிரித்தானிய பட்ஜெட் தாக்கல் செய்யும் தினத்தில் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த கூட்டு நடவடிக்கையானது, சமீபத்தில் நடைபெற்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் மேற்கொண்ட தொடர் வேலைநிறுத்த நடவடிக்கைகளில் இருந்து ஒரு படி முன்னோக்கியதாக இருக்கின்றது. அடிப்படை வாழ்வாதாரத்துக்கான செலவுகள் மற்றும் வீடு வாடகை மற்றும் எரிபொருள் மின்சாரம் சமையல் வாயு விலை என்பன ராக்கட் வேகத்தில் அதிகரித்துள்ளதால் பலரின் வாழ்க்கைத் தரம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஊதியங்கள் பணவீக்கத்தின் பாதி விகிதத்தில் மட்டுமே அதிகரித்து வருகின்றன, அதே நேரம் வேலை தளங்களில் தற்காலிக ஒப்பந்த பணியாளர்களை பூச்சிய நேர ஒப்பந்தந்தத்தில் பணியமத்துகின்றார்கள். 1.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வேலையில்லாமல் உள்ளனர், மேலும் ஜெனரேஷன் ரென்ட்டின் ஆராய்ச்சி படி கொரோனா பெருந்தொற்று காலத்தில் தனியார் துறையில் இந்த நிலை 4% முதல் 13% வரை அதாவது மூன்று மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கின்றது.
பொதுச் சேவைகளுக்கான அரசின் நிதி குறைப்பு , அதிகரித்து வரும் ஏழை பணக்கார இடைவெளி, மற்றும் பெரும்பாலான உழைக்கும் மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கைத் தரம் குறைவது ஆகியவை பிரிட்டனில் மேலும் மக்களின் கோபத்திற்கு வழிவகுக்கும்.
நெருக்கடியைத் தீர்ப்பதற்கான அனைத்து கருவிகளும் கவுன்சில்களிடம் உள்ளன. மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்த அவர்கள் இருக்கும் வளங்களைப் பயன்படுத்தலாம்.அவ்வாறு செய்வதற்கு மாறாக, சபைகள் கடந்த தசாப்தத்தில் டோரிகளின் (ஆளும் பழமைவாத கட்சி) மக்கள் சேவைகள் மீதான நிதிக்குறைப்பையே தனது கடமையாக நிறைவேற்றி வருகின்றன. இதன் விளைவாக, உழைக்கும் வர்க்க மக்களின் வாழ்க்கைத் தரம் சுருங்குவது குறித்து மக்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தினரிடையே பொதுவான கோபம் உருவாகி வருகிறது.
டோரி திட்டங்கள் எரிசக்தி நிறுவனங்களின் லாபத்தை அதிகரிக்கின்றன. கடந்த 12 மாதங்களில் ஷெல் மட்டும் 31 பில்லியன் பவுண்டுகளை ஈட்டியுள்ளது, அதே நேரத்தில் வடக்கு பவர்கிரிட் (Northan Power Grid) போன்ற மின்சார விநியோகஸ்தர்கள் கடந்த ஆண்டில் மொத்தமாக £15.8 பில்லியன் லாபம் ஈட்டியுள்ளனர். டோரிகளின் புதிய எரிசக்தி மசோதா திட்டங்களின் கீழ், லாபம் பண முதலைகளிடம் போக உழைக்கும் மக்களோ அந்த கடன் சுமையை சுமக்கிறார்கள்.
அரசாங்கம் தொழிலாளர்களிடம் நிதி குறைப்பது மற்றும் ஊதிய ஏற்ற முடக்கங்களுக்கு மாற்று இல்லை என்றும் நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை சாதாரண மக்கள் சுமக்க வேண்டும் என்றும் கூறுகிறது. அதே நேரத்தில், சூப்பர் லாபம் பாதுகாக்கப்படுவதையும், பணக்காரர்கள் பணக்காரர்களாக இருப்பதையும் அரசாங்கம் உறுதி செய்கிறது.
தற்ப்போது முதலாளித்துவம் மிகுந்த நெருக்கடியில் இருப்பதால், தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தின் மீது இடைவிடாத தாக்குதலை எதிர்பார்க்கலாம். ஒருங்கிணைக்கப்பட்ட வேலைநிறுத்த நடவடிக்கையை உள்ளடக்கிய தொழிலாள வர்க்க மக்களின் உறுதியான போராட்டம் மட்டுமே இந்த லாப வெறி பிடித்த முதலாளிகளின் தாக்குதலை மாற்றியமைக்க முடியும்.
கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் உள்நாட்டிலும், தேசிய அளவிலும் தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தேசிய தொழிற்சங்கங்கள் தலைமையில் தொழிலாளர்களை அணிதிரட்ட முடியும் என்பதைக் காட்டும் பாரிய வேலைநிறுத்த நடவடிக்கை பிப்ரவரி 1 அன்று நடத்தப்பட்டது.
தேசிய கல்வி சங்கத்தின் (NEU) உறுப்பினர்கள் இரயில் தொழிற்சங்கங்கள் மற்றும் அஞ்சல் ஊழியர்கள் செய்ததைப் போல மறியல் போராட்டங்களை நடத்தினர், இதில் ஊதிய உயர்வு கோரி தீவிர மறியல் போராட்டங்களும் இருந்தன. பெரும்பாலான உள்ளூர் பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட மறியல் போராட்டங்கள் நடந்தன. இதுவரைதேசிய கல்வி சங்கம் (NEU) இப்படி ஒரு போராட்ட நிலைப்பாட்டை இதற்கு முன் எடுக்கவில்லை , இந்த உறுதியான போராட்டட நிலைப்பாடு உறுப்பினர்களின் மனநிலையை காட்டுகிறது, போராடினால் ஜெயிக்கலாம்!
அமேசான் தொழிலாளர்கள் வேலைநிறுத்த நடவடிக்கையை மேற்கொண்டனர், முதல் முறையாக ஆன்லைன் சில்லறை விற்பனையாளர் இங்கிலாந்தில் அதிகாரப்பூர்வ வேலைநிறுத்த நடவடிக்கையைக் எதிர்கொண்டார்கள். Bristol, Tilbury, Dartford, Belvedere மற்றும் Rugeley உள்ளிட்ட டிப்போக்களில் உள்ள தொழிலாளர்கள், அமேசான் கேன்டீன்களில் உள்ளிருப்புப் போராட்டங்களில் பங்குபெற்றனர், இது வரை சராசரி தொழிலாளிக்கு வாரத்திற்கு £10 மட்டுமே வழங்கப்படும். இப்போது, GMBயால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் கோவென்ட்ரியில் உள்ள தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர், வாக்கெடுப்பில் வாக்களித்தவர்களில் 98% பேர் ஒரு மணி நேரத்திற்கு £15 வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கு தகவல் தொடர்பு ஊழியர் சங்கம் (CWU) ஆதரவு தெரிவித்துள்ளது. பார்சல்ஃபோர்ஸ் மற்றும் ராயல் மெயிலில் ஊதியம் மற்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பாதுகாக்கவும், பொது மக்களுக்கான சேவைகளைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் அவர்கள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள். ராயல் மெயிலின் வணிக மாதிரியானது, தற்போதைய பணியாளர்களின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைத் தாக்கி, அதை ஒரு கூரியர் சேவையாக மாற்றுவதற்கான சாதாரணமயமாக்கலுக்கானதாகும். அஞ்சல் சேவையை மீண்டும் பொது உடைமையாக்குவதற்கான கோரிக்கையை CWU ஆதரிக்கிறது.
மார்ச் 15 ஆம் தேதி, 600,000 அரசு ஊழியர்களுடன் ஒரு பலமான வேலைநிறுத்தம் நடைபெற இருக்கின்றது . தொழிற்சங்க காங்கிரஸ் (TUC) இந்த நடவடிக்கையை ஒருங்கிணைத்து, பொது மற்றும் தனியார் துறைகளில் இருந்து முடிந்தவரை பல தொழிற்சங்கங்களை இணைத்து அன்றைய அர்ப்படடத்தை மேலும் பலப்படுத்த முடியும். கூடுதலாக, பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஒன்றியம் தேசிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் இணைகின்றது , சுகாதாரம் மற்றும் இரயில் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கான ஒப்புதலை அதனை உறுப்பினர்கள் வழங்கி இருக்கின்றார்கள். மேலும் CWU இல் உள்ள Royal Mail தொழிலாளர்கள் தங்கள் உறுப்பினர்களின் ஒப்புதலுக்காக மறு வாக்குப்பதிவு முடிவுகளை விரைவில் அறிவிப்பார்கள். இது முக்கால் மில்லியன் தொழிலாளர்களை தெருக்களில் கொண்டு வந்து, சிறந்த ஊதியம் மற்றும் நிலைமைகளுக்காக ஒன்றிணைந்த போராடடத்தை ஆரம்பித்து வைத்திருக்கின்றது.
பல இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களும் இந்த வேலைநிறுத்த நடவடிக்கைகளுடன் இணைந்து கொண்டுள்ளனர், இதில் Royal Mail, சுகாதாரத் துறை மற்றும் கல்வித் துறைகளில் பணிபுரிபவர்கள், கடினமான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். தமிழ் சொலிடாரிட்டி இந்த நடவடிக்கைகளை முழுமையாக ஆதரிக்கிறது, மேலும் TS உறுப்பினர்கள் இப்போது நடைபெறும் பெரும்பாலான வேலைநிறுத்தப் பேரணிகள் மற்றும் வெகுஜன நடவடிக்கைகளில் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் செயல் திட்டத்தை கூட்டாக விவாதிக்க முன்வருவதும் முக்கியம். கடுமையான நிலைமைகள் எந்த நேரத்திலும் தானாக மாறப்போவதில்லை, எனவே எங்கள் நிலைமைகளைப் பாதுகாக்கவும் எங்கள் உரிமைகள் மற்றும் ஊதியங்களை வென்றெடுக்கவும் ஒரு தீர்க்கமான செயல் திட்டம் தேவை.
நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களையும் info@tamilsolidarity.org இல் தொடர்பு கொள்ளுமாறு TS வேண்டுகோள் விடுக்கிறது.
பல தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில் சேரவில்லை, குறிப்பாக தனியார் துறையில், அவர்களும் போராட்டத்தில் சேர வேண்டும். தொழிற்சங்கத்தில் சேர்வது பற்றியோ அல்லது வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடைபெறுவது பற்றியோ கூடுதல் தகவல்களைப் பெற விரும்பினால், TSஐத் தொடர்புகொள்ளவும்.