மார்க்சியம் மற்றும் லெனினிசத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் மார்க்சிய – லெனினிசக் கட்சி. 

1,006 . Views .

முள்ளிவாய்க்கால் பேரழிவு முடிந்த பின்னர் தமிழர் அரிசியலில் மீண்டும் களமாட வந்தார்கள் இலங்கையின் தமிழ் மாவோயிஸ்ட்டுகள். இந்த வருடம் 2021 ஆண்டு முள்ளிவாய்க்கால் தினத்தில் ‘கொள்கையாலும் நடைமுறையாலும் போராட்ட வழிமுறைகளாலும் வெற்றி பெறக்கூடிய திசை நோக்கி பயணிப்பதற்கு கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் நினைவு நாளில் உறுதி ஏற்போம்’ என்று அறிக்கை விடுத்தது உள்ளார்கள். https://m.facebook.com/story.php?story_fbid=1110773049445923&id=164132304110007

மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு விடுதலைப் புலிகள்தான் முக்கிய காரணம் என்ற தொனிப்பட  எழுதிவட்டுகோட்டையில் இருந்து முல்லைதீவுஎன்று புத்தகம் வெளியிட்ட தலைமை, ‘வெற்றி பெற கூடிய வழியில்’(??) மார்க்சிய புரட்சி போராட்டம் கட்டுவோம் என்கிறர்கள். அது என்ன வழி என எமக்கு இன்னும் தெரியவில்லை. முள்ளிவாய்க்கால் தினத்தில் திரளும் மக்கள் கூட்டத்தையும் அது ஏற்படுத்தும் அதிர்வலைகளையும் பயன்படுத்தி அரசியல் செய்ய பலர் முண்டி அடிக்கிறார்கள். இதனை சந்தர்ப்பவாதம் என்று தான் சொல்ல வேண்டும்இந்த சந்தர்ப்பவாத நிலையில் மக்களை திரட்டுவதை தான்வெற்றி பெற கூடிய வழியில்என்று பூடகமாக சொல்கிறார்கள் போலும். ஏனெனில் இதற்கு முன் இந்த நாளை இவர்கள் புறக்கணித்து வந்தார்கள்- நினைவு கூர்வோரை ‘புலிப் பாசிச ஆதரவாளர்’ எனவும் சிலர் வசையாடியதுண்டு.

‘தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர்’ என இன்று – பத்து ஆண்டுகள் கழித்து ஏற்றுக் கொள்ளும் நீங்கள் பத்து ஆண்டுகளுக்கு முன் என்ன செயதீர்கள் – என்ன சொன்னீர்கள்? இந்த கொலைகளுக்கு காரணம் புலிகள்தான் என்ற உங்கள் நிலைப்பாட்டில் தான் இப்போதும் உள்ளீர்களா அல்லது சுய விமர்சனம் நடந்து முடிந்து விட்டதா? 

 

இடதுசாரியம் என்ற பெயரில் மார்க்சியத்தை குழி தோண்டி புதைக்கும் வேலைகளையே இவர்கள் செய்கிறர்கள். இவர்களின் நிலைப்பாடுகளாலும்தான்  போராடும் மக்கள் இடதுசாரி அரசியலில் இருந்து அந்நியப்பட்டு நிற்கிறர்கள். மார்க்சியம் லெனினியம் என்ற பெயர் பலகையை மட்டும் தாங்குவதால் அவர்கள் மார்க்சியர்கள் ஆகி விடமுடியாது.

 

மாரக்சியத்தின் அடிப்படையை மறுத்துக் கொண்டு வார்த்தை ஜாலங்களால் மக்களை ஏமாற்றுவதை அனுமதிக்க முடியாது. 

இவர்கள் வெளியிட்ட புத்தகத்தின் உள்ள அரசியல் முரண்கள் பற்றியும், வரலாற்றுப் புரிதலின்மை பற்றியுமான விமர்சனத்தை முன்பு முன்வைத்தோம். http://ethir.org/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/ .  வழமைபோல் கட்சி உறுப்பினர்களும்  ஆதரவாளர்களும்  அவதூறு எழுதினார்களே தவிர பதில் இன்று வரை இல்லை. 

அத்தோடு சேர்த்து இன்னும் சில கேள்விகளையும் முன்வைக்கிறோம். 

 

  • லெனின் பெயரைத் தாங்கி அரசியல் செய்யுய் நீங்கள் ‘ஐக்கிய பட்ட இலங்கைகுள் சுயநிர்ணய உரிமை’  என்று சொல்லவதன் பொருள் என்ன? 
  • தேசிய இனங்களுக்கான சுயநிர்ணய உரிமையை நீங்கள் மறுத்து கொண்டு எவ்வாறு உங்களை லெனினிய கட்சி என்று அடையாளப் படுத்துகின்றீர்கள்? லெனினை தற்காலத்துக்கு ஏற்ப உபயோகிப்பது போன்ற பேச்சு கட்சி தலைமையால் பேசப்பட்டது (ஜேவிபி போல்). அது எவ்வாறு என விளக்க முடியுமா? ‘நடைமுறைக்கு உகந்த’ தீர்வு என்று நீங்கள் எதை சொல்கிறீர்கள்? நடைமுறைக்கு சரிப்படாத விசயங்களை முன்வைகாதீர்கள் என கேட்கிறீர்களா?

 

  • ‘ஐக்கிய  இலங்கைக்குள் சிறுபான்மையினரின் சுயநிர்ணய உரிமையை வென்றேடுப்போம்’ என்கிறீர்கள். இலங்கை அரசு என்பது பௌத்த சிங்கள பேரினவாத அரசு என்பதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என நினைக்கிறோம். அது உடைக்கபடாமல் எவ்வாறு எண்ணிக்கையில் சிறுபான்மையினரின் சுயநிர்ணய உரிமையை வென்றேடுக்கப் போகிறீர்கள்? இல்லை ஐக்கிய பட்ட இலங்கை ‘உண்மையான’ சோசலிக குடியரசாக அமையும் போது சகல இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமை கிடைக்கும் என்கிறீர்களா? அதாவது ஒரு நாட்டுக்குள் சோசலிசம் / கம்யூனிசம காண விளைகிறீர்களா? அதாவது சோசலிசம் வரும் வரையும் சிறுபான்மையினர் அடிபட்டு சாகட்டும் என்கிறீர்களா? முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது தோழர்கள். 

 

  • ஈழம், பலஸ்தீனம், காஷ்மீர், திபேத்,  வட அயர்லாந்து, ஸ்கட்லாந்து, கற்றலோனியா ஈறாக தேசிய இனங்களின் பிரச்சனை தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன? 

 

  • தமிழ் மேட்டுகுடியினர் தான் ஆயுதப் போரட்டத்தை ஆரம்பித்து வைத்தாதாக தொடர்ச்சியாக சொல்கிறீர்கள். ஈழ போரட்ட ஆரம்ப கால கட்டங்களில் உழைக்கும் மக்களையும் இளையோரையும் உங்களால் ஏன் அணிதிரட்ட முடியவில்லை? இந்த கட்சியின் முன்னாள் தலைமை ஆயுதப் போராட்டத்தை தாம்தான் தொடங்கியதாக சொல்லி இருக்கிறார்களே? ‘ஆயுத போராட்டம் சரியில்லை’ என ‘சுய விமர்சனம்’ செய்து கொண்டுவிட்டீர்களா?
  • உலகெங்கிலும் தேசியம் சார்ந்த எழுச்சி கூர்மையடைந்து வருவதை அவதானித்து இருப்பீர்கள். அவற்றையும் குறுந்தேசியம் என அடையாளப்படுத்துகிறீர்களா? 

உங்கள் நிலைப்பாடு தொடர்பாக முன்வைக்கபட்டிருக்கும் கேள்விகள். இவை தொடர்பாக எந்த ஊடகம் வாயிலாகவும் மக்கள் முன்னிலையில் விவாதிக்க தமிழ் சொலிடாரிட்டி தாயராக இருக்கிறது. 

அவதூறு செய்தலை விடுத்து கருத்தியல் ரீதியாக விவாதிக்க வாருங்கள். 

இலங்கை வரலாற்றில் இடது சாரிகள் எடுத்த தவறான பல நிலைபாடுகள் இன்றும் எமது தோள்களில் இருக்கும் சுமை. மக்கள் இடது சாரியம் நோக்கி நம்பிக்கையின்மையுடன் பார்க்க இதுவும் காரணம். தேசியப் பிரச்சினை பற்றிய சரியான நிலைப்பாடு எடுப்பது இலங்கைக்குள் இயங்கும் அனைத்து இடது சாரிய கட்சிகளுக்கும் அவசியம். இந்த அடிப்படையில்தான் இந்தக் கேள்விகளை கேட்கிறோம். குழப்பங்களை ‘கொள்கை  கோட்பாடு’ என முன்வைத்து தனிநபர்கள் சமூக வலைத்தளங்களில் வம்படிப்பது போல் ஒரு அமைப்பு இயங்க முடியாதல்லவா? தெளிவு தேவை – அதற்கு உரையாடலும் தேவை.