பல்கலைகழக துணைவேந்தர்கள் ஓய்வூதிய வெட்டுக்களை திரும்பப் பெறாவிட்டால் மற்றும் ஊதியம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், இங்கிலாந்து முழுவதும் உள்ள 68 பல்கலைக்கழகங்கள் மேலும் ஐந்து நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை எதிர்கொள்ளும் என்று பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான தொழில்சங்கம் (University and College Union – UCU) தெரிவித்திருந்தது.
‘இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான பில்லியன்களை வருமானமாகக் கொண்டு வருகின்றன, மேலும் பல்லாயிரக்கணக்கான பில்லியன்களை அவற்றின் இருப்புக்களில் பதுக்கி வைத்துள்ளன.
இன்று கல்வி என்பது முதலாளிகளின் திட்டங்களுக்கு ஏற்ப சிறப்பாக வியபரம்மக்கப்பட்டு வருகின்றது. மிகுந்த லாபம் ஈட்டும் இவர்கள் ஊழியர்களை சுரண்டுவதும் அவர்களது உரிமைகளை மறுப்பதுமாக செயற்பட்டு வருகின்றனர். கல்வி அனைவரதும் உரிமை அது இலவசமாக அனைவருக்கும் கிடைக்க வேண்டும். இன்று அது வியாபாரமாகியதனால் மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்ததும் பெரும் தொகை கடனை சுமையை சுமக்கவேண்டி உள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் அந்த கடனுக்கு மேலதிகமாக அறவிடப்படும் வட்டி வேறு.
ஊழியர்களின் ஓய்வூதியத்தைக் குறைப்பதற்கும் அல்லது ஊதிய ஊயர்வை மறுப்பதற்கும், பாதுகாப்பான பணி நிலைமைகள் , ஊதிய இடைவெளிகள் ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பதற்கும் எந்த நியாயமும் இல்லை.
“இந்த போராட்டங்களுக்கு மாணவர்கள் ஊழியர்களுக்கு ஆதரவளிக்கிறார்கள், ஏனென்றால் ஊழியர்களின் வேலை நிலைமைகள் அவர்களின் கற்றல் நிலைமைகள் என்பதை அவர்கள் அறிவார்கள் அதே போல் இந்த கல்வி கட்டணங்கள் இல்லாது ஒழிக்கப்படவேண்டும் என்றும் மாணவர்கள் போராடி வருகின்றனர்.
இந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கும் மாணவர்களின் கோரிக்கைகளுக்கும் தமிழ் சொலிடரிட்டி அதரவு வழங்கி 01.04.20222 அன்று கீல் பல்கலைகழகத்தில் (University of Keele ) நடைபெற்ற தொழில்சங்க போராட்டத்தில் கலந்துகொண்டது. வசதிகள் சேவைகள் மீதான அனைத்து வேட்டுகளுக்கு எதிராகவும், தொழிலாளர்களின் உரிமகளுக்க்ககவும் மாணவர்களின் இலவச கல்விக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பியது.