எமது ஊடகப்பயணத்துக்கு உங்களது ஆதரவை தாருங்கள்

950 . Views .

வணக்கம்,

எதிர் ஊடகத்தின் மூலம் பதிப்பிக்க படும் எதிர் சஞ்சிகையை உங்கள் பார்வைக்கு அனுப்பி உள்ளோம். 

இலங்கை மற்றும் தெற்காசியா உட்பட்ட உலகளாவிய அரசியல் மாற்றங்கள் மற்றும் சம்பவங்களுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் பற்றிய ஆய்வுகளை எதிரில் நீங்கள் தொடர்ந்து படிக்க முடியும். 

எதிர் வெறும் தகவல்களை மட்டும் உள்ளடக்கியது அல்ல. மாறாக தமிழ் மக்கள சார் அரசியல் ஆய்வுகள் மற்றும் திட்டமிடல்களை முதன்மைப் படுத்தி வெளிவரும்.

எதிரில் வெளிவரும் கட்டுரைகள் புலம்பெயர் தமிழ் சமூக வெளிக்கு புதியவை. இத்தகைய ஆய்வுகளை வேறு எங்கும் நீங்கள் படிக்க முடியாது. தெற்காசிய – ஐரோப்பிய பூகோள மாற்றங்கள் – அதனால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் – அந்த அடிப்படையில் நாம் என்ன திட்டமிடல்களை முன்னெடுக்க வேண்டும் என்ற கட்டுரைகளை எதிர் தாங்கி வரும். 

எதிர் சஞ்சிகை வருடம் ஐந்து பதிப்புகளாக வெளிவரவிருக்கின்றது. அடுத்த பதிப்பு விசேட பதிப்பாக உங்களை வந்தடையும். அடுத்த இதழ் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் நடவடிக்கை பற்றிய விபரங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

இந்த எதிர் சஞ்சிகை இலவச பதிப்பாக உங்களை வந்தடைகின்றது. வாசியுங்கள், உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பரிந்துரையுங்கள். நமது சுதந்திர ஊடக பயணத்துக்கு உங்களின் ஆதரவு மிகவும் அவசியம். எதிர் சஞ்சிகை விளம்பரங்களை உள்ளடக்காது. தமிழ் மக்கள் உரிமைக்காக அயராது இயங்கி வருவோர்களின் – மற்றும் சந்தா செலுத்துவோரின் ஒத்துழைப்பில் மட்டுமே இந்த இந்த இதழ் வெளிவருகிறது. எதிருக்கு எந்த வியாபார நோக்கும் இல்லை. லாபத்துக்காக இன்றி மக்கள் மத்தியில் அரசியல் ஆய்வுகள் சென்றடைய வேடும் என்ற ஒரே காரணத்துக்காக வெளிவரும் இதழ் எதிர். இதற்கு உங்கள் ஆதரவு  மிக அவசியம். 

கீழே இருக்கும் மின்னஞ்சல் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு எதிர் சஞ்சிகை பற்றிய எல்லா விபரங்களையும் நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும். உங்கள் ஆதரவு இன்றி இந்தச் சஞ்சிகை தொடர்ந்து வெளிவர முடியாது. எதிரில் வெளிவரும் அரசியல் நிலைபாடு சார் முரண்பாடுகள் உங்களுக்கு இருந்தால் அந்த விவாதத்தையும் எதிரில் நடத்த ஆசரியர் குழு தாயாராக உள்ளது. அரசியல் உரையாடல் மற்றும் ஆய்வுகளுக்கான தளமாக எதிரைக் கருதி உங்கள் முழு ஆதரவையும் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். 

எதிர் சஞ்சிகையை பெற 

– ஆண்டு சந்தா £15  மாத்திரமே.

கீழ்வரும் வங்கிக்கு உங்கள் சந்தாவை செலுத்திய பின் எங்களுக்கு அறியதாருங்கள்.

          Payee Details

             Payee name : Tamil Solidarity

             Account number : 20231862

             Sort code : 60 83 01

நன்றி

தொடர்புகளுக்கு

சாரா ராஜன் 

sara@ethir.org

07837539265