கடந்தகால குற்றச்சாட்டுகளின் நிழல்: நாமல் ராஜபக்ஷவின் பல்கலைக்கழக உரைகள் இரத்து செய்யப்பட்டது ஏன்?

பிரித்தானியாவில் உள்ள புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன்களில் நாமல் ராஜபக்ஷவின் திட்டமிடப்பட்ட உரைகள், தமிழ் சொலிடாரிட்டி மற்றும் மாணவர் அமைப்புகளின் தீவிர எதிர்ப்பால் ரத்து செய்யப்பட்டன. அவர் மீதான கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் மற்றும் அவரது குடும்பத்தின் அரசியல் பின்னணி ஆகியவை முன்னிறுத்தப்பட்டு, இந்த உரைகளை இரத்து செய்யுமாறு பல்கலைக்கழகங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

யார் இந்த நாமல் ராஜபக்ஷ?

நாமல் ராஜபக்ஷ இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் பல்வேறு கொலைகளை புரிவதற்கு காரணமாக இருந்தவரின் மூத்த மகன் ஆவார். இவர் இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் உறுப்பினராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். 2020 முதல் 2022 வரை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

அவரது அரசியல் வாழ்க்கையில் பல சர்ச்சைகளும் குற்றச்சாட்டுகளும் நிறைந்திருந்தன. குறிப்பாக, 2015 இல் அவர் கைது செய்யப்பட்டார்.

குற்றச்சாட்டுகள்.

2009:

சட்டக் கல்லூரி பரீட்சை முறைகேடுகள்: லண்டன் சிட்டி பல்கலைக்கழகத்தில் மூன்றாம் நிலை சட்டப் பட்டம் பெற்ற நாமல் ராஜபக்ஷ, இலங்கை சட்டக் கல்லூரியில் (Sri Lanka Law College) சட்டத்தரணி ஆவதற்கான பரீட்சை எழுதியபோது முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

2012:

பண மோசடி குற்றச்சாட்டுகள் (Money Laundering). நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் NR Consultancy (Pvt) Ltd மற்றும் Gowers Corporation Pvt Ltd ஆகிய நிறுவனங்கள் மூலம் பண மோசடி செய்ததாக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) விசாரணைகளைத் தொடங்கியது.

NR Consultancy (Pvt) Ltd இல் ரூபா 15 மில்லியன் மற்றும் Gowers Corporation Pvt Ltd இல் ரூபா 30 மில்லியன் பண மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

Gowers Corporation இன் நிதியில் இருந்து Hello Corp. (Pvt) Ltd என்ற நிறுவனத்தை ரூபா 100 மில்லியனுக்கு சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தில் வாங்கியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

2015:நிதி முறைகேடுகள்:

ஜனவரி 13, 2015 அன்று, அவரது ஹம்பாந்தோட்டை தொகுதியில் ஒரு நீர் வடிகால் திட்டத்தின் மதிப்பை $120 மில்லியனில் இருந்து $277 மில்லியனாக உயர்த்திக் காட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

2015 க்கு முன்னர் ஒரு இந்திய முதலீட்டில் இருந்து நிதி முறைகேடு செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

2016 இல்

ரக்பி நிதி முறைகேடு (Krrish Lanka Misappropriation Case): ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதற்காக கிரிஷ் ஹோட்டல் திட்டப் பணத்தில் இருந்து 70 மில்லியன் இலங்கை ரூபாவை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ஜூன் 2016 இல் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு 2016 முதல் நிலுவையில் இருந்தது.

பண மோசடி (மீண்டும் கைது)

ஆகஸ்ட் 15, 2016 அன்று, நாமல் ராஜபக்ஷ பண மோசடி செய்ததாகக் கூறப்பட்டு சந்தேகத்தின் பேரில் மீண்டும் கைது செய்யப்பட்டார். இரண்டு நிறுவனங்களில் அவர் முதலீடு செய்திருந்த பணம் குறித்து நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) விசாரணை மேற்கொண்டது. இது “பண மோசடி தடுப்புச் சட்டத்தின்” கீழ் நடந்தது.

2017:

பண மோசடி குற்றச்சாட்டுகள் (குற்றப்பத்திரிகை தாக்கல்: 2017 பிப்ரவரி 8 அன்று, நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக, அவருக்குச் சொந்தமான இரண்டு நிறுவனங்கள் மூலம் 45 மில்லியன் ரூபா பண மோசடி செய்ததாக, சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்தார். இந்த விசாரணையை FCID நடத்தியது.

2022:

ஊழல் ஒப்பந்தங்கள் (Aspen Medical) ஆஸ்திரேலியன் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் (ABC) நடத்திய விசாரணையில், முன்னாள் அமைச்சரான நாமல் ராஜபக்ஷ, அஸ்பென் மருத்துவ நிறுவனம் (Aspen Medical) மூலம் ஒரு மில்லியன் யூரோக்களுக்கு மேல் ஊழல் ஒப்பந்தங்கள் மூலம் பெற்றுள்ளார் என்று கூறப்பட்டது. ஹம்பாந்தோட்டையில் ஒரு மருத்துவமனை திட்டத்தில் இருந்து மில்லியன் கணக்கான டாலர்களை மோசடி செய்ததாகவும் அந்த நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டது.

2024:

சட்டக் கல்லூரி பரீட்சை மோசடி (மீண்டும் புகார்)டிசம்பர் 16, 2024 அன்று, மோசடி, ஊழல் மற்றும் விரயத்திற்கு எதிரான குடிமக்கள் இயக்கம்” அமைப்பின் தலைவர் ஜமுனி காமந்த துஷாரா, நாமல் ராஜபக்ஷ சட்டக் கல்லூரி பரீட்சையில் “மோசடி” செய்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CID) முறைப்பாடு செய்துள்ளார். நாமல் ராஜபக்ஷ சிறப்பு உதவியுடன் பரீட்சை எழுதியதற்கு ஒரு சாட்சி இருப்பதாகவும் அவர் கூறினார்.

2025:

ரக்பி நிதி முறைகேடு வழக்கு (மீண்டும் விசாரணை): ஜனவரி 29, 2025 அன்று, அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம், 2016 முதல் நிலுவையில் இருந்த கிரிஷ் நிதி முறைகேடு வழக்கை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தியது.

இவருடைய இனவாத பிரச்சாரங்கள்:

2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நாமல் ராஜபக்ஷ ஒரு அறிக்கையில் கூறும்போது: இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் பௌத்தர்கள் என்பதால், நாங்கள் சிங்கள பௌத்தத்திற்காக நிற்கிறோம்.புத்த தர்மம், புத்த சாசனம் மற்றும் மகா சங்கத்திற்காக நிற்கிறோம்.இந்த நாடு பௌத்த அடித்தளத்தின் மீது கட்டப்பட்டுள்ளது எனவே, நான் ஒரு சிங்கள பௌத்தன் என்று சொல்வதற்கு எங்களுக்கு எந்த பயமும் இல்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்படி இவருடைய குற்றங்களையும் இனவாத பிரச்சாரங்களலயும் வரிசைப் படுத்தலாம், அதே போன்று இவருடைய அரசியல் கட்சியின் வெளிவராத பல குற்றங்களும் இருக்கின்றன. இப்படிபட்ட இவர்களைடைய சுரண்டல் – மற்றும் வெளிப்படையான சிறுபான்மை இனமக்களுக்கு எதிரான இவர்களதுர இனவாத அரசியலை நாம் எதிர்த்து நிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

கூட்டம் ரத்து செய்யப்பட்ட விடயம்

சிறிய வெற்றியே. எமது பலத்தை‌ கட்டி இப்படியான குற்றவாளிகளையும் இனவாத கொள்கைகளையும் நாம் முறியடிப்போம்..

 

மதன்