Cop26  உச்சிமாநாடும் கோத்தபாய வருகையும், போராட்டங்களும்…

ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாற்றம்” தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, வந்திருக்கும் இலங்கை போர்குற்றவாளியான ஜனாதிபதி கோத்தபாயாவை எதிர்த்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்   தமிழர்கள் தங்களது எதிர்ப்பு போரட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதேபோன்று வெவ்வேறு நாட்டு இனத்தவர்களும் அவர்களுடைய அரசியல் தலைவர்களையும் எதிர்த்து அதே இடத்தில் ஒன்றிணைந்த போராட்டத்தை நடத்தியிருந்தார்கள்.

COP26 உச்சி மாநாடு என்றால் என்ன?

ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக ஐ.நா., உலக காலநிலை உச்சிமாநாடுகளுக்காக பூமியில் உள்ள ஒவ்வொரு நாட்டையும் ஒன்றிணைத்து வருகிறது – COP என்பதன் அர்த்தம் ‘கட்சிகளின்  மாநாடு’ என்பதைக் குறிக்கிறது. 

இந்த மாநாடு ஸ்காட்லாண்ட் கிளாஸ்கோ எனுமிடத்தில் 

31 அக்டோபர் முதல் 12 நவம்பர் 2021 வரை நடைபெற்று வருகிறது. 

அந்த நேரத்தில் காலநிலை மாற்றம், ஒரு உலகளாவிய பிரச்சினையாக மாறியுள்ளது, இந்த சிக்கல்களுக்கான தீர்வு காண வேண்டும் என்று உலகில் பல்வேறு இடங்களில் இருந்து பல்லின மக்கள் தொடர் போராட்டங்களை  நடத்தி வருகின்றனர்.

நவம்பர் 01 மற்றும் 02ஆம் திகதிகள், உலகத் தலைவர்களின் மாநாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

“காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தின் தீர்மானமிக்க சந்தர்ப்பங்கள்” என்று நடைபெறுகின்ற இம்மாநாட்டில், 197 நாடுகளின் அரச தலைவர்கள், அரச பிரதிநிதிகள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுமார் இருபத்தையாயிரம் பேர் கலந்துகொள்கின்றனர். ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெற்ற மாநாடுகளில், இதுவே மிகப் பெரிய மாநாடாகக் கருதப்படுகிறது. 

இலங்கையை சேர்ந்த அரசியல்வாதிகளில் இலங்கை போர்குற்றவாளியான ஜனாதிபதி கோத்தபாய உட்பட

சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, சூரியசக்தி, காற்று மற்றும் நீர்மின்சார உற்பத்தி கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க  ஆகியோரும்,  இவ்விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.

COP26 மாநாட்டில் கோத்தபாய என்ன பேசியிருந்தார்?

அவருக்கு கொடுக்கபட்ட தலைப்பு:“நைதரசனை மீண்டும் கண்டுபிடித்தல், காலநிலை மாற்றம், சுகாதார உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் நிலையான பொருளாதாரத்துக்கான தீர்வுகள் மற்றும் இணைச் செயற்பாடுகள்”

கோத்தபாய உரையாடிய விடயம், நிலையான அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட புதிய விவசாயப் புரட்சியொன்று அவசியம் என்றும், நிலையான அபிவிருத்தியே தமது அரசாங்கத்தின் கொள்கைக் கட்டமைப்பாகும் என்றும் காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சாசனத்துக்கமைய, இலங்கையின் புதுப்பிக்கப்பட்ட தேசிய நிர்ணயங்கள் மற்றும் அபிலாஷைகள் என்பன நன்கு பிரதிபலிக்கின்றன மற்றும் நவீன, விஞ்ஞான பொறிமுறைகள் மற்றும் பண்டைய வழிமுறைகள் ஊடாக, சுற்றாடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதே, தற்போது எமக்கு உள்ள சவாலாகக் காணப்படுகின்றதாகவும், 

இலங்கையில் விவசாயிகளிடையே, பல தசாப்தங்களாக சிறுநீரக நோய் பரவுவது பாரிய பிரச்சினையாக உள்ளதாகவும் இரசாயனப் பசளையை அதிகளவில் பயன்படுத்துவதே இதற்கு மிக முக்கிய காரணமாகியுள்ளது என்று சுட்டிக்காட்டி, இச்சூழ்நிலையிலேயே இரசாயனப் பசளை இறக்குமதியைக் குறைப்பதற்கும் சேதன விவசாயத்தை அதிகளவில் ஊக்குவிப்பதற்கும் எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது” என்றும் குறிப்பிட்டார்.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடு என்ற வகையில் முகங்கொடுத்து வருகின்ற வளப் பற்றாக்குறைக்கு மத்தியிலேயே, சுற்றாடல் தொடர்பான இலங்கையின் முற்போக்கு நிகழ்ச்சி நிரல் செயற்படுத்தப்படுகிறது என்றும், அபிவிருத்தித் திட்டங்களோடு அவ்வாறான நிகழ்ச்சி நிரல் ஒன்றை நடைமுறைப்படுத்துவதென்பது, விசேடமாக நோய்த் தொற்றின் பின்னர் அபிவிருத்தி அடைந்துவரும் அனைத்து நாடுகளுக்கும் பாரியதொரு சவாலாகும் என்றும், அவ்வாறான நாடுகளுக்கான அபிவிருத்தி உதவிகள், தொழில்நுட்பப் பரிமாற்றல்கள், திறன் அபிவிருத்தி, முதலீடுகள் மற்றும் நிதி உதவிகளையும் இயலுமான பங்களிப்புகளையும் அபிவிருத்தி அடைந்த நாடுகள் வழங்கும் என்றும் அவற்றில் வர்த்தகத்துக்கு பாரியதொரு பொறுப்பு உள்ளதோடு மேலாண்மைக்காக முதலீடு செய்யும்போது, பாரியதொரு பிரதிபலன் கிடைக்க வேண்டும் என்றும், இயலுமான வகையில் அதற்குப் பங்களித்து, சுகாதார நலனை உறுதி செய்துகொள்வதற்காக அனைவரும் ஒன்றிணைந்துச் செயற்படவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

போராட்டங்கள்.

கோத்தபாய ஆட்சிக்கு வந்தவுடன்

இலங்கையில் விவசாயிகள் மிகபெரிய போராட்டத்தில் ஈடுபட்டதை காண கூடியதாக இருந்தது, அதே போன்று கொரோனா காலத்தில் பொருளாதார நெருக்கடி மிகவும் மோசமான நிலையில் இருப்பதையும் நாம் காணக்கூடியதாக உள்ளது, அதேபோன்று ஒரு சரியான பொருளாதார அரசியல்நகர்வை தீர்மானிப்பதற்கும் முடியாமல் வெளியுலகை நாடியிருப்பது தெட்டதெளிவாகியுள்ளது. யூன் கூட்டத்தொடரில் இவர் பேசும் போது காணாமல் ஆக்கபட்டவர்களுக்கான மரனசான்றுதல் வழங்கப்படும் என்று, இதில் தெட்டதெளிவாகியுள்ளது என்னவென்றால் கைதி செய்யபட்டவர்களில் அதிகமானவர்கள் கொன்றுவிட்டார்கள் என்பதே, 

அதேபோன்று கோட்டாபய சமீபத்தில் “ஒரு நாடு ஒரு சட்டத்தை” அமல்படுத்த ஜனாதிபதி செயலணி  ஒன்றை அமைத்திருக்கிறார் , இதே போன்று ஒரு இனவாத அரசியலை முன்னெடுப்பதற்கு கோத்தபாய தன்னை மீண்டும் தயார்படுத்தியிருக்குறார். 

இத்தகைய காலகட்டத்தில் எதிர்ப்பு அரசியலை நாம் பலமாக கட்டவேண்டிய அவசியம் உண்டு

ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற போராட்டத்தில் சில பதிவுகள்