COP26 மாநாட்டுக்கு வருகை தரும் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் சொலிடாரிட்டி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை.

COP26 மாநாட்டுக்கு வருகை தரும் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் சொலிடாரிட்டி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை.

COP26 மாநாட்டிற்கு எதிராக அனைத்து புலம்பெயர் ஈழ தமிழர்களும் தமது  எதிர்ப்பை தெரிவிக்குமாறு தமிழ் சொலிடாரிட்டி அழைப்பு விடுக்கிறது. இந்த மாநாட்டிற்கு வருகை தரும் சிறிலங்காவின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின்  வருகைக்கு எதிராக புலம்பெயர்ந்த தமிழர்களால் நடாத்தப்பட இருக்கும்  போராட்டத்தை ஆதரிப்பதுடன், அந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேம். தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின்  மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.பிரித்தானியா மனித உரிமைகளை பாதுகாப்பதாக இருந்தால் அவர் ஸ்காட்லான்டுக்கு  வந்தவுடன் கைது செய்யப்பட வேண்டும். அதை இந்த அரசு செய்யப் போவதில்லை என்பதால் எமது எதிர்ப்பை தெரிவிக்க நாம் ஒன்றுதிரள வேண்டும். 

கோட்டாபய சமீபத்தில் “ஒரு நாடு ஒரு சட்டத்தை” அமல்படுத்த ஜனாதிபதி செயலணி  ஒன்றை அமைத்திருக்கிறார் . இந்த செயலணிக்கு  தலைமை தாங்க ஒரு சிங்கள இனவெறி பிக்குவான ஞானசார தேரரை  நியமித்து இருக்கின்றார் . பௌத்த பிக்கு ஞானசார தேரர் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை பரப்புவதில் பிரபலமானவர். மற்றும்  பொதுபல சேனா (BBS) என்ற தீவிரவாத அமைப்பின் தலைவரும் ஆவார். நீதிமன்றத்தை அவமதித்ததற்காக அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டவர். அவரது வன்முறை நடவடிக்கைகள் மற்றும் வெறுப்பு பேச்சுகளுக்காக அவருக்கு எதிராக இன்னும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை சிறையில் இருந்து விடுவித்து, “ஒரு நாட்டை” நடைமுறைப்படுத்துவதற்காக அவரை நியமித்த கோத்தபாயவின் இந்த நடவடிக்கை இலங்கையில் உள்ள  அனைத்து சிறுபான்மையினருக்கும் எதிரான சமீபத்திய தாக்குதலாகும். இலங்கையின் கடந்த சுதந்திர தினத்தில் உரையாற்றிய கோத்தபாய தான்  சிங்கள மக்களின் ஜனாதிபதி என்றும் அனைவருக்கும் ஜனாதிபதி அல்ல என்றும்  கூறியிருந்தார். 

பேச்சு சுதந்திரம் மற்றும் பல ஜனநாயக உரிமைகள் அனைத்தும் தற்போதைய ஆட்சியில் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இந்த அரசாங்கம் பல புலம்பெயர் அமைப்புகளின் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு  தடை விதித்துள்ளது. இந்த சர்வாதிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என தமிழ் சொலிடாரிடி  அழைப்பு விடுக்கிறது. இந்த ஜனநாயக விரோத அரசுடன்   பேச்சுவார்த்தை நடத்த விரும்பும் சில தமிழ் தலைவர்களின் விருப்பத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் இலங்கையில் உள்ள தமிழர்கள் தற்போதைய ஜனநாயக விரோத  ஆட்சியை முற்றாக நிராகரித்துள்ளனர்.  தமிழ் மக்களின் நலன்களுக்கு துரோகம் இழைத்து இலங்கை அரசாங்கம் மற்றும் அவர்களது நட்பு நாடுகளுடன்  பேச்சுவார்த்தையில் ஈடுபட  விரும்புபவர்களை தமிழ் சொலிடாரிட்டி  கடுமையாக கண்டிக்கிறது.

cop26 மாநாட்டுக்கு எதிராக சர்வதேச போராட்ட தினமான நவம்பர் 6-ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தினத்தில் தமிழ் சொலிடாரிட்டி லண்டனில் ஒரு போராட்டத்தை நடத்த உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

Saturday 6th November
Threadneedle Street
EC2R 8AH London
Nearby station Bank or Liverpool Street

தொடர்புகளுக்கு – மதன் 07454 471030