புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்து தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான நீதி கோரி 2000 நாட்களுக்கு மேலாக முன்னெடுக்கும் போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த போராட்டம் லண்டனிலும் ஒழுங்கு செய்யப்பட்டது. குறிப்பாக சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமாக ஆவணி மாதம் 30ம் திகதி அறிவிக்கபட்டிருக்குறது. இந்த தினத்தில் தாயகத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டத்திலும் எழுச்சிகரமாக போராட்டங்கள் நடைபெற்றன.
இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்திற்கு இன்னும் ஒரு தீர்வும் கிடைகாதபட்சத்தில் தொடர்ச்சியான பல போராட்டங்கள் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் மேற்கொள்ளபட்டுவருகின்றது. அதேபோல் இறுதிவரை காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமலே உளவியல் தாக்கங்களுக்கு உள்ளாகி பலர் இறந்துள்ளனர். அதே போல் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை விடுவிக்க இலங்கை அரசாங்கம் இன்றுவரை வேகம்காட்டவில்லை.
2009 ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினாலும் யுத்தத்திற்கு பிரதான காரணமாக இருந்த ராஜபக்ச அரசாங்கத்தினாலும் எந்த ஒரு தீர்வையும் பாதிக்கபட்ட சமூகத்தினருக்கு வழங்கவில்லை. முன்னதாக அரசாங்கத்தினால் கூறப்பட்ட விடையமானது காணாமல் போனவர்கள் வெளிநாடுகளில் இருப்பதாககூறபட்டது அதன்பின் மக்களின் அழுத்தம் காரணமாக காணமல் போனவர்களுக்கு மரண சான்றுகள் வழங்குவதாகவும் கூறப்பட்டது. ஆனால் மக்களுக்கான சுயாதீன விசாரணைக்கு அரசு இடம் கொடுக்கவில்லை. அதேபோல் வழமைமாறாமல் சர்வதேசமும் அமைதியாக நாட்களை கடத்தி வருகின்றது.
இந்த போராட்டங்களுக்கு முழு ஆதரவை கொடுத்து வருகின்ற தமிழ் சொலிடாரிட்டி ஒருங்கிணைப்பாளர் கூறுகையில் “எமது போராட்டங்களை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்த வேண்டும். அதற்கு எமது போராட்ட பலத்தை தளத்திலும் புலத்திலும் அதிகரிக்க வேண்டும். விழுத்தவே முடியாது மமதையில் இருந்த கோத்தபாயா அரசாங்கத்தையும் மக்கள் போராட்டம் வெளியேற்றியிருக்கின்றது. மக்கள் கையில்அதிகாரம் இருக்குன்றது என்பதையும் அந்த மக்கள் புரிந்திருக்குறார்கள். வடக்கு கிழக்கிலும் தெற்கிலும் எமது கோரிக்கைகளை வெல்வதற்கான ஒரு தளத்தினை அமைப்பதாதை நோக்கி நகர்வதன் மூலம் நாம் எமது உரிமைகளை வெல்வதற்கான நகர்வுகளை நோக்கி நாம் நகரலாம்.”