அமைதியான வழியில் போராடிக் கொண்டிருந்த மாணவத் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டு இருப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்

அமைதியான வழியில் போராடிக் கொண்டிருந்த மாணவத் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டு இருப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்

 

“அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் ராஜபக்சேக்கள் மற்றும் நாட்டை ஆட்சி செய்த ஏனையவர்களும்  கொள்ளை அடித்த மக்களின் பணத்தை மீள பெறுக” என்கின்ற கோரிக்கைகளை முன்வைத்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தினால்(IUSF) மிகவும் அமைதியான எதிர்ப்பு பேரணி  கொழும்பு கோட்டையை அடையும் நோக்குடன் லிப்டன் சுற்றுவட்டத்தில் இருந்து ஆரம்பமானது.இந்த அமைதியான பேரணியை குழப்பு நோக்கத்துடன் ஏராளமான போலீசார் மற்றும் கலகத்தடுப்பு போலீஸ்சார் குவிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் மிகவும் கொடூரமாக இந்த பேரணியை தாக்கி போராட்டத்தை கலைக்க முயன்றதோடு , 21 செயற்பாட்டாளர்கள் கைது செய்து பல்வேறு காவல் நிலையங்களில் தடுத்து வைத்திருக்கின்றார்கள். அவர்களை சந்திப்பதற்கு வழக்கறிஞர்கள் கூட அனுமதிக்காது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.அதே நேரத்தில் வடக்கு கிழக்கில் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட கொடூர சட்டமான பயங்கரவாத தடைச் சட்டம் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டு இருகின்றார்கள். இது அரசியலமைப்புச் சதி மூலம் அதிகாரத்துக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க மனித உரிமைகளை பற்றி தான் கிஞ்சித்தும்  கவலைப்பட போவதில்லை என்பதை தெளிவாக தெரிவித்து இருக்கின்றார் என்பதாகவே கொள்ள வேண்டும்.

இலங்கை மக்களை மீண்டும் ஒரு அரச பயங்கரவாத கொடுமைக்குள் தள்ளப்படுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது. ஜனநாயக உரிமைகள் மீதும், மனித உரிமைகள் மீதும் அக்கறை கொண்டோர் இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக உங்களது கண்டனத்தை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் (IUSF) வெளியிட்டு இருக்கும் அறிக்கைகளை இணைத்திருக்கின்றோம்.

அறிக்கைக்கான இணைப்பு

Report on assault, abduction, imprisonment and intimidation of peaceful protestors