போராட்டக்காரர்களை கைது செய்வதை தமிழ் சொலிடாரிட்டி வன்மையாக கண்டிக்கிறது

1,102 . Views .

தற்பொழுது இலங்கையின் பாராளுமன்றத்தினால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஊழல் மற்றும் ஜனநாயக மறுப்புக்கு எதிராக போராடிய போராட்டடக்காரர்களை அடாவடியாக  கைது செய்து வருகின்றது.இதை வன்மையாக கண்டித்து தமிழ் சொலிடாரிடியின் தேசிய ஒருங்கிணைப்பு குழு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. 

அரகலய போராட்டக்காரர்களை பொய்யான கட்டமைக்கப்பட்ட  குற்றச்சாட்டின் கீழ் சிறிலங்கா பொலிசார் கைது செய்ததை தமிழ் சொலிடாரிட்டியினரான  நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இது அரகலயாவை சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல, அமைதியான எதிர்ப்பாளர்களுக்கு நேரடியான அச்சுறுத்தல் மற்றும் மிரட்டலாகும்.

போராட்டக்காரர்களை குற்றவாளிகளாக ஆக்குவதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும், கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்னும் நடைமுறையில் உள்ளது , இந்த அவசரகாலச் சட்டங்கள்   வெள்ளை வான் கடத்தல்கள் மீண்டும் தலை தூக்குவதற்கு வாய்ப்பளித்துள்ளன,தமிழ் மக்கள்  எதிர் நோக்கிய பயங்கரத்தை தற்போது தெற்கும் எதிர் நோக்குகின்றது.

அனைத்து போராட்டக்காரர்களும் , ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலர்களும் நடந்து வரும் அடக்குமுறைக்கு எதிராக  ஒன்றிணைந்து முன்னோக்கி செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

தேசிய ஒருங்கிணைப்பு குழு

info@tamilsoldarity.org