டீலா? நோ டீலா ?  பதவி  உனக்கு பாதுகாப்பு எங்களுக்கு

டீலா? நோ டீலா ?  பதவி  உனக்கு பாதுகாப்பு எங்களுக்கு

தம்பியை பதவியில் தக்க வைக்க மகிந்த ரணிலுடன் போட்ட டீல்.

இதற்கு மேலும் போராட்ட காரர்களின் அழுத்தத்தை தாங்க முடியாத ராஜபக்ச  அண்ட் கோ ரணிலுடன் ஒரு டீல் ஐ போட்டு கொண்டது.

அன்புடையீர்  ரணில் அவர்களே !

நீங்கள் கனவில் நினைத்தாலும் இன்னொருமுறை இந்த நாட்டின் பிரதம மந்திரி ஆக முடியாது இது அணைத்து மக்களும் அறிந்ததே. நாங்கள் உங்களுக்கு அந்த வாய்ப்பை தருகின்றோம். ஆன்னல் தமிழ் அரசு கட்சி உமக்கு நிபந்தனை அற்ற ஆதரவு தருவது போல் எம்மால் பதவியோ ஆதரவோ தரமுடியாது.

அதற்கு பதிலாக  நீங்கள்

எங்கள் ராஜபக்ச  அண்ட் கோ உறுப்பினர்களின்  பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரவேன்ண்டும்.

எங்கள் சொத்துக்கள்  வங்கி கணக்குகள்  எதுவும் முடக்கப்பட கூடாது

ராஜபக்ச  அண்ட் கோ உறுப்பினர்கள் மீது எந்த ஒரு சட்ட நடவடிக்கைகளும் எடுக்க கூடாது

எங்கள் தரைவழி வான்வழி போகுவரதுக்கள் மற்றும் வெளிநாட்டு பயணங்களில் எந்த இடையூறும் இருக்ககூடாது.

குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது அவர்களை மகிழ்ச்சிபடுத்த போர்குற்ற விசாரணை , இனஅழிப்பு என்று எவனும் வந்து வாசல் கதவ தட்டகூடாது

நாங்க எவ்வளவு அடிச்சம் எண்டு நீயும் கேட்ககூடாது , நீ எவ்வளவு அடிச்சாலும் நாங்களும் கேட்க மாட்டம்.

இந்த டீல் ஓகே எண்டால் மாலை அலரிமாளிகைக்கு  வரவும்.

இப்படிக்கு

மகிந்தா

இதற்கு பின்னதாக என்ன நடந்தது என்பதை நான் உங்களுக்கு சொல்ல தேவை இல்லை

-பேப்பர்  பொடியன்-