இலங்கை வரலாற்றில் முதன் முறையாக!!!!

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 

தேர்தலில் படுதோல்வி கண்ட வேட்பாளர்  இன்று நாட்டின்  பிரதம மந்திரியானார் 

கடந்த பாராளுமன்ற பொது தேர்தலில் எந்த தேர்தல் தொகுதிகளிலும்  வெற்றி பெறமுடியாமல் போன ஒரு கட்சியின் தலைவர்.  அவர்  தன் சொந்த தொகுதியில் வாழ்ந்து வரும் மக்களின் ஆதரவை கூட பெறமுடியாமல் போன ஒரு தலைவர் . இன்று இலங்கையின் பிரதம மாதிரியாக பதவி ஏற்றுள்ளார். 

அவருக்கும் அவரின் அரசியல் சானக்கியதிட்கும் எவ்வாறு பாராட்டுகளை தெரிவிப்பது என்று தெரியவில்லை.

இந்த அரசியல் சம்பவம்  அனைவருக்கும் பல விடையங்களை சிந்திக்க வைத்துள்ளது.

ஏன் பாராளுமன்ற பொது தேர்தல் நடைபெறுகின்றது ? 

நாம் ஒருவரை நிராகரித்து வீட்டுக்கு அனுபினால் அவர் திரும்பவும் வந்து நின்று “ நான் யார் என்று தெரிகிறதா ” என்று நம்மை பார்த்து பாட்டு படுவது போல் தெரிகிறதே இது ஏன்?

ராஜபக்சாக்கள் எதிர் கட்சியாக இருந்த போது இவரால் ஒன்றும் கிழிக்கமுடியாது என்று மேடைகளில் தொண்டை தண்ணி வற்ற உரக்க கத்தினார்களே  – இன்று திடீர் என்று  என்ன மாயம் நடந்தது?

தமிழ் அரசு கட்சி சொல்வது போல அதான் நம்ம ஆளு வந்திடாரில்ல இன்றோடு தமிழர்களுக்கு தீர்வு கிடைத்து விடுமோ?

ஒருவேள கோட்டு சூட்டு போட்டவன் கடன் கேட்டா வெளிநாட்டுகாரன்  கொடுப்பானோ?

இதுக்கெல்லாம் விடை தெரிஞ்சவங்க சூதானமா இருந்துக்குங்க தெரியாதவங்க தெரிஞ்சவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்குங்க 

– பேப்பர் பொடியன் –