ஷோபாசக்தியின் தொடரும் அரசியல் நீக்கம்

1,135 . Views .


எல்லா அரசியற் கேள்விகளையும் புறம் தள்ளி அர்த்தமற்ற கதைகளுக்குள் முடங்கித் தப்பும் தனது பாரம்பரியத்தை மீண்டும் காத்துக் கொண்டுள்ளார் ஷோபாசக்தி. வழமை போலவே ஒரு அரசியற் கேள்விக்கும் பதில் இல்லை.

அவர் பதிலில் ஒரே ஒரு புள்ளி மட்டுமே தேறும். உங்களுக்கு சாலைக்கும் சவலைக்கும் வித்தியாசம் தெரியும் என்று அறிந்து சந்தோசப் பட்டுக் கொள்கிறோம். நீங்கள் சாலை அமைப்பு என எழுதி இருப்பீர்கள் என எண்ணியது தவறே தோழர். அதை விட கேவலமாக உடற் சவால் உள்ளவர்களை திட்டும் சொல்லால் திட்டுவீர் என நாம் எதிர்பார்க்கவில்லை. கூடிய எதிர்பார்ப்பை வைத்த தவறுக்கு மன்னிக்கவும். “அரசியல் நோஞ்சான்சக்தி” என உங்களுக்கு யாராவது பெயர் மாற்றி எழுதினால் – முதல் ஆளாக கண்டிக்க நாம் தான் வருவோம் தோழர்.

இது தவிர வேறு என்ன இருக்கிறது உங்கள் பதிலில்? எந்த ஒரு அரசியலையாவது சரியான படி உங்களால் டிபண்ட் பண்ண முடிந்ததா?

இல்லவே இல்லை.

மே 18 என்ற பெயரில் நீங்கள் எழுதிய அமைப்பு இன்று இயங்குவதில்லை. விட்டது தவறு. சும்மா பினைய வேண்டாம். வர வர தங்களுக்கு கிண்டலும் விளங்கவிலை.

கட்டுரை என் பெயரில் எழுதப்பட்டது. தமிழ் சொலிடரிட்டி அமைப்பின் அரசியலை பற்றி எழுதினாலும் அது நான் எழுதிய கட்டுரை. அதை சொல்லித்தான் முகப் புத்தகத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டதும் நீவிர் அறிவீர்.

உங்களுக்கு CWI பற்றி இருக்கிற ஞானம் பற்றி முன்பே எழுதியாச்சு – அதுக்கு பதில் எழுதுங்கள் பிறகு பார்ப்போம். இந்த அமைப்புக்களுக்கு இடையில் இருக்கும் உறவை யாரும் ஒழித்து மறைத்து நடப்பதில்லை. அத்தகைய நேர்மையற்ற அரசியல் நடவடிக்கை இங்கு இல்லை. நீங்கள் உங்கள் பழக்கங்களை வைத்து முடிவுகளுக்கு தாவி அதை நிறுவல்களாக எழுத வேண்டாம்.

உருப்படியான ஒரு அரசியல் கட்டுரை எழுதுங்கள். அரசியற் கேள்விக்கு பதில் சொல்லப் பழகுங்கள் – அதன் பிறகு பார்க்கலாம் அமைப்பு ரீதியான உரையாடல்.

அத சரி சட்டாம்பி – நீங்கள் லோயர் பிடிச்சாச்சோ? எங்க எனப் பாத்துக்க்கொண்டிருக்கிறம். கெதிஎண்டு சட்டத்த மாத்தி இனங்களுக்கிடையில் ஒற்றுமை கொண்டு வர வேண்டுமல்லோ