இங்கிலாந்து தொழிலாளர் கட்சியின் வரலாற்றுப் பின்னணியும் இன்றைய நெருக்கடியும் – part2

1,252 . Views .

புதிய லேபர் கட்சி தான் நீண்டகாலத்தின் பின் 1997ல் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து பிளேயரிசத்தின் முகம் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கி விட்டது. இதற்கு முன்பு கட்சிக்குள் இருந்த மிலிட்டன் உறுப்பினர்கள் மற்றும் இடதுசாரிகளுக்கு மட்டுமே பிளேயரிஸ்டுகளின் பிற்போப்புத்தனம் தெரிந்திருந்தது. அவர்கள் ஆட்சியைப்பிடித்த கையோடு முன்னெடுக்கத் தொடங்கிய கொள்கைகளைத் தொடர்ந்து தொழிறசங்கங்;கள் மற்றும் மக்கள் அமைப்புகள் மத்தியில் புதிய லேபர் மேல் வெறுப்பு வளரத் தொடங்கிவிட்டது. பிளேயரிஸ்டுகளை எதிர்த்தவர்கள் தமது கருத்து;களை மக்களிடம் எடுத்துச் செல்ல “தேசிய” ஊடகங்கள் எதுவும் வாய்ப்பு வழங்கவில்லை என்பது கவனிக்கப்படவேண்டியது. இதனால் பெரும்பான்மை மக்கள் மத்தியில் இவர்களது நடவடிக்கை பற்றிய விபரங்கள் சென்றடயவில்லை.

ஆனால் 2011ம் ஆண்டு அமெரிக்கா மேல் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலும் அதைத் தொடர்ந்து வலதுசாரிய அரசுகள் எடுத்த நடவடிக்கைகளும் உள்நாட்டு மற்றும் உலக நிலவரங்களை முற்றாக மாற்றிவிட்டன. அமெரிக்காவும், இங்கிலாந்தும் இணைந்து ஈராக் மேல் போர் தொடுத்தது பல்வேறு விளக்கங்களை மக்களுக்கு ஏற்படுத்தியது.

ஈராக் மேல் யுத்தம் தொடங்குவதற்கு மக்கள் மத்தியில் ஆதரவிருக்கவில்லை. பல்கலைக்கழக ஆய்வுப் படிப்புக்காக ஒருவர் எழுதியவைகளை அவரின் அனுமதியின்றி களவெடுத்த டோனி பிளேயரின் உதவியாளர் அலிஸ்டர் காம்பல் கடும் பொய்ப்பிரச்சாரங்களைச் செய்யத் தொடங்கினார். பாராளுமன்றம் யுத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வைப்பதற்காக உறுப்பினர்கள் பலவந்தப்படுத்தப்பட்டனர். 45 நிமிடத்துக்குள் சதாம் உசேன் பிரித்தானியாவைத் தாக்க முடியும் என ஒரு பொய் பாராளுமன்றத்துக்குள் பரப்பி விடப்பட்டது. அவரது உந்துதலால் அதை எடுத்து அனைத்து வலது சாரிய ஊடகங்களும் கடும் பிரச்சாரத்தைச் செய்யத் தொடங்கின. 45 நிமிடத்துக்குள் சதாம் தாக்கும் வல்லமையுடன் இருக்கிறார் என்றும் அவரிடம் படு பயங்கர பெருங்கொலை செய்யும் ஆயுதங்கள் இருப்பதாகவும் பெரும் பிரச்சாரங்கள் விடாது செய்யப்பட்டன. இந்தப் பிரச்சாரத்தின் பின்னிருந்த பிளேயரிஸ்டுகளின் கொலை வெறியைத் தெரிந்துகொண்ட பல்வேறு தொழிற்சங்கவாதிகளும் சோசலிஸ்டுகளும் இதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். யுத்த எதிர்ப்புக் கமிட்டி ஒன்று உருவாக்கப்பட்டு யுத்தத்துக்கு எதிராக மக்கள் திரட்டப்பட்டனர். இந்தக் கமிட்டிக்கு பாராளுமன்ற இடதுசாரிகள் ஒரு சிலரும் ஆதரவைத் தெரிவித்துக்கொண்டனர். இதில் Nஐhன் மக்டொனால்ட் முக்கியமானவர். இந்த யுத்த எதிர்ப்புக் கமிட்டியில் ஒருவராக nஐரமி கோர்பின் நியமிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

யுத்த எதிர்ப்பாளர்கள் தெருவில் இறங்கிக் கடும் போராட்டங்களை முன்னெடுத்தனர். தினமும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் லண்டன் தெருக்களில் ஊர்வலமாகச் சென்றனர். ஏராளமான பாடசாலைகளில் மாணவர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துப் போராட்டங்கள் நடத்தினர். இந்தவகை எந்தப் போராட்டத்துக்கும் பிளேயரிஸ்டுகள் மசிந்துவிடவில்லை. நீங்கள் செய்யிறதைச் செய்யுங்கள் நாங்கள் எங்கட வேலையைச் செய்வோம் என்றபடி யுத்தத்துக்கான அனைத்து ஆயத்தங்களும் செய்யப்பட்டன. குறைந்தபட்சம் ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதி எடுக்கவேண்டும் என்று கூட அவர்கள் முயற்சிக்கவில்லை. அமெரிக்காவில் “அடி முட்டாள்” என வலதுசாரிய ஊடகங்கள்கூட எழுதிய சனாதிபதி எண்ணைக் கிணறுகளைக் கைப்பற்ற ஒற்றைக்காலில் நின்றார். அவரது முதலாளித்துவ சகாக்களினதும் தனதினதும் வங்கிக் கணக்குகளை நிரப்பப் படுகொலைக்கு அவர்கள் தயாராகினர். இந்தச் சூறையாடுதலில் தனது பங்கையும் உறுதிப்படுத்திக்கொண்ட டோனி பிளேயர் புஷ்;சின் வாலைப் பிடித்துக்கொண்டு தொங்கினார். இதனாற்தான் புஷ்ஷின் பூடில் (புஸ்சின் செல்க் குட்டிநாய்) என்ற பட்டம் பிளேயருக்கு வந்து சேர்ந்தது. இத்தருணத்தில் பாடசாலை ஒன்றுக்கு வருகை தந்த பிளேயருக்கு மாணவர்கள் நாய் பிஸ்கட் கொடுத்து வரவேற்ற சம்பவமும் நடந்தேறியது. சோசலிசக் கட்சியைச் சேர்ந்த மாணவர் பிரிவினர் இதைச் செய்தனர்.

லேபர் கட்சிக்குள் வேட்டையாடப்பட்டுக்கொண்டிருந்த சோசலிஸ்டுகள் 1990 களின் ஆரம்பத்தில் கட்சியை விட்டு வெளியேறி சோசலிசக் கட்சி என கட்சியை உருவாக்கி இயங்கி கொண்டிருந்தனர். பிளேயரிஸ்டுகளால் முற்றாகக் கைப்பற்றப்பட்ட புதிய லேபர் கட்சி முற்று முழுதான முதலாளித்துவக் கட்சியாக மாறிக்கொண்டு வருவதால் அவர்களுக்குத் தொழிலாளர்கள் மத்தியில் ஆதரவு குறைந்து கொண்டு வரத் தொடங்கியதைத் தொடர்ந்து இந்த முடிவை அவர்கள் எடுத்திருந்தனர். ஏராளமான தொழிலாளர்கள் கட்சியை விட்டு வெளியேறியிருந்தனர். பல்வேறு தொழிற் சங்கக் கூட்டங்களில் குறிப்பிடத்தக்கத் தொழிற்சங்கவாதிகள் தங்கள் கட்சி அடையாள அட்டையைக் கிழித்தெறியும் வைபவமும் நடந்தேறியது. தொழிலாளர்கள் லேபர் கட்சியைத் தமது கட்சியாக பார்க்கும் நிலமை மாறிவிட்டிருந்தது. இதன் பிறகும் கட்சிக்குள் வேலை செய்வதற்கு என்ன இருக்கு என்று வினவிய சோசலிஸ்டுகள் அனைவரும் கட்சியை விட்டு விலத்தி விட்டனர். இவர்களின் மாணவர் பிரிவுதான் டோனி பிளேயருக்கு நாய் பிஸ்கட் வழங்கியது.

ஈராக் யுத்தமும் அதைத் தொடர்ந்து எழுந்த ஆப்கானிஸ்தான் யுத்தமும் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலியாக்கி விட்டது பலருக்கும் தெரியும். ஆப்கானிஸ்தான் நாட்டின் ஆத்மா நொருக்கப்பட்டு இன்று துண்டுகளாக சிதறிக்கிடக்கிறது. ஈராக் உடைந்து மக்கள் தினமும் பயத்தில் நடுங்கி வாழப் பணிக்கப்பட்டிருக்கிறார்கள். சென்னி, சியா பிரிவுச் சண்டையும் ஈராக் யுத்ததில் இருந்து தொடக்கிவைக்கப்பட்து. இந்த அநியாயங்களுக்கு எல்லாம் காரணமான டோனி பிளேயர் இன்று கடுமையாக வெறுக்கப்படும் அரசயில்வாதிகளில் ஒருவராக இருக்கிறார். பிளேயரிஸ்டுகளின் வண்டவாளங்கள் பல இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இங்கிலாந்து மக்கள் சார்பில் எனச் சொல்லிக்கொண்டு மக்களின் ஆதரவின்றி யுத்தத்துக்குச் சென்ற பிளேயரை போர்க் குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பலப்பட்டு வருகிறது. இவரது செல்வாக்கு குறைவதைக் கண்டதும் பிளேயரிஸ்டுகள் மத்தியில் கடும் போட்டி எழத் தொடங்கிவிட்டது. எப்படியாவது பிளேயரை விரட்டி தான் பிரதமராக்குவதற்கு கோல்டன் பிரவுன் விரும்பினார். 2006களில் இதற்கான கவிழ்ப்;புச் சதியில் இவர்கள் இறங்கிய கையோடு; தான் ஓரு வருசத்துக்குள் வேலை விலத்திவிடுவதாக பிளேயரின் வட்டாரங்கள் அறிவித்துக்கொள்ளத் தொடங்கிவிட்டனர். கையுடன்தனது டயரிக்குறிப்புகளை நாலு மில்லியன் புவுண்சுகளுக்கு விற்றார் பிளேயர். அது மட்டுமின்றித் தனது பெயரில் இருந்த பல்வேறு பவுண்டேசன்களுக்குப் பெரும் ந்ன்கொடைகளையும் பெற்றுக்கொண்டார். ஈராக் யுத்தத்தால் பயனடைந்த பெரும் நிறுவனங்கள் இவற்றுக்குப் பின்னால் இருப்பதாகச் சொல்லிக் கொள்ளப்படுகிறது. இதற்கான விசாரணைகள் கொஞ்சங்;கொஞ்சமாக இப்பொழுதுதான் தலை தூக்கத் தொடங்கியிருக்கிறது. ஒரு படியாக 2007ல் பதவி துறங்து சென்ற பிளேயர் மிகமோசமான நடைமுறைப் பாரம்பரியத்தைக் கட்சிக்குள் விட்டுச் சென்றார்.

கட்சியைச் சின்னாபின்னமாக்கி இடதுசாரிகளை வேட்டையாடும் இயந்திரமாக அதை மாற்றியது மட்டுமல்ல அவரது பங்கு. மருத்துவம் – கல்வி என பல்வேறு சேவைகளைத் தனியார் லாபத்துக்காக விற்கும் வேலையையும் தொடங்கி வைத்துவிட்டுச் சென்றார். தொழிற்சங்கங்களின் உரிமைகளை உடைப்பதற்கான வழியை ஏற்படுத்திச் சென்றார். ஒட்டுமொத்தத்தில் முதலாளித்துவத்தின் மிகச் சிறந்த சேவகனாக வேலை செய்து மக்களுக்கு எதிராக என்ன என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்து சென்றவர் பிளேயர். தச்சரின் தலைலமையில் இருந்த மிக வலதுசாரிய அரசு கனவுகூட கண்டு பார்த்திருக்க முடியாத வேலைகளை எல்லாம் செய்து முடித்துவிட்டுச் சென்றவர் பிளேயர். இதனாற்தான் தச்சரிட்டுகள் இவரது நெருங்கிய நண்பர்களாகவும் இவரைப் பாராட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள். “எனது அரசியல் வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றி பிளேயரே” எனத் தச்சர் அறிவித்துக்கொண்டதும் இதனாற்தான். லேபர் கட்சியைத் தொழிலாளர்களின் ஆதிக்கத்தில் இருந்து பிரித்தெடுத்து முதலாளிகள் பக்கம் வென்றெடுப்பதற்காக தச்சர் எவ்வளவோ முயன்று தோற்றவர். இறுதியில் கட்சிக்குள் இருந்து வலதுசாரிகள் பிளேயரின் தலைமையில் அதைச் செவ்வனே நிறைவேற்றியிருக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து லேபர் கட்சியின் பண்பு முற்றாக மாறிவிட்டது. பழைமைவாதக் கட்சிக்கும் – தொழிலாளர் கட்சிக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டது நிலைமை. இதே சமயம் அனைத்து அரசியற் கட்சிகள் மீதும் மக்களுக்கிருக்கும் நம்பிக்கையும் குறையத் தொடங்கிவிட்டது. 2006-2007 ல் ஆரம்பித்த உலகப் பொருளாதார நெருக்கடி இவர்களின் பிற்போக்குத் தனங்களை மேலும் வெளிக்காட்டியுள்ளது. கன்சர்வேட்டிவ் – டோரி கட்சி தொழிலாளர் கட்சியைத் தேர்தலில் தோற்கடித்த போதும் அவர்களால் அறுதிப் பெரும்பான்மையை எடுக்க முடியவில்லை. லிபரல் டெக்கிராட் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தே அவர்களால் ஆட்சியமைக்க முடிந்தது. வாக்களிக்க செல்லாத மக்களே பெரும்பான்மையாக மாறத் தொடங்கியிருந்தனர்.

உலகப் பொருளாதார நெருக்கடி லாபப் பேராசை கொண்ட வங்கிகளால் உருவானது. ஆனால் அதனால் ஏற்படுத்தப்பட்ட நட்டங்கள் மக்கள் தலையில் திணிக்கும் நடவடிக்கைகளையும் இந்த அரசுகள் முன்னெடுத்தன. பில்லியன் கணக்கான மக்களின் வரிப்பணத்தை வாரி வழங்கி பங்குகள் மற்றும் பெரும் வியாபாரங்களைக் காப்பாற்றிய அரசு மக்களின் சேவைகளைக் காப்பாற்ற எந்த நடவடிக்கைகளையும் எடுக்க மறுத்தது. அது மட்டுமின்றி சேவைகளுக்கு ஒதுக்கும் பணத்தைக் குறைத்து –சேவைகளை முடக்கி மேலதிக பணத்தை மிச்சம் பிடிக்கும் கொள்கைகள் அறிமுகப்டுத்தப்படுகிறது. இந்த நெருக்கடி காலத்தில் நாம் எல்லோரும் ஒன்றாக நட்டத்தைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் எனப் பிரச்சாரமும் முடக்கி விடப்பட்டுள்ளது. ஆனால் பெரும் வங்கிகளின் லாபம் பெருகிக் கொண்டே இருக்கிறது. தொழிலாளர்களின் உழைப்பும் பணமும் தொடர்ந்து லாபமாக மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த முரண்நிலை உலகெங்கும் போராட்டங்களைத் தூண்டி விட்டுள்ளது. 1 வீத முதலாளிகளுக்கும் 99 வீத மக்களுக்கும் இடையிலான யுத்தம் இது என்ற சுலோகன் அமெரிக்க ஆக்கிரமிப்புப் போராட்டங்களில் இருந்து ஆரம்பித்து இன்று உலகெங்கும் பரவியுள்ளது.

இங்கிலந்தில் பல கவுன்சில்கள் லேபர் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன இவர்களின் கட்டுப்பாட்டில். ஆனால் இதே கவுன்சில்கள்தான் டோரிகள் தூண்டும் சேவை மறுப்புகளை முன்னெடுத்து நிறைவேற்றி வருகின்றன. நீல நிற டோரிகளின் கொள்கைகளை மரபான சிவப்பு நிற தொழிலாளர் கட்சி நிறைவேற்றிக் கொண்டிருப்பது பலர் மத்தியில் கடும் வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனாற்தான் இந்த லேபர் தலைவர்கள் சிவப்பு டோரிகள் என அழைக்கப்படுகிறார்கள். இவ்வாறு வேலையாட்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தாக்குதல்களுக்கு எதிராக ஏராளமான போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. சேவைகள் மறுப்புக்கெதிரான ஒருங்கிணைப்புக் குழுக்கள் பல உருவாகி இருக்கின்றன. இவற்றை ஒன்றிணைத்து தேச அளவில் போராட்ட முன்னெடுப்புகள் நிகழ வேண்டும் என்ற கோரிக்கைகள் பலப்பட்டு வருகிறது.

இது மட்டுமின்றி தொழிலாளர்களின் நலன்களை முன்னெடுக்கும் அவர்களுக்கான தனிப்பெரும்கட்சி ஒன்று தனிப்பட உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வரத் தொடங்கியுள்ளது. அதன் நோக்கத்துக்காக இங்கிலாந்தின் இரண்டு முக்கிய சோசலிசக் கட்சிகளும் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுக்கும் ஆர்.எம்.ரி போன்ற ரயில்வே தொழிற் சங்கமும் இணைந்து ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கிறது. தொழிலாளர்களினதும் சோசலிஸ்டுகளினதும் கூட்டு என்றும்- சுருக்கமாக டஸ்க் என்றும் அழைக்கப்படும் இவ்வமைப்பு தனது ஆரம்பகால நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. கடந்த தேர்தலில் இது நூற்றுக்கணக்கான வேட்பாளர்களை கவுன்சில் தேர்தலுக்கு நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இது பற்றிப் பெரும்பான்மை மக்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்பு இன்னும் வரலில்லை. வலதுசாரிய ஊடகங்கள் திட்டமிட்ட முறையில் இவர்கள் பற்றிய செய்தி எதையும் வெளியிட மறுத்து வருகின்றன. இருப்பினும் அரசியற் செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் தொழிற்சங்கவாதிகள் மத்தியிலும் நன்கறியப்பட்டட அமைப்பாக ட்ஸ்க் வளர்ந்துள்ளது. தொழிலாளர் கட்சிக்குள் எஞ்சியிருக்கும் ஒரு சில இடதுசாரிகளும் வெளியில் வந்து இந்த அமைப்புடன் இணைந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

தொழிலாளர் கட்சிக்குள் தொழிலாளர் பிரதிநிதித்துவ கமிட்டி என்ற அமைப்பு Nஐhன் மக்கெடனால்ட் மற்றும் nஐரமி கோர்பின் தலமையில் நீண்ட காலமாக இயங்கி வருகிறது. இவர்கள் கட்சிக்கு வெளியில் வந்து புதிய அமைப்பை உருவாக்கப் பங்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகப் பலப்பட்டு வந்தது. இது பற்றிப் பல பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்துள்ளன. இவர்கள் கட்சிக்கு வெளியில் இருக்கும் போராட்ட அமைப்புகளுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டவர்களாகவும் இருந்தனர். இருப்பினும் லேபர் கட்சிக்குள் இருந்து நீண்டகாலம் வேலை செய்த இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியில்வரத் தொடர்ந்து தயங்கி வந்தனர். பிளேயரிஸ்டுகளை வெளிப்படையாக எதிர்க்கத் தயங்காத இவர்கள் துணிந்து அவர்களுக்கு எதிரான அரசியற் பிரதிநிதித்துவத்தைக் கட்ட முன்வரவில்லை. இதனால் இவர்களால் யாருக்கும் ஆபத்தில்லை என நம்பியிருந்தனர் வலதுசாரிகள். இது மட்டுமின்றி இவர்கள் முன்வைக்கும் இடதுசாரியக் கொள்கைகள் பெரும்பான்மை மக்களுக்கு விளங்காது – அதை அவர்கள் ஏற்கப் போவதில்லை என்ற பிரச்சாரங்களும் பலப்பட்டிருந்தது. இடதுசாரியக் கருத்துக்கள் மிகச் சிறுபான்மை என்ற தெனாவட்டு கட்சிக்குள் வலுதுசாரிகளுக்கு ஏற்பட்டிருந்தது.

இந்த சமயத்தில்தான் லேபர் கட்சி தலைவருக்கான போட்டி நிகழ்ந்தது. 2015ம் ஆண்டு தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து எட் மிலிபான்ட் இராஐpனாமா செய்து கொண்டார். கரியத் கார்மன் பிரதி தலைவராக வைத்துக்கொண்டு கட்சித் தலமைக்கான போட்டி நடத்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் தாங்கள் நினைக்கிறபடியே வரலாறு நகர்ந்துகொண்டிருப்பதல்லை என்பது இவர்களுக்குத் தெரியாமற் போய்விட்டது. வரலாறு இவர்களை நோக்கி நகைக்கும் காலம் வந்துவிட்டதை அவர்கள் எப்படி அறிந்திருக்ககூடும்? இங்கிருந்துதான் nஐரமி கோபைனின்; வரலாறு ஆரம்பமாகிறது.