அகதிகள் ருவாண்டாவிற்கு நாடு கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தும்படி அகதிகள் உரிமை அமைப்புகள் கோரிக்கை.

164 . Views .

அகதிகள் ருவாண்டாவிற்கு நாடு கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தும்படி அகதிகள் உரிமை அமைப்புகள் கோரிக்கை.

இங்கிலாந்து குடியுரிமை மற்றும் எல்லைகள் மசோதாவின் கீழ், 2022 ஜனவரி 1 முதல், சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்ததாக கருதப்படும் அகதிகள் ருவண்டா நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறார்கள். இங்கிலாந்திற்கு வரும் அகதிகள் அங்கிருந்து 4,000 மைல்களுக்கு அப்பால் உள்ள ருவாண்டாவுக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு மிகுதி விசாரணை செய்யப்பட இருக்கிறார்கள். அவர்கள் ஆபிரிக்க நாட்டில் வாழ்வதற்கான உரிமைக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் இங்கிலாந்தில் தங்குவதற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த புதிய திட்டத்திற்கு அரசாங்கத்திற்கு சுமார் 120 மில்லியன் பவுண்டுகளுக்குமேல் செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் முதல் விமானம் ஜூன் 14 ஆம் தேதி ருவாண்டாவிற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகதிகளுக்கான உரிமை அமைப்பு ஒரு போராட்டத்தை ருவாண்டா தூதரகம், லன்டன் முன்னால் 08/06/2022 புதன்கிழமை, மாலை 4-7 ஒழுங்கமைத்துள்ளது.

பின்வரும் இரு கோரிக்கைகளை முதன்மைப்படுத்தி அகதிகளுக்கான உரிமை அமைப்பு இந்தப் போராட்டத்தை ஒழுங்கமைத்துள்ளது.

ருவாண்டாவுக்கு நாடு கடத்தப்படுவதை நிறுத்து.

இனவாத குடியேற்றக் கொள்கைகளை நிறுத்து.

அகதிகளுக்கான உரிமை அமைப்பு

தொடர்புகளுக்கு

லாவண்யா

[email protected]