சொலிடாரிட்ரி நாள் நிகழ்வு 2023

சொலிடாரிட்ரி நாள் நிகழ்வு 2023 

அமர்வு 1

தமிழ் சொலிடாரிட்ரி அமைப்பின் 2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்த சொலிடாரிட்ரி நாள் நிகழ்வு நேற்று 30 செப்டம்பர் 2023 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்றது. இந்த நிகழ்வானது தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பது என்ற தலைப்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்வானது இரண்டு அமர்வுகளாக இடம் பெற்றது.  முதலாவது அமர்வினை தமிழ் சொலிடரிட்டி அமைப்பின் இணை தேசிய இணைப்பாளர் நடேசன் அவர்கள் வழி நடத்தி இருந்தார்.  இதில் தமிழ் சொலிடாரிட்ரி அமைபின் சர்வதேச இணைப்பாளர் சேனன் உரையாற்ருகையில் 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம் பெற்ற மனிதாபிமானம் அற்ற மிகக் கொடுமையான இன அழிப்பை தொடர்ந்து ஆயுத போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. 

தமிழ் மக்களின் போராட்டத்தை தொடர்ந்தும் இலங்கை பௌத்த பேரினவாத சிங்கள அரசுக்கு எதிராக முன்னெடுப்பதற்கும்  தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கும் இலங்கையில் உள்ள அனைத்து ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும்  தமிழ் சொலிடரிட்டி அமைப்பு உருவாக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

 இந்த அமைப்பு ஒரு சிறிய ஒரு அமைப்பாக பிரித்தானியாவில் இயங்கி வந்தாலும் தொடர்ச்சியான போராட்ட அரசியலை இலங்கையின் பௌத்த பேரினவாத சிங்கள அரசுக்கு எதிராக முன்வைத்து வருகின்றது. 

பிரித்தானியாவில் உள்ள உழைக்கும் வர்க்க மக்களை  பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுடன் இணைந்து  இலங்கையில் அடக்குமுறைக்கு உள்ளாகும் அனைத்து உழைக்கும் வர்க்க மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்கான முனைப்போடு தமிழ் சொலிடாரிட்ரி அமைப்பு செயல்பட்டு வருகின்றது.

இலங்கையில் ராஜபக்ச அரசை ஒருபோதும் விழுத்த முடியாது என்று பல அரசியல் பிரமுகர்களும் தெரிவித்து வந்த பொழுதும் மக்கள் சக்தியால் மட்டுமே ராஜபக்ச அரசை உடைக்க முடியும் என்று எமது அமைப்பு வலியுறுத்தி வந்தது.  இது சாத்தியமற்ற செயல் என்று பலரும் எம் அமைப்பின் மீது பலதரப்பட்ட விமர்சனங்களை முன் வைத்த பொழுதும் எமது அரசியல் நிலைப்பாட்டில் மக்களின் திரள்ச்சியால் மட்டுமே ராஜபக்ஷ அரசை முறியடிப்பது சாத்தியமென்று வெளியிட்டிருந்தோம். 

இலங்கையில் இடம்பெற்ற அரகலைய மக்கள் திரட்சியே ராஜபக்ச அரசை வீட்டுக்கு அனுப்பியது. இந்த லோபி அரசியலோ அல்லது ஐநாவோ  அல்லது சர்வதேச குற்றவியல்  நீதிமன்றமொ  இதனை செய்யவில்லை.  இறுதிக்கட்ட யுத்தம் நிறைவடைந்து 14 வருடங்கள் ஆகிய நிலையில் இந்த  அறகலைய மக்கள் போராட்டம்  தெற்கில்  மே 17 ஒரு வெற்றி கொண்டாட்டமாக அனுஷ்டிக்க கூடாது என்று வேண்டுகோள் முன்வைத்தது.  தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்தது.

இது இவ்வாறு இருக்க  தமது அரசியல் சுயலாபங்களுக்காகவும் தமது இருப்பை தக்க வைப்பதற்காகவும் தமிழ் அரசியல் தலைமைகள் தெற்கில் இடம்பெறும் போராட்டங்களுக்கு தமிழர்கள் ஆதரிவு அளிக்க தேவையில்லை என்று கருத்துக்களை பரப்பி வந்தனர். ரணிலுக்காகவும் போர் குற்றவாளி சரத் பொன்சேக்காவை  ஆதரித்து தமிழ் மக்களின் ஓட்டுகளை அவர்களுக்கு வழங்க கூறி வேண்டி நின்றது.  எதிர்க்கட்சியாக இருந்த காலத்திலும் யூ என் பி அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்ததை தவிர பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எந்த ஒரு தீர்வையும் பெற்றுத் தரவில்லை.

 இவர்கள் ஆதரித்த ரணில் இன்று ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றிக் கொண்டிருப்பத்துடன் மற்றும் ஒரு ராஜபக்சவாகவே மாறி இருக்கின்றார் இந்த தமிழ் தலைமைகள் இப்பொழுது என்ன செய்யப் போகிறார்கள் என்பது அவர்களின் அரசியல் போதாமையை வெளிச்சமாக காட்டுகின்றது என்று சேனன் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து   புரட்சிகர இளையோர் சொலிடாரிட்டி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்  சாரங்கன் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின் அரசியல் திட்டமிடல்கள் பற்றி உரையாற்றினார்.   ஒடுக்கு முறைக்கு உள்ளாகும் மக்களை ஒன்றிணைப்பதற்கான முயற்சிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது பற்றியும்  மக்களின் அடிப்படை உரிமைகளை எவ்வாறு வென்றெடுப்பதுஇதில் இளையோர்களின் பங்கு தொழிற்சங்கங்களின் பங்கு என்பது பற்றி உரையாற்றினார்.

அடுத்து அகதிகள் உரிமைகள்  அமைப்பின் செயற்பாட்டாளர்  தனு தனது உரையில் அகதிகளின் உரிமைகளுக்கான அமைப்பு அகதிகளின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமிழ் சொலிடாரிட்ரி அமைப்பின் ஆதரவுடன்  பிரித்தானியாவில் இயங்கி வருகின்றது  என்று தெரிவித்தார்.

மேலும் உரையாற்றுகையில் அகதிகளின் மீதான நெருக்கடியான இன்றைய  நிலையில்

அகதி தெரிஞ்ச உரிமை கோரியவர்களுக்கு வேலை செய்வதற்கான அனுமதிகள் வழங்கப்பட வேண்டும்.

தடுப்பு மையங்கள் மூடப்பட வேண்டும்

கட்டாயமாக திருப்பி அனுப்பப்படுதல் நிறுத்தப்பட வேண்டும்.

 அனைவருக்குமான கல்வியும் சுகாதார சேவைகளும் இலவச படுத்தப்பட வேண்டும்

 என்ற  வேண்டுகோள்களை அகதிகளின் உரிமைகளுக்கான அமைப்பு முன் வைப்பதாகவும் தெரிவித்தார்.

 இன்று சட்ட ஆலோசனைகளையும்  வழிகாட்டுதல்களை பெற்றுக் கொள்வதற்காக  சில சட்ட ஆலோசகர்கள் பெருந்தொகையான கட்டணத்தை அரவிடுவதை கண்டித்து இருந்தார்.  லீகலைட் உதவி திட்டத்தின் மூலம் அரசியல் தஞ்ச கோரிக்கை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் இலவச சட்ட ஆலோசனைகளையும் உதவிகளையும் பெற்றுக்  கொள்ளவும் முடியும் என்று தெரிவித்தார்.

 தமிழ் சுந்தரத்தின் ஆதரவுடன் அகதிகளின் உரிமைகளுக்கான அமைப்பு இலவச சட்ட ஆலோசனை மையங்களை நடத்தி வந்தது. கொரோனா பெருந்தொற்று காரணத்தினால் இடைநிறுத்தப்பட்ட இந்த செயல் திட்டம் திரும்பவும் ஆரம்பிக்கப்படுவதற்கான முனைப்புகளை  மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். இதுவரை காலமும் பல தடங்கலுக்கு மத்தியிலும்  தமது நேரத்தை ஒதுக்கி இலவச சட்ட உதவிகளை வழங்கிய சட்ட வல்லுனர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்தார்.