
பற்றவைத்த மூன்றாம் விதியில்
சுட்டெரித்த நியாயக் குவியல்!
சுவற்றில்பட்ட பந்து போல்
சுயநல இலாபங்களாய் மாறி மாறி
சுடுகாடாய் மாற்றிய தேசத்தின்
பாவப்பட்ட சொந்தக்காரர் நாங்கள்!
சிம்மாசனம் பறிக்கத் திட்டமிட்ட
பேரினக் குள்ளநரிகளின்
ஆதிக்க போதை வெறியில் ஏவல்
நாய்களால் கடித்துக் குதறப்பட்ட
வரலாற்று நாகரீகங்கள் நாங்கள்!
காயங்களுக்கு அப்பால் அதிகமாக
எம்மிடம் எதுவுமேயில்லை…. ஆனால்
எமக்கே எமக்கான சுய அடையாளம்
தவிர….. அதனால் சாம்பலாக்கப்பட்ட
நீதிக் குப்பை மேட்டலிருந்து
என்றாவது சத்தியம் வெல்லுமென்ற
நம்பிக்கையில் ‘பீனிக்ஸ்களாய்’
எழுந்து கொண்டேயிருக்கிறோம்!
எம்.யூ.அப்துல் ரஹீம்
மேலதிக குறிப்பு
31 மே 1981ல் யாழ் நூகலம் இலங்கை அரசால் எரிக்கப்பட்டது. நூலகம் எரிந்து கொண்டிருக்கிற நிகழ்வை பார்த்து அதிர்ச்சியிலே பாதர் சிங்கராயர் டேவிட் அதிர்ச்சி தாங்க முடியாமல் மாரடைப்பு வந்து மரணம் அடைந்தார்.
அவரது படம்