‘போராடுவது எங்கள் உரிமை ‘ என்னும் தொனிப்பொருளில் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உட்பட்ட கைது செய்யப்பட்ட தோழர்களை விடுதலை செய்யுமாறும், மோடி மற்றும் ஒன்றிய அரசாங்களின் மாநிலங்கள் மீதான அடக்குமுறையையும் எதிர்த்து லண்டனில் உள்ள இந்திய உயரஸ்தானியர் அலுவலகத்திற்கு முன்பாக 19 – 06 – 2017 இன்று ஆர்ப்பாட்டம் ஓன்று நடைபெற்றது.
தமிழ் சொலிடாரட்டி அமைப்பினால் ஓழுங்கமைக்கப்பட்ட இந்த போராட்டத்தில் பல நாடுகளில் இருந்தும் புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள் பலரும் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவளித்தனர்.
அரசியல் கைதிகளை விடுதலை செய், குண்டாஸ் சட்டத்தை நீக்கு, பேச்சுரிமையை நசுக்காதே , போராடுவது எமது உரிமை , ஒன்றிய , மாநில அரசே அரசியல் குரல்களை ஒடுக்கதே போன்ற கோஷங்களை போராட்டக்காரர்கள் முன்வைத்தார்கள்.
தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின் உறுப்பினர் மதன் நாதன் கருத்து தெரிவிக்கையில் மே 17 இயக்கியத்தின் தோழர்கள் திருமுருகன் காந்தி , டைசன் , இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோரின் கைதினை கண்டிப்பதோடு இவ்வாறான அரசியல் செயற்பாட்டர்களை தேசவிரோதிகளாக சித்தரித்து அடக்கி ஒடுக்க முற்படும் அதிகார சக்திகளுக்கு எதிரான குரலாகவே இந்த ஆர்ப்பாட்டதை ஏற்பாடு செய்தோம் என்றார். சகல அடக்குறைகளுக்கும் எதிரான ஓர் இயக்கமாகவே தமிழ் சொலிடாரிட்டி செயற்படுவதகவும் , எமது நலன்களுக்காக எந்த அதிகார அடக்குமுறை சக்திகளோடும் தமிழ் சொலிடாரிட்டி இணைத்து செயற்பட மாட்டாது என அவர் மேலும் கூறினார்.
[robo-gallery id=”1929″]