2017 ஆம் ஆண்டிற்கான சொலிடாரிட்டி நாள் (Solidarity Day )

725 . Views .

தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக தொழிற்சங்கங்களோடும் பிற அமைப்புகளோடும் கலந்துரையாடல்

2017 ஆம் ஆண்டிற்கான சொலிடாரிட்டி நாள் (Solidarity Day ) எதிர்வரும் சனிக்கிழமை காலை 10.30 மணி தொடக்கம் யுனைட் (Unite) தொழிற்சங்க தலைமை காரியாலத்தில்நடைபெற உள்ளது. தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினால் ஒழுங்கு செய்யபடும் இந்நிகழ்வு வெவ்வேறு கலந்துரையாடல்களை  உள்ளடக்கியது .

லோபி அரசியல் தான் எம்மக்களுக்கு ஒரே வழி என்போருக்கும் , வேறு வழியில்லை எனக்கூறி நல்லிணக்கம் ,சாணக்கியம் மூலம் தருவதை பெற்று வாழ்வோம் என்போருக்கும் தமிழ் சொலிடாரிட்டியின்  அரசியல் நிலைப்பாடு பற்றியும் ,  மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் முன்னோக்கு அரசியல் சிந்தனையும் உள்ளடங்கலாக ஓர் புத்தகமகா வெளிடுகிறார்கள். அதுசார்ந்த கலந்துரையாடல் இடம்பெறும்

தொடர்ந்து எழுத்தாளர் , கவிஞ்சர் , மொழிபெயர்ப்பாளர் மீனா கந்தசாமி அவர் எழுதிய இரண்டாவது நாவல் “When I Hit You: Or, A Portrait of the Writer as a Young Wife” என்ற நாவலை வெளியிட்டு பேசவுள்ளார். ஆர்வமுள்ளவர்கள் அவரிடம் நேரடியாக கையெழுத்திட்டு பிரதியை பெற்றுக்கொள்ள முடியும்.

ஒரு மணி நேர மதிய நேர இடைவேளையின் பின்னர் தொழிற்சங்கள் பங்கு கொள்ளும் கலந்துரையாடல் இடம்பெறும். PCS, BFAWU, UNISON, UNITE , RMT  போன்ற தொழிற்சங்கள் தமிழ் உழைக்கும் மக்கள் இங்கு எதிர்கொள்ளும்  பிரச்சனைகள் பற்றியும் , தாயகத்தில் இடம்பெறும் அடக்குமுறைகள் பற்றியும் ஓர் கருத்து பகிர்தலாக இடம்பெறும்.

பின்னர் அகதிகள் சட்ட ரீதியாக இன்று எதிர் நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் இலவச சட்ட சேவையினை பயன்படுத்தல் பற்றியும் உங்கள் கேள்விகளுக்கு விரிவாக பதில் அளிக்க உள்ளார்கள் சட்ட வல்லுனர்கள். இதில் காஷ்மீர்,பங்களாதேஷ் மற்றும் குர்திஸ் மக்கள் அமைப்புகளும் கலந்து கொள்ள உள்ளனர்.

பல்வேறுபட்ட அமைப்புகள் கலந்துகொள்ளும் இவ் நிகழ்வில் நீங்களும் பங்குபற்றலாம். இன்றே உங்கள் வரவினை பதிவு செய்துகொள்ளலாம்.பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்