பிரித்தானியாவில் ஓன்றினையும் தமிழ் இளையோரின் முயற்சிக்கு ஆதரவு அளியுங்கள்

பிரித்தானியாவில் ஓன்றினையும்  தமிழ் இளையோரின் முயற்சிக்கு ஆதரவு அளியுங்கள்

தாயக மக்களின் அரசியல் எழுச்சி புலம்பெயர் மக்களின் ஆதரவு’ என்ற தொனி பொருளில் வருகின்ற  25.06.2017 ஞாயிற்றுக்கிழமை WEMBLEY CENTRAL STATION முன்பாக மதியம் 02:00 மணி தொடக்கம் 05:00 மணி வரை

ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எந்த ஓர் அமைப்பும் இளையோர் சிலர் ஏற்பாட்டு குழு ஒன்றை உருவாக்கி இவ் போராட்டதை ஒருங்கமைத்துள்ளனர்.

தற்போது தாயகத்தில் நிகழும் மக்களின் எழுச்சிப் போராட்டங்களுக்கு புலத்து மக்களும் தமது ஆதரவை தெரிவிக்கும் முகமாக ஒழுங்கமைக்கப் பட்டுள்ள போராட்டத்தில் ஏற்பாட்டுக் குழுவினர் வலியுறுத்தும் விடயங்கள்.

  • எமது மக்கள் கடும் துன்பத்தில் உழலும் தருணம் பெரும் ஊழல்களில் ஈடு பட்டிருந்த அரசியல்வாதிகளுக்கு எமது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறோம்.
  • மக்கள் பிரதிநிதிகள் உள்ளடங்கிய தன்னிச்சையாக இயங்கக் கூடிய விசாரணைக் குழு அனைத்து ஊழல்களையும் விசாரிக்க அனுமதிக்கப் பட வேண்டும்.
  • வாட மாகாண கணக்கு வழக்குகள் மக்கள் முன் வெளிப்படையாக முன் வைக்கப் படவேண்டும்.
  • சூறையாடப்பட்ட பணம் முழுதும் வசூலிக்கப் பட்டு மக்கள் நல சேவையில் முதலீடு செய்யப்பட வேண்டும்.
  • ஊழல் குற்றச்சாட்டைத் தமது அரசியல் நலன்களுக்கு பாவித்துக் கொள்ளும் தமிழ் தலைமைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
  • முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேல் இருக்கும் அரசியல் எதிர்ப்பு இத்தருணத்தில் பாவிக்கப்படுவதற்கு எதிராக மக்கள் திரண்டு எதிர்ப்பதை நாம் வரவேற்கிறோம்.
  • அரசியற் கட்சிக்குள்ளும் வெளியிலும் தலைமைகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கான தெரிவுகள் சனநாயக முறையில் நிகழ வேண்டும். இது தனி நபர்களின் சொந்த விருப்பு வெறுப்பு சார்ந்து மக்களை மீறிய அதிகாரமாக சுருக்கப் படுவதை எதிர்க்கிறோம்.
  • தாயக மக்களின் விடுதலைக்கான அறைகூவலில் நாமும் பங்கு கொள்கிறோம்.

 

இலங்கை அரசின் அடக்குமுறைக்கு எதிராக போராடிய நாம் இன்று எமது ‘தலைமைகளின்’ அரசியல் அடாவடித்தனங்களுக்கு எதிராகவும் சேர்த்துப் போராட வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம் என்ற விழிப்புணர்வு மக்களுக்கு வர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் இப்போராட்டத்தை தமிழர் செறிந்து வாழும் பகுதியில் நடாத்த திட்டமிட்டதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தனர் .

பல்வேறு அமைப்புகளில் செயற்பாட்டாளர்களாக இளைஞ்சர்கள் பொதுவான மக்களின் பிரச்சனைகளுக்கு இவ்வாறு ஒன்றிணைத்து செயற்படுவதின் ஓர் ஆரம்ப புள்ளியே இதுவாகும். பிரித்தானியாவில் உள்ள சகல புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கும் தாம் அழைப்பு விடுத்துள்ளதாகவும் , பங்கு பற்றுபவர்கள் தமது கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் மேலும் தெரிவித்தனர்