தாயக மக்களின் அரசியல் எழுச்சியும் புலம்பெயர் மக்களின் ஆதரவும்

பிரித்தானியாவில் ஞாயிற்றுக்கிழமை (25.06.2017 )அரசியல் அடக்குமுறைகளுக்கு எதிரான தாயக மக்களின் போராட்டங்களுக்கு புலத்தில் இருந்து நமது ஆதரவினை அளிக்கும் முகமாக Wembly Central Station க்கு முன்பாக  ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

 

போராட்டத்தை அமைப்புகள் சாராது இளைஞ்சர்கள் ஓர் ஏற்பாட்டு குழுவை அமைத்து ஒழுக்கமைத்திருந்தனர்.  வேறு வேறு அமைப்புகளில் அரசியல் செயற்பாட்டாளர்களாக இருக்கும் இவ் இளையோர் பொதுவான மக்கள் பிரச்சனைகளுக்கு ஒன்றிணைத்து செயற்பட்டு மக்களை ஒன்றிணைதலின் முதல் படி இப் போராட்டம் எனலாம்.

 

தாயாக மக்களின் நிலைப்பாடுகளுக்கு ஆதரவளித்து நடாத்த பட்ட பின்வரும் கோஷங்களை முன்வைக்கபட்டன.

 

 

  • எமது மக்கள் கடும் துன்பத்தில் உழலும் தருணம் பெரும் ஊழல்களில் ஈடு பட்டிருந்த அரசியல்வாதிகளுக்கு எமது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

  • மக்கள் பிரதிநிதிகள் உள்ளடங்கிய தன்னிச்சையாக இயங்கக் கூடிய விசாரணைக் குழு அனைத்து ஊழல்களையும் விசாரிக்க அனுமதிக்கப் பட வேண்டும்.

 

  • வட மாகாண கணக்கு வழக்குகள் மக்கள் முன் வெளிப்படையாக முன் வைக்கப் படவேண்டும்.

 

  • சூறையாடப்பட்ட பணம் முழுதும் வசூலிக்கப் பட்டு மக்கள் நல சேவையில் முதலீடு செய்யப்பட வேண்டும்.

 

  • ஊழல் குற்றச்சாட்டைத் தமது அரசியல் நலன்களுக்கு பாவித்துக் கொள்ளும் தமிழ் தலைமைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

 

  • முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேல் இருக்கும் அரசியல் எதிர்ப்பு இத்தருணத்தில் பாவிக்கப்படுவதற்கு எதிராக மக்கள் திரண்டு எதிர்ப்பதை நாம் வரவேற்கிறோம்.

 

  • அரசியற் கட்சிக்குள்ளும் வெளியிலும் தலைமைகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கான தெரிவுகள் சனநாயக முறையில் நிகழ வேண்டும். இது தனி நபர்களின் சொந்த விருப்பு வெறுப்பு சார்ந்து மக்களை மீறிய அதிகாரமாக சுருக்கப் படுவதை எதிர்க்கிறோம்.
  • தாயக மக்களின் விடுதலைக்கான அறைகூவலில் நாமும் பங்கு கொள்கிறோம்.

மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் யாராக இருப்பினும் நாம் எதிர்க்கின்றோம் எனபதே ஏற்பட்டு குழுவின் நிலைப்பாடு ஆகும். தனிநபர்களையோ  காட்சிகளையோ முன்னிறுத்தியோ  அல்லது மறுத்தோ இப்போராட்டம் நடைமுறை படுத்தப்படவில்லை. மக்கள்சார் அரசியல் புரிவோர் , மக்கள் விரோத அரசியல் செய்வோர் என்ற நிப்பிலைப்பாட்டில் தான் இவ் போராட்டம் நடைபெற்றது.

அரசியல் ரீதியாக முரண்பட்டாலும் மக்களுக்கான பொது விடயங்களில் இளையோர் இணைந்து செயல்பட ஆரம்பித்திருப்பது நம்பிக்கைக்குரியது.

[robo-gallery id=”1933″]