தற்போதய அரசின் கொள்கைகள் குடிவரவாளர் மற்றும் அகதிகளுக்கு எதிரானது. இந்த நிலைப்பாட்டை நாம் மாற்றுவதானால் இந்தக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டச் சக்திகளுடன் நாம் இணைய வேண்டும். நாம் இந்தக் கொள்கைகள் சரி என ஏற்றுக் கொள்ளவில்லை என்ற செய்தியைப் பதிய வேண்டும்.
நாம் போராட்டச் சமூகத்தில் இருந்து வந்தவர்கள் என்பதை உட்துறை அமைச்சுக்கு தெரியப் படுத்துவது அவசியம். இந்த நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலம் சரியான கொள்கைப் பக்கம் நிற்பது மட்டுமின்றி எமது கோரிக்கைகளுக்கான ஆதரவையும் நாம் திரட்ட முடியும்.
அகதி கோரிக்கையாளர் வேலை செய்யும் உரிமையை வழங்கு – தடுப்பு முகாம்களை மூடு போன்ற கோரிக்கைகளுக்கு ஆதரவு தரும்படி நாம் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளோம். அகதிகள் உரிமை இயக்கத்திற்கு ஆதரவும் உதவியும் திரட்ட உள்ளோம். அகதிக் கோரிக்கையாளர்கள் எதிர் கொள்ளும் பல இன்னல்கள் இந்த நாட்டு மக்கள் பலருக்கு தெரியாது. எமது பிரச்சார நடவடிக்கைகள் மூலம் எமது நிலவரத்தை விளக்குவது மட்டுமின்றி – அதை மாற்றுவதற்கான பெரும்பான்மை மக்கள் ஆதரவையும் திரட்ட உள்ளளோம்.
ஆதரவானவர்களின் கையெழுத்து மற்றும் விபரங்கள் திரட்டுவது மட்டுமின்றி முடிந்தவர்க அகதிகள் உரிமை இயக்கத்தில் இணைந்து எமது கோரிக்கைகள் வெல்ல உதவுமாறும் கோர இருக்கிறோம். இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க திரண்டு வரும்படி கேட்டுக் கொள்கிறோம்.