சிறிலங்காவின் 70ஆவது சுதந்திர தினத்தை எதிர்த்து பிரித்தானியாவில் போராட்டம்

1,767 . Views .

இலங்கை தனது 70ஆவது சுதந்திர தினத்தை பெப்ரவரி 4ஆம் திகதி கொண்டாடியது. இதனை கொண்டாடும் விதமாக பிரித்தனியாவின் லண்டன் நகரில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தினால் அனைத்து இலங்கை மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதே நேரம் , அதே இடத்தில்  சுதந்திரம் யாருக்கானது என்ற தொனி பொருளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்பட்டிருந்தது. தமிழ் சொலிடாரிட்டி , தமிழர் ஒருங்கிணைப்பு குழு , நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பன ஒன்றிணைந்து இந்த போராட்டதிற்கான அழைப்பை விடுத்திருந்தன.

 

காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கே? ஆக்கிரமிப்பு நிலங்களில் இருந்தது இராணுவமே வெளியேறு , அரசியல் கைதிகள் விடுவிக்கபடல் வேண்டும், இரகசிய சித்திரவதை முகாம்களை மூடு , தனியார் மயமாக்கலை நிறுத்து , மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகள் அங்கீகரிக்க பட வேண்டும் ,  தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்க பட வேண்டும் , வெளியிடபட்டிருக்கும் இடைக்கால அறிக்கையை நாம் நிராகரிக்கிறோம் போன்ற பல அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடாத்தபட்டது

 

தனிநாடு கோரிக்கையை நாம் தியாகம் செய்துவிட்டோம் என்று தமிழ் தலைமைகள் மேடையில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் வேளையில் தமிழர்கள் சுதந்திர தினம் அன்று இலங்கை தூதரகம் முன் தேசிய கொடி ஏந்தி , கறுப்பு சட்டை அணிந்து பறை இசை முழங்க சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களுக்கு எதிரான கோஷங்களை முன்வைத்தார்கள். அப்போது இலங்கை தூதரகத்தில் இருந்து இராணுவ சீருடையில் வந்த அதிகாரி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பாத்து தான் சிறிலங்கன் என்பதில் பெருமை அடைவதாகவும் உங்களை முடித்து விட்டேம் என எள்ளி நகையாடும் பாணியில் சைகைகளை காண்பித்தார். ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இலங்கை அரசு ஒரு பேர்குற்ற அரசு அதற்காக வெட்கபடவேண்டும் என கோசங்களை எழுப்பினர். அதனால ஒரு பதட்டநிலை உருவானது. பிரித்தானிய காவல் துறையினால் மேலதிக காவல் அதிகாரிகள் மற்றும் உலங்கு வானூர்தி வரவழைக்கப்பட்டது.மக்கள் தொடர்ந்து தமது கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுச்சியுடன் எழுப்பினார். இலங்கை தூதரகத்தின் முன்னால் போராட்டம் நிறைவு பெற்று பின்னர் பிரித்தானிய பிரதமர் மாளிகைக்கு முன்னால் ஆரம்பமாகியது.

 

சுதந்திர தின கொண்டாண்டங்களில் பிரித்தானிய பிரதிநிதிகளும் , அரச குடும்பத்தை சார்ந்தவர்களும்  பங்குபற்ற வேண்டாம் என கோரியும் , இடம்பெற்ற இன படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டியும் , தமிழர்கள் அரசியல் உரிமை போராட்டத்திற்கு அங்கீகாரம் வேண்டியும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் போராட்டம் நடைபெற்றது . இந்த போராட்டங்களில் தமிழக தமிழர்கள் பலரும் பங்கு கொண்டிருந்தமை அவதானிக்க கூடியதாக இருந்தது. மேலும் பெரியார் – அம்பேத்கர் படிப்பு வட்டம் எனும் அமைப்பு ரீதியாக இவர்கள் கலந்து கொண்டு இலங்கை அடக்குமுறை அரசிற்கு எதிரான வாசகங்களை தாங்கி பிடித்து இருந்தமை குறிப்பிடதக்கது.

[robo-gallery id=”2537″]