இங்கிலாந்தில் வளரும் துவேச நடவடிக்கைகளை தமிழ் சொலிடாறிற்றி கண்டிக்கிறது.

1,804 . Views .

தமிழ் சொலிடாறிற்றி வெளியிட்டிருக்கும் அறிக்கையைக் கீழே பார்க்கலாம்.

துவேச நடவடிக்கைகளைக் கண்டிப்போம்

தற்போது துவேச நடவடிக்கைகள் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியுள்ளது. அதனை வளர விடாமல் கண்டிப்பது அவசியம்.
துவேசத்தைப் பிரச்சாரம் செய்து அதை மக்கள் மத்தியில் ஊற்றி வளர்த்துவரும் அதி தீவிர யுகிப் போன்ற வலதுசாரிய அமைப்புக்களையும் மற்றும் துவேச அரசியற் கட்சிகளையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

வெளிநாட்டு மக்கள் மற்றும் அகதிகள் மீது இனத் துவேசத்துடன் மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.

அகதிகள் மற்றும் வெளிநாட்டவர்களின் எல்லாவகையான உரிமைகளும் காக்கப்படவேண்டும்.

வலதுசாரி உட்கட்சி அரசியல் பூசல்களை மக்கள் தலையில் போட்டு மக்களை நெருக்குதல்களுக்கு உள்ளாக்கி மக்களின் உண்மையான பிரச்சனைகள் வெளிக்கொண்டுவராமல் மக்கள் திசை திருப்பப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பதுடன் அதை வன்மையாக கண்டிக்கிறோம்.

இங்கிலாந்தில் வசிக்கும் அனைத்து மக்களினதும் கல்வி மருத்துவ வாழ்விட உரிமைகள் பறிக்கப்படாமல் இருப்பதுடன் மேலதிக நலத்திட்டங்களும் கெண்டுவரப்படவேண்டும். இவற்றிற்கான மூதலீடுகளை அதிகரித்து மக்கள் பிரித்தாளப்படுவதும் அதனால் துவேசம் வளர்வதும் தடுக்கப்படவேண்டும்.

துவேச நடவடிக்கைகளை தூண்டும் அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் போன்ற எல்லா மக்கள் எதிப்பு சக்திகளையும் எதுவித சமரசமுமின்றி வன்மையாகக் கண்டிக்கிறோம்.