குமரன் போஸ் -வேலை உரிமையைத் திரும்ப வழங்கு

1,064 . Views .

-பாரதி

சாம் வேர்த் பிரதர்ஸ் (samworth brother ) என்ற பெரிய தொழிற்சாலை ஒன்றில் கடந்த பத்துவருடங்களுக்கு மேலாக வேலை செய்துக்கொண்டிருந்த குமரன் போஸ் என்ற ஊழியர் தனது வேலையிலிருந்து வலுக்கட்டாயமாக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
barathi
இத்தொழிற்சாலையானது இங்கிலாந்திலுள்ள டெஸ்கோ போன்ற மிகப்பெரிய அங்காடிகளுக்கு தனது தயாரிப்புக்களை அணுப்பி இலாபம் கண்டுவரும் முக்கிய தொழிற்சாலை. இருப்பினும் இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் மற்றும் தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. இவற்றை எதிர்த்தும் தொழிற்சங்க உரிமையைக் கோரியும் தொடந்து பேசி வந்தது மட்டுமின்றி பல தொழிலாளர்களை தொழிற்சங்கத்தில் இணைக்கும் வேலையையும் குமரன் செய்து வந்திருக்கிறார். 50 வீதமான தொழிலாளர்கள் தொழிற் சங்கத்தில் இணைந்து கொள்ள விரும்பியிருக்கிறார்கள். இதனாற் கோபம் கொண்ட முகாமையாளர்கள் வெற்றுச் சாக்குச் சொல்லி அவரை வேலையில் இருந்து நீக்கியிருக்கின்றனர்.

இன்று வீதியில் இறங்கி தனது உரிமைக்கா போராட தொடங்யிருக்கிறார் குமரன் போஸ். இவரின் போராட்த்தில் பல தொழிலாளர் சங்கங்கள் பங்குபற்றி வருகிறது. Bakers Food and Allied Workers Union (BFAWU) என்ற தொழிற்சங்கம் உட்பட பல தொழிற்சங்க வாதிகள் இவருக்கு ஆதரவாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். என்.எஸ்.எஸ்.என் மற்றும் ஒடுக்கப்படும் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழ் சொலிடாறிற்றி அமைப்பும் இரவது போராட்டத்தில் இணைந்துள்ளது.

பறிக்கப்பட்ட இவரது வேலை மீண்டும் கொடுக்கப்படவேண்டும் – ஊழியர் நலத்திட்டங்கள் முதளாளிகளினால் பறிக்கபடக்கூடாது – ஸம்வோர்த் தொழிற்சாலை ஊழியர்களின் நலன்களை காத்துக்கொள்ள பேகர் யூனியனை இத் தொழிற்சாலையின் தொழிற்சங்கமாக இணைத்துக்கொள்ள வேண்டும் – ஆகியன முக்கியமான கோரிக்கைகளாக முன்வைக்கப்படுகிறது.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவைத் தெரிவிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறது தமிழ் சொலிடாறிற்றி அமைப்பு. கீழ்வரும் பெட்டிசனில் கையெழுத்திட்டு உங்கள் அதரவைத் தெரிவியுங்கள். மேலதிக விபரங்களுக்கு தமிழ் சொலிடாறிற்றியைத் தொடர்பு கொள்ளுங்கள்.

http://www.tamilsolidarity.org/?page_id=5721