“இறந்தோரை நினைப்போம் இருப்போருக்காய்ப் போராடுவோம்”.
ஈழத்தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தால் படுகொலை செய்யப்பட்டு 11 வருடங்கள் நிறைவடைந்திருகின்றது. விடுதலைக்கான போராட்டத்தில் மரணித்த எல்லோரையும் நினைவு கூர்வது வெறும் துக்கம் கொண்டாடும் நடைமுறை மட்டுமல்ல, அது போராட்ட வரலாற்றைத் தக்க வைக்கும் ஒரு நடவடிக்கையுமே. ஆனால் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்பது நினைவு நிகழ்வுகளோடு மட்டும் நின்று விட முடியாது.
எமது போராட்டத்தை எவ்வாறு நாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தப் போகின்றோம். மற்றும் எமது மக்களின் உரிமைகளை எவ்வாறு வென்றெடுக்க போகின்றோம் என்பதினைப் பற்றியும் கலந்துரையாட இருக்கின்றோம்.
தற்போது இருக்கும் கொரோனா நெருக்கடி காரணமாக தமிழ் சொலிடாரிட்டி இணையவழி ஊடாக கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளோம்.
சுகாதார – பொருளாதார நெருக்கடி மற்றும் கோர வறுமையை மக்கள் எதிர் கொண்டிருக்கும் தற்சமயம் – இலங்கை அரசு தனது சர்வாதிகாரப் பிடியை மேலும் இறுக்கிக் கொண்டும் இராணுவத்தை முதன்மைப் படுத்திய அதிகார கட்டுப்பாட்டில் மேலும் மக்களை ஒடுக்க ஆவன செய்தும் வருகிறது. இத்தருணத்தில் தமிழ் பேசும் மக்கள் முன்னெடுக்க வேண்டிய திட்டமிடல்கள் செயற்பாடுகள் என்ன? என்ற மையப் பொருளில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இந்த கலந்துரையாடல் நிகழ்வு இரு அமர்வுகளாக நடைபெற உள்ளது.
அமர்வு -1
தமிழ் மொழிமூலம்
17/05/2020 அன்று பிரித்தானிய நேரம் மாலை 03.00 -05.00 மணிவரை( இலங்கை இந்திய நேரம் மாலை 07.30-09.30 மணிவரை)
இக்கலந்துரையாடலில் திருமுருகன் காந்தி (மே 17 இயக்கம்), சுரேஷ் பேரறிவாளன் (புதிய சோசலிச இயக்கம்) மற்றும் பா நடேசன் (தமிழ் சொலிடாரிட்டி) உரையாற்றவிருக்கின்றார்கள். இக்கலந்துரையாடலை சாரா ராஜன் நெறிப்படுத்துகின்றார்.
அமர்வு 02
ஆங்கில மொழிமூலம்
17/05/2020 அன்று பிரித்தானிய நேரம் மாலை 05.00 – 07.00 மணிவரை( இலங்கை இந்திய நேரம் மாலை 09.30 – 11.30 மணிவரை)
இக்கலந்துரையாடலில் ஹெனா ஷெல் (பொது செயலாளர் சோசலிச கட்சி),இசை பிரியா (தமிழ் சொலிடாரிட்டி) மற்றும் சாமந்தி ( மாணவர் செயற்பாட்டாளர் பிரித்தானியா) மற்றும் மிதிலன் (Tamil Freedom Coalition Canada) ஆகியோர் உரையாற்றவிருக்கின்றார்கள். இக்கலந்துரையாடலை சாரங்கன் நெறிப்படுத்துகின்றார்.
அத்தோடு கேள்வி பதிலுக்கு எனத் தனியாக நேரம் ஒதுக்கப்படுள்ளது.
இக்கலந்துரையாடல் தமிழ் மற்றும் ஆங்கிலம் என வெவ்வேறாக இரண்டு கலந்துரையாடலாக நடைபெறுவதால் கலந்துகொள்வதற்கு தனித்தனியாக நீங்கள் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். பதிவு செய்ய வேண்டிய zoom என்ற இணையவழியூடான செயலியின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
- தமிழ் கலந்துரையாடல், மாலை 3.00 – 5.00. Pm
இணைவதற்கு பதிவு செய்ய வேண்டிய லிங்க்:
https://us02web.zoom.us/webinar/register/5015891940715/WN_3BvjsOwBRaqIinHVO1BnlQ
- ஆங்கில கலந்துரையாடல், மாலை 5.00 – 7.00.pm
இணைவதற்கு பதிவு செய்ய வேண்டிய லிங்க்:
https://us02web.zoom.us/webinar/register/WN_90nz7hwZTZG6gHnIQWMp2g
தொடர்புகளுக்கு :
மதன் – 07454 471030
லாவண்யா – 07890269672.