பாராளுமன்ற தேர்தலும் – இனவாதிகளுடன்  பேரம் பேசுதலும்.. 

1,141 . Views .

இவ்வருடம் ஆகஸ்டு மாதம் 5ம்திகதி இலங்கை பாரளுமன்ற தேர்தல் நடை பெறவுள்ளது. தபால்மூலவாக்குள் நிறைவுபெற்றுள்ளது.

இத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகுளு உட்பட 22 மாவட்டங்களில் சுமார் 7452 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார் கள். இதில் கடந்த வருட  கணக்கீட்டின்படி 1,62,63,885 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள்.. உலகில் பல்வேறு இடங்களில் மற்றும் இலங்கையிலும் பரவிவரும் கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில் இத்தேர்தல் நடைபெறவுள்ளது.

வரலாற்றில் முதன்முறையாக இரு பிரதான  கட்சிகளான UNP மற்றும் SLFP  கட்சிகள்  இத்தேர்தலில்  . பிரிந்து SJP மற்றும் SLPP கூட்டணியில்யில் போட்டியிடுகுறார்கள், SJP யில் UNP யின் முன்னாள் சானாதிபதி போட்டியாளர் சஜித் பிரேமதாச போட்டிஇடுகிறார்.

SLPP யில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ச  போட்டியிடுகிறார்கள், அதேபோன்று UNP சார்பாக ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதும் குறிப்பிடத்தக்கது. மற்றும்  NPP, TNA, SlMC, CWC ஆகயகட்சிகள் வழமைபோல் அக்கட்சியிலே போட்டியிடுகின்றனர்.

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 225 ஆகும், இதில் 22 மாவட்டங்களில் மக்களின் வாக்குகள் மூலமாக தெரிவுசெய்யபட்டு 186 பேர் பாராளுமன்றதில் தெரிவாகிறார்கள், மிகுதி 29 பேர் தேசிய பட்டியல் மூலமாக நியமிக்கப்படுகிறார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மாதாந்த ஊதியமாக சலுகைகள் உட்பட கிட்டத்தட்ட 200,000 ரூபவாகும். இத்தகைய சலுகைகள் வருடாவருடம் அதிகரித்து கொண்டே போகிறது.   அத்தகைய அதிகரிப்பு சலுகைகள் பாராளுமன்றத்தில் உடனடியாக நிறைவேற்றப்படுகிறது.  ஆனால் வாக்குச் செலுத்தும் உழைக்கும் மக்களின் ஊதியமோ உடனடியாக அதிகரிப்பதில்லை, அவர்களது உழைப்பும் சுரண்டபடுகிறது, இதற்காக மக்கள் தினம் தினம் பல இன்னல்களை சந்தித்து போராடி கொண்டிருக்குறார்கள். பாராளுமன்றதில் முற்றுமுளுதாக அனைத்து மக்களுக்கான உரிமைகளையும் பெறுவதற்கு அளுத்தம் கொடுக்கும் உறுப்பினர்கள் எண்ணளவில் சிறிதளாவாக உள்ளது. 0.2%என்றே கூறலாம். .

பாராளுமன்றத் தேர்தல் ஒன்றும் மக்களுக்கு புதிதல்ல. அதே போன்று போட்டியிடும் வேட்பாளர்களும் மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து, ஆட்சியை கைப்பற்றியதும் சிறுசிறு உதவிகளை மட்டும் பெற்றுகொடுத்து மக்களை ஏமாற்றுவதும் காலம் காலமாக நடைபெற்றுகொண்டுதான் இருக்கின்றது. இந்த வேளையில் பிரதானமாக சிறுபான்மை கட்சிகள் பல பிளவுகளாக இருக்கின்றது. இத்தகைய பிரிவுகள் இருந்தால் ஒருவகையில் பிரதானமாக செயற்படும்  முதலாளித்துவ கட்சிகளுக்கு மகிழ்ச்சியூட்டுவதாகவே இருக்கின்றது. இதனூடாக இனவாதத்தை தூண்டி முதாலளித்துவத்தை வளர்ப்பதற்கு இவ்வாறான பேரினவாத கட்சிகள் தொடர்ச்சியாக செயல்பட்டுவருவது அறிந்ததே.

IMF கடனிலேத்தான் இலங்கை நாடு இயங்கிக் கொண்டிருக்கிறது.  இந்தியா சைனா போன்ற நாடுகள் முண்டியடுத்துக்கொண்டு பல வழங்களைச் சுரண்டி கொண்டிருக்குறது, இதற்கு முற்றுமுளுதாக ஆதரவாக  பிரதான முதலாளித்துவ கட்சிகள் இருந்து வருகிறது.  தற்போதய கோத்தபாயவின் மும்முகமான , பெளத்த இனவாத, இராணுவ அதிகார , நேரடி சைனா ஒப்பந்தங்கள்  என கட்டமைக்கும் கட்சியாக SLPP இருக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில் ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகளை எவ்வாறு வெல்லப்போகிறோம்.

தமிழ் தேசியப் பிரச்சனைகள்? 

யார் பாராளுமன்றத்தில் சென்று பேரம் பேசுவது என்று ஒருவொருக்கொருவர் போட்டியிடுவதை தேர்தல் பிரச்சாரங்களில காணக்கூடியதாக உள்ளது. இத்தகைய காலங்களில் தேசம் என்ற வார்த்தைகள் இவர்களால்  நிமிடத்துக்கு நிமிடம் உச்சரிக்கபடுகின்றது. பல்வேறு தமிழ் பேசும் மக்கள் சுயமாக ஒன்று கூடிய போராட்டங்கள் கடந்த காலங்களில் செய்திருந்ததை பார்திருந்தோம். அப்போதெல்லாம் மெளனமாக இருந்த தமிழ் பிரதிநிதிகள் , இன்று தமிழ் பேசும் மக்கள் முன்னிலையில் தேசிய உரிமைகள் வெல்லப் போகிறோம் என்று கூறிகொண்டு வாக்குப் பிச்சை கேட்டு நிற்கின்றார்கள். கடந்த மைத்திரிபால அரசாங்க காலத்தில் தமிழ்பேசும் மக்களுக்கான 13 அம்ச கோரிக்கைகளை ஆதரிக்குமாறு பல்கலைக்கழக மாணவர்கள் கேட்கும்போது முகம்சுளித்தவர்கள் இனிவரும்காலங்களில் தேசிய மக்களின் உரிமைகளை வென்று தரப்போகிறார்களா? என்பதை வாக்கு செலுத்தும் மக்கள் உணர வேண்டும். சனாதிபதித் தேர்தலில் UNPக்கு வாக்கு கேட்ட TNA இந்த தடவை SLPP யுடன் இணக்கத்திற்கு வந்துள்ளது என்று சொல்வது மிகையில்லை. கடந்த சனாதிபதி தேர்தலில் புறக்கணிப்பு என்று சொன்ன மற்றய கட்சியோ மக்களுக்கான அரசியல் திட்டமிடல்களை அக்காலகட்டத்தில் வைத்திருக்கவில்லை. எந்த அடிப்படையில் மீண்டும் அம்மக்களிடம் பிரசாரம் செய்கிறார்கள்? அடையாள மக்கள் சேர்ப்பு என்பதனால் முளுமையான பலத்தை உருவாக்கலாம் என நினைக்குறார்கள். அதற்கான வேலைதிட்டங்கள் என்ன என்று கேட்டால் இவர்களிடம் முற்றுமுளதாக கூறமுடியவில்லை. கிழக்கு மக்களின் தேசிய அபிலாசைகளை இவர்களால் வெல்லமுடியவில்லை. காரனம் இவர்கள் வடக்கை மட்டும் அக்கறைகொண்டவர்களாக உள்ளார்கள்.

போரினால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் பொருளாதார வளர்ச்சிக்காக புலம்பெயர்ந்த மக்களிடம் கையேந்தியவர்கள் இன்று தேர்தல் பிரச்சாரங்களில் உள்ளநாட்டுப் பொருளாதார மேம்படுத்தலை பற்றிப்  பிரச்சாரம் செய்கிறார்கள், அம்மக்கள் ஆயிரம் நாட்களுக்கு மேல் ரோட்டில் போரடி கொண்டிருப்பதை சொகுசு வாகனங்களில் எட்டிப்பார்த்து சிரித்து கொண்டு போனவர்களா அம்மக்களின் உரிமைகளை வென்று தரப்போகிறார்களா? 2005 பாராளுமன்ற தேர்தலில் தமிழ்பேசும்  மக்களின் அதிக வாக்குப் பெற்றும் அதிகாசனங்களையும் கைப்பற்றிய TNA இன்று கட்சி உடைவையும், ஆசன இழப்புகளையும் சந்தித்து நிற்கிறது. இதற்கான பிரதான காரனம் இனவாத கட்சிகளுடன் இணைந்து செயற்பட்ட இணக்க அரசியலும் ஊழலரசியலுமே. இன்று இவர்களுடைய கட்சி கிழக்குமாகணத்தை புறந்தள்ளிநிற்கின்றது.

மலையக மக்கள் பிரச்சனைகள்  

இலங்கையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் இந்த மலையக மக்கள். ஆனால் அவர்களை அடிமையாக வைத்து பிழைப்பு நடத்தி வரும் அரசியல் தலைவர்கள் முதலாளித்துவ கட்சியின் விசுவாசிகளாக உள்ளார்கள். 1000 ரூபா ஊதியத்தை பெற்று கொடுக்க முடியாதவர்கள் இன்று குடும்ப அரசியலை வளர்த்துக் கொண்டிருக்குறார்கள். மீண்டும் அம்மக்களுக்கு தேர்தல் காலங்களில் மட்டும் ஆசைகாட்டி ஏமாற்ற நினைப்பவர்களே மலையகத்தை பிரதினிதித்துபடுத்தும் கட்சிகள்.

கிழக்கு மக்களின் பிரச்சனை

ஈஸ்டர் குண்டுவெடிப்பில் மெளனம் காத்த தலைவர்கள் இன்று அம்மக்களின் மத கலாச்சார உணர்வுகளை மதித்து வாக்கு கேட்குறார்களாம்? இனவாத கட்சியோடு இணக்க அரசியலில் பயணித்து அடக்கி ஒடுக்கி இன்று அம்மக்களிடம் வாக்கு கேட்டு நிக்கின்றது இத்தகைய கட்சிகள்.

இவ்வாறு சிறுபான்மை கட்சிகள் பெரும் இனவாத கட்சியோடு சேர்ந்து கண்துடைப்பு பேரம் பேசும் அரசியல் கட்சிகளாகவே உள்ளது. பாராளுமன்ற தேர்தல்காலங்களில் மக்களின் அபிமானத்தை வெல்ல அம்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு நீலிகண்ணீர்வடித்து –பின் தொடர்ச்சியாக தமது மந்திரிபதவியை தக்கவைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை செய்பவர்களே இக்கட்சி தலைமைகள்.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் போட்டியிடும்  கட்சிகள் அனைத்து தமிழ் பேசும் மக்களையும்  பிரதிநிதித்துவம் செய்வதைப் பார்க்க முடிகின்றதா? மக்கள் பலத்தைக் கட்டி உரிமைகளை வெல்லக்கூடிய பலம் இவர்களிடம் இருந்ததிருக்கின்றதா?

22 மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இலங்கையின் ஒட்டுமொத்த மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வையோ அல்லது நகர்வுகளையோ முன்வைப்பவர்களா?  அவர்களில் அறுதிப் பெரும்பான்மையோர் வலது சாரியச் சிந்தனைவாதிகளாகவே உள்ளார்கள்.

இதில் இடதுசாரியக் கட்சிகளின் நிலைப்பாடுகள்

இடதுசாரிய கட்சிகளோ  மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் இணைப்பதற்கு தயாராக இல்லை. சில கோரிக்கைகளை மட்டும் ஏற்று போட்டியிடுபவரை எவ்வாறு இடதுசாரிய அரசியல் கட்சிகள் என்று கூறுவது எனத் தெரியவில்லை.  Jvp பற்றி கூறவே தேவையில்லை.   இனவாத முதலாளித்துவ கட்சிகளோடு ஆட்சியை பகிர்ந்த கட்சி இது. பிரதானமானக மகிந்த ராஜபக்ச குடும்பம் ஆட்சியமைப்பதற்கு இவர்கள் உழைத்தது கொஞ்சநஞ்சமல்ல. சுயேட்சைக் குழுவில் போட்டியிடும் ‘செந்தில்வேல் கட்சி’ கடந்த காலங்களில் எத்தகைய நிலைப்பாட்டில் இருந்துள்ளார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சுயநிர்ணய உரிமையை முற்றுமுழுதாக ஏற்கின்றதா இத்தகைய சுயேட்சைகுழு? பிரதேசவாதத்தை நாங்கள்தான் ஒழித்தோம் என்று வாய்கூசாமல் பிரச்சாரம் செய்பவர்கள் எந்த காலகட்டத்தில் ஒடுக்கப்படும் மக்களை திரட்டியிருக்கிறார்கள்? அல்லது அதற்கான பலமாக இருந்திருக்கிறார்கள்.  அக்கால கட்ட போராட்டத்தில் இத்தகையகட்சிகள் தமிழ்பேசும் மக்களின் பிரச்சனைகளை முற்றுமுழுதாக உள்வாங்கி இருந்தனவா? இந்த அடிப்படையில் வலது சாரியக் கட்சிகளுக்கும் இத்தகைய கட்சிகளுக்கும்  என்ன வித்தியாசம்? இவ்வாறு பார்கும்போது முன்னிலை சோசலிச கட்சி சில சனநாயக கோரிக்கைகளையாவது வைத்து போராடுகிறது. அவர்கள் கொஞ்சமாவது எதிர்கால திட்டமிடல் பற்றி பேசுகிறார்கள்.

ஆனால் தேசிய இனப் பிரச்சனைகள் -பிரிந்துபோகும் உரிமை உட்பட தமிழ்பேசும் மக்கள்  வைக்கின்ற கோரிக்கையை முற்றுமுளதாக ஆதரித்தவர்கள்   Usp என்கின்ற சோசலிசக் கட்சி மட்டுமே ஆகும். . ஐக்கிய சோசலிச கட்சி அரசியல் நிலைப்பாடுகள் ஒட்டு மொத்த ஒடுக்கபட்ம் மக்களை பிரதிநித்த்துவபடுத்துவதாக உள்ளது. அதே சமயம் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் – அனைத்து ஒடுக்கப்படும் மக்களின் சார்பிலும் இயங்கி வருகிறது. தமிழ் தேசிய பிரச்சனைகள், மலையக மக்கள் பிரச்சனைகள், கிழக்கு தமிழ்பேசும் மக்களின் பிரச்சனைகள், மற்றும் தெற்கில் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள் என பல பிரச்சனைகளை வெளிப்படுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிகமாக போரட்டங்களில் ஈடுபட்டு திட்டமிடல்களை முன்வைத்து போராடி கொண்டிருப்பவர்கள் அவர்கள்.

இத்தகைய சோசலிச கொள்கை அடிப்படையில் இயங்கிவரும்  கட்சிகள்தான்   சிறுபான்மை கட்சிகள் பலமாக இயங்குவதற்கு முன்காட்டியாக இருக்கிறார்கள்..

மக்களது பலத்தையும் போராடும் தொழிற் சங்கங்களையும் கட்டாமல் மீண்டும் இனவாதக்கட்சிகளுடன் முதலாளித்துவக் கட்சிகளின் வளர்ச்சிக்காக   பாராளுமன்றம் நுழைவதற்கு காத்திருக்கும் கட்சியினர்கள் மூலமாக எமக்கான உரிமைகளை வெல்லமுடியாது. எமக்கான போராடும் தளம் ஒன்றை கட்டி எழுப்புவது இன்று அத்தியாவசிய தேவையாக உள்ளது.

மதன் (mathan@Tamilsolidarity.org)