கடந்த சனி கிழமை தமிழ் சொலிடாரிட்டி மற்றும் நெசனல் சொப் ஸ்டுவட்ஸ் நெட்வர்க் (National Shop Stewards Network- NSSN ) இணைந்து ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தது.
தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றினால் பிரித்தானியாவில் நேரடியாக பெரிதும் பாதிக்கபட்டு கொண்டு இருப்பது ஆசிய, ஆபிரிக்க இன மக்கள் ஆகும். இத்தொழிலாளர்களின் பாரபட்சமான நிலைமைகள் குறித்தும், சமூகங்களிலும் வேலையிடங்களிலும் இனவெறி மற்றும் இன சமத்துவமின்மைக்கு எதிராக போராடுவதற்காக ஒரு இயக்கத்தை உருவாக்க தொழிற்சங்கத் தலைவர்களுக்கு என்எஸ்எஸ்என் (NSSN) எவ்வாறு அழுத்தம் கொடுக்க முடியும் என்பது பற்றியும் இக்கலந்துரையாடல் அமைந்தது.
இக் கலந்துரையாடலை என்எஸ்எஸ்என் (NSSN) உறுப்பினர் மற்றும் தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினருமான லாவண்யா ராமஜெயம் (Lawanya Ramajeyam) தலைமை தாங்கினார். அவர் ஆசிய, ஆபிரிக்க தொழிலாளர்கள் இத்தொற்றுநோயால் விகிதாசாரமாக பாதிக்கப்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, இந்த சுரண்டல் அமைப்பினுள் நிலவும் உள்ளார்ந்த ஏற்றத்தாழ்வு என்றும் இத்தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணம் இல்லாது முக்கிய தொழிலாளர்களாக முன் வரிசையில் இருந்துள்ளனர். மற்றும் வறுமை, குறைந்த ஊதியம், நெரிசலான தங்குமிடங்களில் வாழ்வது போன்ற காரணிகளால் இத்தொழிளாலர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என ஆரம்பித்தார்.
பேச்சாளர்கள் யுனிசன் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹூகோ (Hugo Pierre), மோ (Moe Muhsin Manir) பஸ் டிரைவர், யுனைட் ஆர்வலர் மற்றும் தமிழ் சொலிடாரிட்டி சர்வதேச ஒருங்கிணைப்பாளர் சேனன் (TU Senan) ஆகியோர் உரையாடினார்கள்.
பணியிடங்களில் நிறுவனமயப்படுத்தப்பட்ட இனதுவேசத்தை பற்றி Hugo குறிப்பிட்டிருந்தார். அங்கு ஆசிய, ஆபிரிக்க தொழிலாளர்களுக்கு சராசரியாக குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது மற்றும் பதவி உயர்வு வழங்கப்படுவது குறைவு என்றும் கூறினார். 2018 மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தொழிற்சங்க காங்கிரஸ் தீர்மானத்தையும் – அதை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் குறிப்பிட்டார்.
தொழிலாளர்கள் தங்கள் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்க எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டார்கள் என்பது பற்றி Moe கூறினார். “நாங்கள் தொழிலாளர்கள், நாங்கள் சேவைகளை வழங்குகிறோம், நாங்களே முடிவுகளை எடுக்க வேண்டும்.” என்றும் கூறினார்.
பிளாக் லைவ்ஸ் மேட்டர் (Black Lives Matter) இப்போது ஏன் நடக்கிறது என்று சேனன் விளக்கினார். தொற்றுநோயால் வெளிப்படும் முதலாளித்துவத்தின் மோசமான நடவடிக்கைகளை இளைஞர்கள் கண்டிருக்கிறார்கள். அவர்கள் அதை சமாளிக்கப் போவதில்லை. இனவாதம் மற்றும் வர்க்க சமத்துவமின்மைக்கு எதிராக போராட பாராளுமன்றத்தில் தொழிலாளர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் தேவை என்பதையும் அவர் கூறினார்.
தனிப்பட்ட பங்களிப்புகள் மற்றும் கேள்விகள் என இக்கலந்துரையாடல் இருந்தது.
அனைத்து தொழிலாளர்களும் ஒரு தொழிற்சங்கத்தில் சேர மற்றும் செய்பட வேண்டும். தொழிற்சங்கங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு வேலைகள், வீடுகள் மற்றும் சேவைகளுக்காக ஒரு மணி நேரத்திற்கு £15 குறைந்தபட்ச ஊதியத்திற்கு போராட அவர்களின் தலைமைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றும் கலந்துரையாடல் அமைந்தது.