உக்கிரேன்- இரசியா போர் , தாக்குதல்களை உடனடியாக நிறுத்து

அனைத்து தாக்குதல்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து இரஷ்யப் படையினர் உடனடியாக வெளியேற வேண்டும். மேற்குலக அரசுகள் – (மற்றும் நேட்டோ) ஆயுதக் குவிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும். நேட்டோ விரிவாக்கல் நிறுத்தப்படவேண்டும். யுத்தத்துக்கோ – நேட்டோவுக்கோ ஒரு சத்தமும் வழங்கப் படக்கூடாது.

அனைத்து சிறுபான்மையினரதும் தேசிய உரிமைகள் உட்பட அனைத்து சனநாயக உரிமைகளும் வழங்கப்படவேண்டும். ரஷிய -உக்ரேனிய – நேட்டோ ஆக்கிரமிப்பு இன்றி சிறுபான்மை தேசிய இனங்கள் தமது அரசியல் எதிர்காலத்தை சுயாதீனமாகத் தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும். ஏனைய சிறுபான்மையினரின் உரிமைகளை முளுமையகாக வழங்கிய அடிப்படையில் தேசியக் கோரிக்கை முன்வைக்கும் கிரிமியா லஹின்ச்க் (Luhansk) டானியச்க் (Donetsk) ஆகிய பகுதிகளின் பிரிந்து போகும் உரிமை உட்பட்ட சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும்.

யுத்தத்துக்கு எதிரான நிலைபாட்டை – ரஷ்ய/ உக்ரேனிய தொழிற்சங்கங்கள் மற்றும் போராட்டச் சக்திகள் முன்னெடுக்க வேண்டும்.

அந்த அடிபடையில் ஒன்றுபட்ட எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டி எழுப்ப வேண்டும். யுத்தத்துக்கு பூட்டின் அதரவு கோருவதை மறுக்க வேண்டும். ‘உக்ரேனை காப்பாற்றுதல்’ என்ற பெயரில் பைடன், போரிஸ் ஆகியோருக்கான அதரவு வழங்குவதை மறுக்கவேண்டும். இந்த அரசுகள் அனைத்துமே யுத்த வெறி அரசுகள். சிரியா, பாலஸ்த்தீனம் முதற்கொண்டு உலகெங்கும் அப்பாவி மக்களின் அழிவுக்கு காரணமாக இருக்கும் அரசுகள் இவை.

உக்ரேனிய வளங்களை அந்த மக்களின் கட்டுப் பாட்டில் கொண்டுவரப்பட வேண்டும். நேட்டோவோ, ரஷ்யாவோ அந்த வளங்களைக் கட்டுப்படுத்துவதை அனுமதிக்காது – அல்லது இவர்களில் ஒரு பகுதியினரின் நலன் சார்ந்து இயங்கும் ஒறு உக்ரேனிய அரசு கட்டுப்படுத்துவதற்கு பதிலாக – அந்த உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர் தாம் அந்த வளங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான சுயாதீன இயக்கம் தொழிலாளர் இயக்கம் கட்டப் படவேண்டும்.

தமிழ் சொலிடாரிட்டி