இலங்கையில் இராணுவ அடக்குமுறை – முக்கிய கட்டத்தில் எதிர்ப்பு இயக்கம் -சொலிடாரிட்டி போராட்டத்திற்கு அழைப்பு

நேற்றிரவு மற்றும் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கொழும்பில் உள்ள போராட்டப் பகுதிகளுக்கு பெருமளவிலான  இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர், அவர்கள் போராட்டப் பகுதியில் வன்முறையை பிரயோகித்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். இதற்கு முன் மாணவர் போராட்ட தலைவர்களுக்கு  பிடியானை வழங்கப்பட்டிருந்தது. தற்போது பலர் கைது செய்யப்பட்டிருகிறார்கள். புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தான் பதவி ஏற்ற கையேடு இராணுவத்துக்கு நன்றி சொல்லி அவர்கள் “பொது ஒழுங்கை பேணுவதற்கு” புதிய அதிகாரங்களை வழங்கி உள்ளார். புதிய ஜனாதிபதி ஆணை ஒட்டுமொத்த நாட்டையும் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது. யாழ் மாவட்டம் உட்பட இலங்கையின் அனைத்து 25 மாவட்டங்களும் ஆயுதப்படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ஜனாதிபதி உத்தரவில் பட்டியலிடப்பட்டுள்ளன. பதவி நீக்கம் செய்யப்பட்ட கோட்டாபயவின் ஜனாதிபதி பதவியில் இருந்த அதே அமைச்சரவை மீண்டும் பதவியேற்றதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக பதவி விலக வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கை தற்போது மேலும் வலுப்படுள்ளது.

 

இராணுவக் கட்டுப்பாடு தற்காலிகமாக எதிர்ப்பு இயக்கத்தை பின்னுக்குத் தள்ளலாம். ஆனால் வெகுஜனங்களிடையே கோபமும் வெறுப்பும் இந்த அதிகார வர்க்கதின்  மீது அதிகரித்து வருவதால், அடக்குமுறை நடவடிக்கை எதிர்ப்புகளை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும்.

 

 

இலங்கையின் முக்கிய இடதுசாரி கட்சியான ஐக்கிய சோசலிச கட்சியானது  பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது.

 

# இராணுவத்தினராலும் அரச படைகளாலும் கைது செய்யப்பட்ட அனைத்து போராட்டக்காரர்களையும் உடனடியாக விடுதலை செய்!

 

#போராட்டக்காரர்கள் மீதான இராணுவத் தாக்குதலுக்கு, அனைவரும் உடனடியாக தமது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

 

# இலங்கையிலுள்ள அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் உடனடியாக பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும்.

 

# அரசு நிர்வாகத்தில் உள்ள தொழிலாளர்கள் சர்வாதிகார ரணில் ஆட்சிக்கு ஒத்துழைக்க மறுக்க வேண்டும்.

 

# ராஜபக்ச குடும்பத்தின் அனைத்து கொடூரமான குற்றங்களிலும் நெருங்கிய கூட்டாளிகளாக இருந்த கிரிமினல் இராணுவ அதிகாரி வர்க்கத்துடன் ஒத்துழைக்க மறுக்கவேண்டும் என சாதாரன சிப்பாய்களை கோருகிறோம்.

 

 

இந்த அடக்குமுறையை எதிர்த்து தமிழ் சொலிடாரிட்டி நாளை சனிக்கிழமை ஒரு போராட்டத்தை ஒழுங்கு செய்துள்ளது. யூலை 83 படுகொலை நினவு போராட்டத்தை இணைத்து – தற்போது நடக்கும் இராணுவ தாக்குதல்களையும் எதிர்த்து இந்த போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. அனைவரும் கலந்துகொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.