
நீண்டகால வெகுஜன எதிர்ப்பு இயக்கமான அரகலய (போராட்டம்) வின் அழுத்தம் காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறிய பின்னர், நாட்டை விட்டு துரத்தப்பட்ட பின்னர் ஜூலை 21 அன்று, ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்ததும் இந்த மக்கள் எதிர்ப்பு இயக்கத்தை ஒடுக்கவும் நசுக்கவும் தொடர்ந்து முயற்சித்து வந்ததால், இந்த அடக்குமுறை ஆட்சியானது அடுத்த கட்ட வெகுஜன எதிர்ப்பை வளர்த்துக்கொள்ளும் என்று அஞ்சுகிறது. இந்த அடக்குமுறை கடந்த ஜூலை 22ஆம் தேதி ‘கோதா கோ கம’ போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுடன் ஆரம்பித்து தற்போது வரை தொடர்கிறது.
அதன்பின்னர் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பல்வேறு போராட்டங்கள் மற்றும் பல குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் கொடூரமான பயங்கரவாத தடுப்புச் சட்டம், PTA இன் கீழ் கைது செய்யப்பட்டனர். இது மக்களின் ஜனநாயக உரிமைகளை அப்பட்டமாக மீறும் செயலாகும்.
கடந்த ஒன்றரை மாதங்களாக ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்ட அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆர்ப்பாட்டம் செய்வதற்கான ஜனநாயக உரிமையை கோரி பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. அந்த போராட்டங்களில் பெரும்பாலானவை அரசாங்கத்தால் கொடூரமாக நசுக்கப்பட்டன மற்றும் அவற்றில் கலந்து கொண்ட ஏராளமான மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செப்டெம்பர் 24 சனிக்கிழமையன்று, இலங்கையில் சோசலிச மாணவர் சங்கம் அழைப்பு விடுத்திருந்த கொழும்பில் நடந்த எதிர்ப்பு ஊர்வலத்தின் மீது காவல்துறை மிருகத்தனமான தாக்குதலை நடத்தியது. போராட்டம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது, அமைதியான போராட்டம் என்பது தெளிவாகிறது. “சட்டவிரோத” அணிவகுப்பு என்று அவர்கள் அழைத்ததைக் கலைக்க காவல்துறை மிருகத்தனமான பலத்தைப் பயன்படுத்தி தலையிட்டது. இந்த தாக்குதலில் ஐந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்தனர் மற்றும் 17 வயது சிறுமி உட்பட 84 பேர் கைது செய்யப்பட்டனர். கருத்துச் சுதந்திரம் மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை ஆகியவை அடிப்படை ஜனநாயக உரிமைகள்.
அதே நேரம் வடக்கு பகுதியில் குருத்துர் மலையில் சட்ட விரோதமாக அரச ஆதரவுடன் புத்த விகாரை அமைக்கும் முயற்சியை அமைதியாக எதிர்த்த போராட்டக்காரர்கள் மீது பயங்கரவாத தடை சட்டத்தை இந்த இலங்கை அரசு பிரயோகித்துள்ளது.
எனவே நாங்கள் கோருகிறோம்:
- இலங்கை அரசாங்கம் அமைதியான போராட்டங்களை ஒடுக்குவதை நிறுத்து மற்றும் எதிர்ப்பு உரிமை உட்பட அடிப்படை ஜனநாயக சுதந்திரங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் .
- கடுமையான அடக்குமுறை சட்டமான PTA ஐ ஒழித்தல்
- வசந்த முதலிகே, ஹசந்த ஜீவந்த மற்றும் கல்வெவ சிறிதம்மா உட்பட தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து செயற்பாட்டாளர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
இலங்கை அரசுக்கும், உலகெங்கிலும் உள்ள இலங்கை தூதரகங்களுக்கும், உயர்ஸ்தானிகராலயங்களுக்கும் எதிர்ப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த அரசாங்கத்தால் திணிக்கப்படும் சிக்கன நடவடிக்கைகளை அவர்கள் எதிர்ப்பதால், ஒடுக்குமுறைக்கு ஆளானவர்களுக்கு எமது ஆதரவை காட்ட, சாத்தியமான இடங்களில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
84 individuals arrested by Sri Lanka Police for taking part in the protest organized by the Socialist Youth Union against suppression pic.twitter.com/WySq4cfWpz
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) September 24, 2022