மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – லண்டன், ஜனவரி 3, 2026
தாயகத்தில் தொடர்ச்சியாக தமிழர் பிரதேசங்களில் இலங்கை அரசின் இனவாத தொல்பொருள் திணைக்களத்தின் அடாத்தான அதிகாரத்தோடு தமிழ் பேசும் மக்களின் மீது தொடர்ச்சியான கட்டமைக்கப்பட்ட கலாச்சார ஆக்கிரமிப்பு நடைபெற்றுக் கொண்டே வருகின்றது.
யாழ்ப்பாணத்ததில் தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை அரச ஆதரவோடு அடாத்தாக பிடித்து கட்டப்பட்ட விகாரை அகற்றப்பட வேண்டும் என்றும் ,அந்த காணிகள் காணி உரிமையாளர்களுக்கு மீள் வழங்கப்பட வேண்டும்.
ஈழத்தில் நடைபெறும் தமிழர்களுக்கு எதிரான அரசியல் அடக்குமுறைகள், கருத்து சுதந்திரம் மீதான தாக்குதல்கள் மற்றும் தமிழ் செயற்பாட்டாளர்களின் கைது நடவடிக்கைகளுக்கு எதிராக, ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று லண்டனில் நடைபெற உள்ளது.
தாயகத்தில் இனப்படுகொலைக்கு உள்ளான தமிழர்களுக்காக நீதியும் பொறுப்பேற்பும் கோரிய போராட்டங்களில் ஈடுபட்ட காரணத்தால், கடந்த டிசம்பர் 21 அன்று யாழ்ப்பாணத்தில் ஐந்து தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் அரசியல் நடவடிக்கைகள், அமைதியான போராட்ட உரிமையை அடக்க முயலும் ஆபத்தான முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
இந்த கைது நடவடிக்கைகளையும், தமிழ் மக்களின் அரசியல் குரலை மவுனப்படுத்தும் முயற்சிகளையும் வன்மையாகக் கண்டித்து,
2026 ஜனவரி 3 (சனிக்கிழமை) அன்று,
மாலை 2 மணி முதல் 4 மணி வரை,
No.10, டவுனிங் ஸ்ட்ரீட், லண்டன் (SW1A 2AA) முன்பாக
இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த போராட்டம்,
- தனியார் காணியில் சட்ட விரோதமாக கட்டப்பட்டிருக்கும் விகாரை அகற்றப்பட்டு அந்த காணிகள் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
- ஜனநாயக ரீதியில் போராடும் தமிழ் இளைஞர்களை கைது செய்வதை கண்டிக்கின்றோம்.
- கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான போராட்ட உரிமையின் பாதுகாப்பு.
- தமிழர்களுக்கு எதிரான அரசியல் ஒடுக்குமுறைகளை நிறுத்துதல்.
என்பவற்றை வலியுறுத்துகிறது.
இங்கிலாந்து முழுவதும் வாழும் தமிழ் மக்கள், ஜனநாயக சக்திகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகங்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஒற்றுமையுடன் குரல் கொடுக்க அழைக்கப்படுகிறார்கள்.
“எமக்கான உரிமைக்க்காக ஒன்றாக போராடுவோம்”
என்ற முழக்கத்துடன், இந்த போராட்டம் நடைபெறும்.
தொடர்பு:
07577 996966
07722 046025
07837 539265
