இலண்டனில் இனத்துவேசத்திற்கு எதிராகவும் அகதிகளின் உரிமைகளுக்காகவும் அணிவகுப்பு.

18.03.2017 சனிக்கிழமை, ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச இனத்துவேசத்திற்கு எதிரான நாளாகும்.

அன்றைய தினம் இலண்டனில் இனத்துவேசத்திற்கு எதிராகவும் அகதிகளின் உரிமைகளுக்காகவும் அணிவகுப்பு ஒன்று இடம்பெற்றது, (BBC) Portland Place,London W1A 1AA என்னும் இடத்தில காலை 11.00 ஆரம்பமான இந்தப் பேரணி இலண்டனின் பலமுக்கிய பகுதிகளினுடாக சென்று பிரித்தானியாவில் பாராளுமன்ற சதுக்கத்தில் நிறைவுபெற்றது.

இந்த அணிவகுப்பை பல அமைப்புக்கள், பல யூனியன்கள் இணைந்து ஏற்பாடு செய்தன இவர்களுடன் இணைந்து அகதிகளுக்கான உரிமைகள் அமைப்பும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டது.

பிரித்தானியாவின் போராட்டங்களில் தமிழ் பேசும் மக்களும் இணைந்து கொண்ட தினமாக நேற்றைய தினம் அமைந்திருந்தது. நாங்கள் அகதிகள், அகதிகளின் உரிமைகளுக்கா போராடுகிறோம் என்பதை பல்லின மக்களுக்கு தெரியப்படுதியதன் மூலம் அவர்களது முழு ஆதரவை திரட்டக்கூடியதாக இருந்தது.

 

பல யூனியன்கள் இதில் பங்குபற்றினார்கள். அவர்களும் எமது பிரச்சினைகளை கேட்டறிந்ததுடன் எமக்கு முழு ஆதரவை தந்திருந்தனர்.

அகதிகளுக்கான உரிமைகள் அமைப்பு இந்த போராட்டத்தில் முன்வைத்த கோரிக்கைகளாவன.

1) அகதிகளை நாடுகடத்துவதை நிறுத்து!

2) அகதிகளுக்கு வேலைசெய்யும் உரிமையை வழங்கு.

3) பிரித்தானியாவின் அனைவருக்கும் ஊதியமாக மணிக்கு £10 வழங்கு.

4)அனைவருக்கும் இலவச மருத்துவ சேவையை வழங்கு, மருத்துவ சேவையை தனியார் மயப்படுத்தாதே! அகதிகள் மருத்துவ சேவைக்கு பணம் கோருவதை நிறுத்து.

5) பிரித்தானியாவில் உள்ள அனைத்து தடுப்புமுகாம்களை மூடு.

மேற்பட்ட கோரிக்கைகளுடன் பல தமிழர்கள் துவேசத்துக்கு எதிரான நாளில் போராட்டத்தில் இறங்கிஇருந்தனர். அமெரிக்க சனாதிபதி அகதிகளுக்கு எதிரான துவேச பிரசாரம் செய்து வருவது உலகெங்கும் பல மக்களுக்கு அதிருப்தியை ஏற்ற்படுதி உள்ளது. அதே போல் இங்கிலாந்து அரசும் அகதிகளுக்கு எதிரான சட்ட திட்டங்களை அமுல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அகதிகளும் மனிதரே என அணைத்து அகதிகள் மற்றும் ஒடுக்கப்படும் மக்களின் போராட்டத்தோடு தமிழ் பேசும் மக்களும் இணைந்து கொண்டது முக்கிய நிகழ்வாகும்.