௧௭ வயதான ரெகார் அகமத் ௩௧ மார்ச் மாதம் குரய்டனில் துவேசிகளால் கட்டுமையாக தாக்கப்பட்டார். இந்த தாக்குதல் இங்கிலாந்து எங்கும் பரந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு அகதியை கடுமையாக மயங்கும் வரை தாக்கி விட்டுச் சென்ற நடைமுறை இங்கிலாந்தில் வளர்ந்து வரும் துவேசத்தின் அறிகுறியாகப் பேசப்பட்டு வருகிறது.
அகதிகளுக்கெதிரான இந்த தாக்குதலைக் கண்டித்து ௮ ஏப்ரல் மாதம் சொலிடாரிட்டி ஊர்வலம் ஓன்று குரோய்டனில் நடத்தப்பட்டது. அகதிகள் தாக்குவதை கண்டித்தும் தற்போதைய அரசின் அகதிகள் சார் கடுமையான நடவடிக்கைகளைக் கண்டித்தும் இந்த ஊர்வலம் நடந்தது. அகதிகள் உரிமைகளுக்கான போராட்டத்தை முன்னெடுத்து வரும் அகதிகள் உரமைகள் அமைப்பும் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டது.
அகதிகள் தாக்கப் படுவதற்கு எதிராக தமிழ் பேசும் மக்கள் தமது எதிர்ப்பையும் பதிய வேண்டும் என்றும் – அகதிகள் உரிமைகள் மறுக்கப்படுவதற்கு எதிராக தமிழ் மக்கள் திரள வேண்டும் என்றும் ஒருன்கினைப்பாளர்கள் கேட்டுக் கொண்டனர்.
[robo-gallery id=”1381″]